பேச்சு:பூக்கும் தாவரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூக்கும் தாவரம் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தலைப்பு[தொகு]

பூக்கும் தாவரம் என்பது தவறு. இது பெரும்தலைப்பு. இதன் கீழ் ஏறத்தாழ 3இலட்சம்தாவரங்கள் இருக்கின்றன. எனவே, பூக்கும் தாவரங்கள் என்று தலைப்பிடுதலே சிறப்பு.06:22, 21 சூன் 2011 (UTC) உழவன்+உரை..

வணக்கம் த.உழவன். விக்கியில் தலைப்பை ஒருமையில் பேணும் மரபையே கடைப்பிடிக்கிறோம். தவிர கட்டுரை பூக்கும் தாவரம் பற்றியதே. பூக்கும் தாவரங்களில் பட்டியல் என அமையும் போது பன்மை கொண்ட தலைப்புகளை பயன்படுத்துவதே சரி. ஆனால் இங்கு இத்தலைப்பே பொருந்தும். --சஞ்சீவி சிவகுமார் 06:49, 21 சூன் 2011 (UTC)[பதிலளி]

ஆம். வழமைதான். எனினும்,விதிவிலக்குக்கு, மறுஆய்வு தேவை. ஆங்கிலத்தலைப்பை ஒட்டி மொழிபெயர்த்தல், சிறப்பாக இருக்காதென்றே எண்ணுகிறேன். மூலத்திலிருந்து மொழிபெயர்த்தலே சிறப்பு.

The botanical term "Angiosperm", from the Ancient Greek αγγείον, angeíon (receptacle, vessel) and σπέρμα, (seed), was coined in the form Angiospermae by Paul Hermann in 1690, as the name of that one of his primary divisions of the plant kingdom. This included flowering plants possessing seeds enclosed in capsules, distinguished from his Gymnospermae, or flowering plants

நாம் வகைப்பாட்டியலில் ஆங்கிலச் சொல்லை மொழிபெயர்ப்பது தவறு. தாவரவியல் அறிஞர் அன்று, வகைப்பாட்டியலுக்கு ஆங்கிலத்தைப் பயன்படுத்தவில்லை.Angiospermae என்பதனையே மொழிபெயர்க்கிறோம்.மற்றொன்று, தலைப்பைப் பார்த்த உடனே, அதில் பல கட்டுரைகள் உள்ளன என்பதனை அறியக் கூடிய வகையில் இருந்தால், படிப்பவரின் ஆர்வம் தூண்டப்படும். மேலும், பல கட்டுரைகளைத் தொடர்ந்து காணும் வாய்ப்புண்டு. இதே போன்றதொரு, மற்றொரு உரையாடற்பகுதி 07:40, 21 சூன் 2011 (UTC)உழவன்+உரை..

த.உழவன். உங்கள் வாதமும் ஒதுக்கமுடியாததே! வகைப்பாடு, குழுமம், கூட்டம் (எ.கா:நாயன்மார்கள்) என்பவற்றுக்கான தலைப்புகளை ஒருமையாக பேணுவதா அல்லது பன்மையாக்குவதா என்பது பற்றிய விரிவான கருத்தாடல் தேவை. பயனர்கள் தம் கருத்துகளை தயை கூர்ந்து பதியவும்.--சஞ்சீவி சிவகுமார் 04:18, 22 சூன் 2011 (UTC)[பதிலளி]

செய்ய வேண்டியன[தொகு]

  • இங்குள்ள குடும்பப்பெயர்கள் அடங்கிய தகவற்பெட்டி, ஊடகங்களுக்குரியது. வெளிர்பச்சை நிறத்துடனான, உயிரியல் குறிப்புகளை அடைக்க வல்ல, ஒரு அடைவுப்பெட்டி உருவாக்கப்பட வேண்டும்.--≈ உழவன் ( கூறுக ) 13:59, 3 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பூக்கும்_தாவரம்&oldid=1473424" இலிருந்து மீள்விக்கப்பட்டது