மணிவாழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணிவாழை
Yellow canna lily flower.jpg
மஞ்சள் நிற மணிவாழை
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: மக்னோலியோபைட்டா
வகுப்பு: லிலியோப்சிடா
வரிசை: ஸிங்கிபெரேல்ஸ்
குடும்பம்: கன்னாசியே
பேரினம்: கன்னா

மணிவாழை அல்லது கல்வாழை எனத் தமிழில் அழைக்கப்படும் (canna lily) கன்னா வாழை இனத்தில் 10 வகையான பூக்கும் தாவரங்கள் உள்ளன.[1] கன்னா, கன்னாசியே தாவரக் குடும்பத்திலுள்ள ஒரே சாதியாகும். மணிவாழைகளுக்கு நெருக்கமான வேறு தாவரங்கள், ஸிங்கிபெரேல்ஸ் வரிசையைச் சேர்ந்த இஞ்சிகள், வாழைகள், மராந்தாக்கள், ஹெலிகோனியாக்கள், ஸ்ட்ரெலிட்சியாக்கள் என்பனவாகும்.

இந்த வகைச் செடிகள் பெரிய கவர்ச்சியான இலைகளைக் கொண்டன. தோட்டக் கலைஞர்கள் பிரகாசமான நிறங்களுடன் கூடிய இவற்றை அலங்காரத் தாவரமாகப் பயன்படுத்துகிறார்கள். அத்துடன் இவை உலகின் முக்கியமான மாப்பொருள் மூலமாகவுள்ள வேளாண்மைப் பயிரும் ஆகும்.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிவாழை&oldid=3597294" இருந்து மீள்விக்கப்பட்டது