இஞ்சி
Jump to navigation
Jump to search
Zingiber officinale இஞ்சி | |
---|---|
![]() | |
Secure
| |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
பிரிவு: | பூக்குந்தாவரம் |
வகுப்பு: | Liliopsida |
வரிசை: | இஞ்சிவரிசை |
குடும்பம்: | இஞ்சிக் குடும்பம் |
பேரினம்: | Zingiber |
இனம்: | Z. officinale |
இருசொற் பெயரீடு | |
Zingiber officinale ரொசுக்கோ[1] |
இஞ்சி (ஒலிப்பு (உதவி·தகவல்)) (Zingiber officinale) உணவின் ருசி கருதி இந்திய, சீன உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்குப் பொருள் ஆகும். இது ஒரு மருத்துவ மூலிகையும் ஆகும். இது ஓராண்டுப் பயிராகும்.
பெயர் தோற்றம்[தொகு]
இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றிற்று.[2]
பழம்பாடல்[தொகு]
“ |
|
” |
உபயோக முறைகள்[தொகு]
இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று.
- இஞ்சித்துவையல்
- இஞ்சிக்குழம்பு
- இஞ்சிப்பச்சடி
- இஞ்சிக்கஷாயம்
சுக்கு[தொகு]
உலர்ந்த இஞ்சியே 'சுக்கு' (இலங்கையின் சில பகுதிகளில்: வேர்க் கொம்பு) என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை "சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" என்ற பழமொழியின் மூலம் அறியலாம். சுக்குக் கசாயம் மிக நல்ல வலி நீக்கும் மருந்தாகும்.