சேம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேம்பு
Taimo Okinawa.jpg
சேம்பு
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
வரிசை: Alismatales
குடும்பம்: Araceae
துணைக்குடும்பம்: Aroideae
சிற்றினம்: Colocasieae
பேரினம்: Colocasia
Schott
Colocasia distribution.svg
Range of the genus Colocasia.
வேறு பெயர்கள் [1][2]

சேப்பங் கிழங்கு Schott

சேப்பங் கிழங்கின் தோற்றம்

சேம்பு (அ) சேப்பங் கிழங்கு (Colocasia esculenta)[3][4] என்பது ஒரு பூக்கும் தாவர வகையைச் சேர்ந்த ஒரு வித்திலைத் தாவரமாகும். இத்தாவரத்தின் குடும்பப் பெயர் அரேசியா (Araceae) என்பதாகும். தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்திய துணை கண்டத்தைப்[1][5] பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் உலகளவில் வெப்பமண்டலம் மற்றும் துணை வெப்பமண்டல பகுதியிலும் பயிரிடப்படுகிறது. இது ஒரு மூலிகைத்தாவரம் என்பதாலும், இதன் கிழங்கு உணவாகப் பயன்படுவதாலும் ஆசியப் பகுதியில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பயிரிடப்பட்டுவருகிறது.

உணவு[தொகு]

இதன் கிழங்குகளும் இலைகளும் உண்பதற்கு ஏற்றவை. இவற்றில் கால்சியம் ஆக்ஸலேட் என்ற அரிக்கும் தன்மையுடைய வேதிப்பொருள் இருப்பதால், வேகவைத்தே உண்ண வேண்டும். இதன் வளர்ச்சி குட்டையாக இருந்தாலும், நிலத்தில் இதன் வேரில் கிழங்கு உண்டாகிறது. இக்கிழங்கு மூலிகையாகப் பயன்படுகிறது. இதன் இலைகளில் உயிர்ச்சத்துக்களும், தாது உப்புக்களும் உள்ளன. இது அலங்காரச் செடியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

தாயகம்[தொகு]

சேப்பங்கிழங்கு,கொலகேசியா எஸ்குலெண்டா, டாரோ, எடோ, மலங்கா என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. சேம்பு மலேசியாவின் சதுப்பு நிலங்களை தாயகமாகக் கொண்டது. இந்தியா, எகிப்து, ரோம், கிரேக்க நாடுகளுக்கு பின்னர் பரவியது. கொலகேசியா எஸ்குலெண்டா ரகம் அக்வேடிலிஸ் ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்டது. இதன் இலைகள் 40x24.8 செ.மீ.அளவுடையது. முக்கோண முட்டை வடிவம் உடையது. இலையின் மேற்பரப்பு கரும்பச்சை நிறமாகவும், கீழ்ப்பகுதி இளம்பச்சை நிறமாகவும் இருக்கும். பாளை 25 செ.மீ. நீளமுடையது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Kew World Checklist of Selected Plant Families
  2. GRIN (October 5, 2007). "Colocasia Schott". Taxonomy for Plants. National Germplasm Resources Laboratory, Beltsville, Maryland: USDA, ARS, National Genetic Resources Program. அக்டோபர் 7, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. July 13, 2010 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Query Results for Genus Colocasia". IPNI. February 13, 2010 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Name – Colocasia Schott subordinate taxa". Tropicos. செயின்ட் லூயிஸ் (மிசூரி): Missouri Botanical Garden. February 13, 2010 அன்று பார்க்கப்பட்டது.
  5. Wagner, W. L., D. R. Herbst, and S. H. Sohmer (1999). Manual of the Flowering Plants of Hawai‘i. Revised edition. Vol. 2. University of Hawaiʻi Press/Bishop Museum Press. பக். 1357. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேம்பு&oldid=3555994" இருந்து மீள்விக்கப்பட்டது