பச்சையம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பச்சையம் (Chlorophyll - கிரேக்க சொல் மூலம்: chloros = பச்சை, phyllon = இலை) என்பது தாவரங்கள், பாசி வகைகள், சிலவகை பாக்டீரியாக்கள் ஆகியவற்றிலுள்ள ஒரு பச்சை வர்ண ஒளிச்சேர்க்கை நிறமி ஆகும். ஒளிச்சேர்க்கையின் முதல்படியாக பச்சையத்தின்மீது ஒளி விழுகிறது. இதன் மூலம் அது அயனாக்கம் (ionise) ஆகிறது. இதில் விளையும் வேதியியல் ஆற்றலை ஏ.டி.பி மூலக்கூறுகள் (molecules) உள்வாங்கி, பின்னர் அதைப்பயன்படுத்தி கரியமில வாயுவையும் நீரையும் காபோவைதரேட்டு மற்றும் ஒட்சிசனாக வேதிமாற்றம் செய்கின்றன. மின்காந்த அலை நிறமாலையின் (spectrum) சிவப்பு மற்றும் நீல நிறக்கதிர்களை அதிகம் உள்வாங்குவதால் பச்சையம் பச்சை வண்ணம் கொண்டுள்ளது.
அணு அமைப்பு
[தொகு]பச்சையம் ஒரு குளோரின் நிறமியாகும். அது ஹீம் போன்ற போர்ஃபிரின் நிறமிகளை ஒத்த அணு அமைப்பைக் கொண்டுள்ளது. குளோரின் வளையத்தின் மத்தியில் ஒரு மெக்னீசியம் அயன் (ion) உள்ளது. பலவகை பக்கச் சங்கிலிகள் இருந்தாலும், பொதுவாக ஒரு நீண்ட ஃபைடில் (phytyl) சங்கிலி இருக்கும். இயற்கையில் இது பல வடிவங்களில் அமைந்துள்ளது:
பச்சையம் a | பச்சையம் b | பச்சையம் c1 | பச்சையம் c2 | பச்சையம் d | |
---|---|---|---|---|---|
மூலக்கூறு வேதியியல் வாய்ப்பாடு | C55H72O5N4Mg | C55H70O6N4Mg | C35H30O5N4Mg | C35H28O5N4Mg | C54H70O6N4Mg |
C3 குழு | -CH=CH2 | -CH=CH2 | -CH=CH2 | -CH=CH2 | -CHO |
C7 குழு | -CH3 | -CHO | -CH3t | -CH3 | -CH3 |
C8 குழு | -CH2CH3 | -CH2CH3 | -CH2CH3 | -CH=CH2 | -CH2CH3 |
C17 குழு | -CH2CH2COO-Phytyl | -CH2CH2COO-Phytyl | -CH=CHCOOH | -CH=CHCOOH | -CH2CH2COO-Phytyl |
C17-C18 பிணைப்பு | ஒற்றை | ஒற்றை | இரட்டை | இரட்டை | ஒற்றை |
காணப்படுவது | எங்கும் | பொதுவாக நிலச் செடிகளில் மட்டும் | பல்வேறு பாசிகளில் | பல்வேறு பாசிகளில் | சில சிவப்புப் பாசிகளில் |
இன்றியமையாமை
[தொகு]பச்சையும் வெண்மையும் கொண்ட இலை ஒன்றிலிருந்து மாவுச் சத்தை நீக்கிவிட்டு அந்த இலையை சிறிது நேரம் வெயிலில் வைத்திருக்க வேண்டும். அதன்பின் அயோடின் கரைசல் கொண்டு ஆய்வு செய்தால் மாவுச் சத்து பச்சையான இடங்களில் மட்டுமே இருப்பதைக் காணலாம். இதன்மூலம் ஒளிச்சேர்க்கைக்கு பச்சையம் இன்றியமையாதது என அறியலாம்.