சிவப்புப் பாசி
Appearance
சிவப்புப் பாசி புதைப்படிவ காலம்:Mesoproterozoic–present | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | மெய்க்கருவுயிரி (யூக்கரியோட்டா)
|
தரப்படுத்தப்படாத: | புரொட்டிஸ்டா
|
பிரிவு: | Rhodophyta (சிவப்பு அல்கா) |
சிவப்புப் பாசி (red algae) என்பது அல்கா வகைகளில் ஒன்றாகும். இது ரோடோபைட்டா பிரிவுக்குரிய (Division rhodophyta) அல்கா அங்கத்தவர்களை உள்ளடக்கியது. சிவப்பு அல்காக்கள் ஏனைய அல்காக்கள் போலவே ஒளித்தற்போசணிகளாகும்.[1] இவை மெய்க்கருவுயிரி கல ஒழுங்கமைப்பைக் காட்டுகின்றன. சிவப்பு அல்காக்களின் 5000-6000 வரையான இனங்கள் அறியப்பட்டுள்ளன. இயல்புகள்:
- இவற்றின் கலச்சுவர் செல்லுலோசு மற்றும் ஏகாரால் ஆனது.
- அனைத்தும் பல்கல அங்கிகள்.
- பொதுவாக கடல் வாழ்க்கைக்குரியன. சில நன்னீர் வாழ் இனங்களும் அறியப்பட்டுள்ளன.
- இவற்றில் நிறப்பொருட்களாக பச்சையம் a, பச்சையம் d, கரோட்டீன், பைக்கோசயனின், பைக்கோ எரித்திரின் என்பவை உள்ளன. இவற்றிலுள்ள பைக்கோ எரித்திரின் நிறப்பொருளே சிவப்பு அல்காக்களுக்குச் சிவப்பு நிறத்தை வழங்குகின்றது.
- வாழ்க்கை வட்டத்தில் எந்தவொரு நிலையிலும் சவுக்குமுளை இருப்பதில்லை.
- கலங்களில் சேமிப்புணவாக புளோரிடியன் மாப்பொருள் காணப்படும்.
- இவை இலிங்க முறை இனப்பெருக்கத்தைக் காண்பிப்பதுடன் சந்ததிப் பரிவிருத்தியையும் காண்பிக்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lee, R.E. (2008). Phycology, 4th edition. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-63883-8.