மெய்க்கருவுயிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெய்க்கருவுயிரி
புதைப்படிவ காலம்:2.1 billion years ago – Recent (putatively as early as 2.7 billion years ago)
Eukaryota diversity 2.jpg
மெய்க்கருவுயிரிகளும் அவற்றின் உயிர்ப்பல்வகைத் தன்மைக்கான சில உதாரணங்களும்
உயிரியல் வகைப்பாடு
உலகம்: மெய்க்கருவுயிரி
Whittaker & Margulis,1978
Kingdoms
விலங்கு – விலங்குகள்
தாவர இனம் – தாவரங்கள்
Alternative phylogeny

மெய்க்கருவுயிரி (Eukaryote) எனப்படுவது, மென்சவ்வுகளால் சூழப்பட்ட சிக்கலான அமைப்புக்களைக் கொண்ட உயிரணுக்களாலான உயிரினம் ஆகும். இது நிலைக்கருவிலி உயிரினங்களிலிருந்து வேறுபடுவது முக்கியமாக மரபணு அல்லது பாரம்பரியப் பொருளைக் கொண்டிருக்கும் நிலையான கருவையும், அதனை மூடியுள்ள கருமென்சவ்வையும் கொண்டிருப்பதனால் ஆகும்[1][2][3]. அனேகமான மெய்க்கருவுயிரிகள் மென்சவ்வால் மூடப்பட்ட இழைமணிகள், பசுங்கனிகம் அல்லது பச்சைய உருமணிகள், கொல்கி உபகரணங்கள் போன்ற நுண்ணுறுப்புக்களைக் கொண்டிருக்கும். தாவரங்கள், விலங்குகள், பூஞ்சைகள் போன்ற பல்கல உயிரினங்கள் யாவும் பொதுவாக இவ்வகை மெய்க்கருவுயிரிகளேயாகும்.

கலத்தின் கட்டமைப்பு அம்சங்கள்[தொகு]

Endomembrane system diagram en.svg

மெய்க்கருவுயிரி கலமானது நிலைக்கருவிலி கலத்தை விட அளவில் பெரியது. மெய்க்கருவுயிரி கலத்தில் ஓர் கரு (கலத்தின் அனுசேபத் தொழிற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் அலகு) காணப்படும். எனினும் நிலைக்கருவிலி கலத்தில் கரு மென்சவ்வு அற்ற ஓர் போலியான கரு போன்ற DNA திரள் மாத்திரமே காணப்படும்.அத்தோடு மெய்க்கருவுயிரி கலத்தில் மாத்திரமே நுண்ணுறுப்புகள் காணப்படும்.

மெய்க்கருவுயிரி கலங்களுக்கிடையிலான வித்தியாசங்கள்[தொகு]

மெய்க்கருவுயிரி கலங்களை இலகுவான பயன்பாட்டுக்காக தாவரக் கலம், விலங்குக் கலம் எனப் பிரித்து நோக்கலாம்.

விலங்குக் கலம்[தொகு]

ஒரு விலங்குக் கலமொன்றின் கட்டமைப்பு

விலங்குக் கலத்தில் பச்சையவுருமணியோ, கலச்சுவரோ காணப்படுவதில்லை. இதில் சிறிய தற்காலிகமான புன்வெற்றிடங்களே இருக்கும். இதில் கலச்சுவர் இல்லாததால் இதனால் எந்த வடிவத்தையும் அடைய முடியும். உதாரணமாக மனித வெண்குருதிக் கலங்கள் ஏனைய நோயை ஏற்படுத்தும் கலங்களை விழுங்க முடியும். மனித உடலில் மாத்திரம் 210க்கும் மேற்பட்ட கலவகைகள் உள்ளன.

தாவரக் கலம்[தொகு]

ஒரு தாவரக் கலமொன்றின் கட்டமைப்பு

தாவரக் கலங்கள் கரு உள்ள கலங்களாகும். எனவே இவை மெய்க்கருவுயிரி கலங்களாகும். இவற்றில் ஒளித்தொகுப்புக்குத் தேவையான பச்சையம் காணப்படுவது ஒரு சிறப்பம்சமாகும். இவற்றில் விலங்குக் கலங்களில் காணப்படாத பல விசேட அமைப்புக்கள் உள்ளன:

  • கலத்தின் மத்தியில் உள்ள பெரிய புன்வெற்றிடம்.
  • செல்லுலோஸ், அரைசெல்லுலோஸ் மற்றும் பெக்டின் ஆல் அக்கப்பட்ட கலச்சுவர். விலங்குக் கலத்தில் இவ்வாறானதொரு அமைப்பு காணப்படுவதில்லை. பூஞ்சையின் கலச்சுவர் கைடினால் ஆனதென்பதால் தாவரக் கலத்திலிருந்து பூஞ்சையின் கலம் வேறுபடும்.
  • ஒளித்தொகுப்புக்காக விசேடமாக தாவரக் கலத்தில் பச்சையவுருமணி இருக்கும்.

அடிக்குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்க்கருவுயிரி&oldid=3581547" இருந்து மீள்விக்கப்பட்டது