உள்ளடக்கத்துக்குச் செல்

இராபர்ட் ஹார்டிங் விட்டேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராபர்ட் ஹார்டிங் விட்டேகர்
பிறப்பு(1920-12-27)திசம்பர் 27, 1920
விசிடா, கான்சாஸ், ஐக்கிய அமெரிக்க நாடு
இறப்புஅக்டோபர் 20, 1980(1980-10-20) (அகவை 59)
இதாக்கா, நியூ யோர்க், அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தேசியம்அமெரிக்கர்
துறைசூழலியல்
பணியிடங்கள்கோர்னெல் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்இலினொய் பல்கலைக்கழகம் (அர்பானா சாம்பேன்)
அறியப்படுவதுசூழலியலில்கிரேடியன்ட் கோட்பாடு
திணை (உயிரியல்)
விருதுகள்திறன்மிகு சூழலியலாளர் விருது (1981)

இராபர்ட் ஹார்டிங் விட்டேகர் (Robet Harding Whittaker) அமெரிக்காவைச் சேர்ந்த தாவர சூழ்நிலையியல் அறிஞர். இவர் அமெரிக்காவின் கான்சாஸ் பகுதியில் விசிட்டா என்ற இடத்தில் 1920 ஆம் ஆண்டு திசம்பர் 27 ஆம் நாள் பிறந்தார்.

கல்வி[தொகு]

இவர் தனது இளங்கலைப் பட்டத்தினை கன்சாஸில் டோபிக்கா என்னும் இடத்தில் வாஸ்பர்ன் முனிசிபல் கல்லூரியில் (தற்போது வாஸ்பர்ன் பல்கலைக்கழகம்) பயின்றார். அதன் பின்னர் இலினாஸ் பல்கலைக்கழகத்தில் இராணுவத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

பணி[தொகு]

இவர் வாசிங்டன் மாநிலக் கல்லூரியில் தனது கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியினை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து புரோங்களின் கல்லூரி, கலிபோர்னியா பல்கலைக்கழகம், கார்னல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணிபுரிந்தார்.

சாதனை[தொகு]

இவர் 1969 ஆம் ஆண்டு உலகில் வாழும் உயிரினங்களை மொனிரா, புரோட்டிஸ்டா, பூஞ்சை, தாவர உலகம், விலங்கு உலகம் என ஐந்து வகையாக வகைப்படுத்தினார். எனவே இவர் வகைப்பாட்டியலின் தந்தை எனப் பெயர் பெற்றார்.[1][2]

இறப்பு[தொகு]

1980 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் நாளில் தனது 59 ஆவது வயதில் நியூயார்க் அருகில் உள்ள இச்சாக என்னும் இடத்தில் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]