கொல்கி உபகரணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொல்கி உடலின் நுணுக்குக் காட்டித் தோற்றம். அரைவட்டக் கீலம் போன்ற கறுப்பு வளையங்கள் அடியில் காணப்படுகின்றன.
மாதிரி விலங்கு உயிரணுவின் நுண் உறுப்புகள்:
(1) கருவின்கரு அல்லது புன்கரு
(2) உயிரணுக் கரு
(3) இரைபோசோம்
(4) சுரப்பு புடகம் (Vesicle)
(5) அழுத்தமற்ற அகக்கலவுருச் சிறுவலை
(6) கொல்கி உபகரணம்
(7) கலமென்சவ்வு
(8) அழுத்தமான அகக்கலவுருச் சிறுவலை
(9) இழைமணி
(10) புன்வெற்றிடம் (Vacuole)
(11) குழியமுதலுரு (Cytosol)
(12) இலைசோசோம்
(13) புன்மையத்தி (Centriole)

கொல்கி உபகரணம் அல்லது கொல்கிச் சிக்கல் மற்றும் கொல்கி உடல் (Golgi apparatus) என வழங்கப்படுவது மெய்க்கருவுயிரிக் கலங்களில் காணப்படும் ஒரு நுண்ணுறுப்பு ஆகும்.[1] இது இத்தாலி நாட்டு மருத்துவரான கமிலோ கொல்கி என்பவரால் 1897 இல் கண்டறியப்பட்டது. பின்னர் 1898 இல் பெயரிடப்பட்டது.[2]

கொல்கி உபகரணமானது அகக்கலவுருச் சிறுவலையின் பாகமாக அமைந்து, அகக்கலவுருச் சிறுவலையில் உருவாகும் புரதங்களை, கலங்களின் உள்ளே அதன் தொழிற்பாட்டுக்குரிய விதத்தில் தயார்ப்படுத்தி, அவை தொழிற்பட வேண்டிய இடத்துக்கு வழிப்படுத்தும் தொழிலைச் செய்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்கி_உபகரணம்&oldid=3849583" இலிருந்து மீள்விக்கப்பட்டது