அகக்கலவுருச் சிறுவலை
அகக்கலவுருச் சிறுவலை என்பது, மெய்க்கருவுயிரி கலங்களில் தட்டையாக்கப்பட்ட பை வடிவிலும் குழாயுருவான பை வடிவிலும் காணப்படும் ஒற்றை மென்சவ்வால் சூழப்பட்ட கலப்புன்னங்கம் ஆகும். இவை அனேகமான மெய்க்கருவுயிரி கலங்கலினுள் காணப்படும் கலத்தக மென்சவ்வுகளின் வலையமைப்பாகும்[1]. அகக்கலவுருச் சிறுவலைகள் வெளிக் கருவுறை/ வெளிக் கரு மென்சவ்வுடன் இணைக்கப்பட்டுள்ளன. சில மெய்க்கருவுயிரி கலங்களிலும் (செங்குருதிக் கலங்கள், விந்துக் கலங்கள்), அனைத்து நிலைக்கருவிலி (புரோக்கரியோட்டா) கலங்களிலும் அகக்கலவுருச் சிறுவலை இருப்பதில்லை. இரு வகையான அகக்கலவுருச் சிறுவலைகள் உள்ளன: அவை அழுத்தமற்ற அகக்கலவுருச் சிறுவலை (RER) மற்றும் அழுத்தமான அகக்கலவுருச் சிறுவலை (SER) என்பனவாகும். இவை இவற்றின் மென்சவ்வில் இறைபோசோம்கள் பதிக்கப்பட்டுள்ளனவா/ இல்லையா என்பதை அடிப்படையாகக் கொண்டே வகைப்படுத்தப்படுகின்றன. அழுத்தமற்ற அகக்கலவுருச் சிறுவலையின் மென்சவ்வில் அதிகளவான இறைபோசோம்கள் பதிக்கப்பட்டுள்ளன. அழுத்தமான அகக்கலவுருச் சிறுவலையில் இறைபோசோம்கள் இருப்பதில்லை. RER இன் மேற்பரப்பிலுள்ள இறைபோசோம்கள் புரதங்களை உற்பத்தி செய்து RER இன் உள்ளிடத்துக்குள் அனுப்புகின்றன. RERஐ புரத உற்பத்தி அதிகளவில் நடைபெறும் ஈரற்குழியங்களில் அதிகளவில் அவதானிக்கலாம். SER கொழுப்பு உற்பத்தியுடனும், காபோவைதரேற்று அனுசேபத்துடனும் தொடர்புபட்ட கலப்புன்னங்கமாகும். இரு வகையான அகக்கலவுருச் சிறுவலைகளினதும் பொதுவான தொழில் பதார்த்தங்களின் கலத்தகக் கடத்தலாகும்.
வகைகள்
[தொகு]அழுத்தமற்ற அகக்கலவுருச் சிறுவலை
[தொகு]இதன் மென்சவ்வு பல இறைபோசோம்களைக் கொண்டிருக்கும். இவை அனேகமாத் தட்டையான பையுருவிலேயே காணப்படும்.[2] இவற்றால் தொகுக்கப்படும் புரதங்களில் மாற்றங்களை ஏற்படுத்திக் கலத்தினுள் கடத்துதலே RERஇன் பிரதான தொழிலாகும். உருவாக்கப்படும் புரதங்கள் கருவுக்கு நேரடியாகக் கடத்தப்படுவதுடன் கலத்துக்கு வெளியே கடத்தப்பட வேண்டுமெனில் அது செலுத்தற் புடகங்களை உருவாக்கி கொல்கி உபகரணத்துக்குக் கடத்தப்பட்ட பின்னர் கொல்கி உபகரணம் உருவாக்கும் கொல்கிப் புடகம் மூலம் கலத்துக்கு வெளியே அனுப்பப்படும். பிரதானமாக கருவுக்குத் தேவைப்படும் மற்றும் கலத்துக்கு வெளியே அனுப்பப்படும் புரதங்களே RERஇல் இணைக்கப்பட்டுள்ள இறைபோசோம்களால் உருவாக்கப்படுகின்றன. தொழில்கள்:
- இலைசோசோம்களுக்குத் தேவையான நீர்ப்பகுப்பு நொதியப் புரதங்களை உற்பத்தி செய்தல் (இணைக்கப்பட்டுள்ள இறைபோசோம்களே உருவாக்கின்றன).
- கலத்திலிருந்து வெளிநோக்கிச் சுரக்கப்படவுள்ள புரதங்களை உற்பத்தி செய்தல்
- கல மென்சவ்வின் உள்ளீட்டுக்குரிய புரதங்களை உருவாக்கல்.
- கலமென்சவ்விற்குரிய பொசுபோலிப்பிட்டு மற்றும் கிளைக்கோலிப்பிட்டை உருவாக்கல்.
- புரதங்களின் கலத்தகக் கடத்தல்
அழுத்தமான அகமுதலுருச் சிறுவலை
[தொகு]இவற்றில் இறைபோசோம்கள் இருப்பதில்லை. SER அனேகமாக குழாயுருவான வடிவத்திலேயே காணப்படும். இவை காபோவைதரேற்று, இலிப்பிட்டு ஆகியவற்றின் அனுசேபத்துடன் தொடர்புபட்டதாகும். தொழில்கள்:
- இலிப்பிட்டு, ஸ்தெரொய்ட்டு ஆகியவற்றின் தொகுப்பு[3].
- கலத்தகக் கடத்தல்
- தசை நார்களில் Ca2+ அயன்களின் சேமிப்பு மற்றும் விடுவிப்பு. தசைக்கலங்களில் உள்ள SER விசேடமாக தசை முதலுருச் சிறுவலை எனப்படும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Soltys, B.J., Falah, M.S. and Gupta, R.S. (1996) Identification of endoplasmic reticulum in the primitive eukaryote Giardia lamblia using cryoelectron microscopy and antibody to Bip. J. Cell Science 109: 1909-1917.
- ↑ Shibata, Yoko; Voeltz, Gia K.; Rapoport, Tom A. (2006). "Rough Sheets and Smooth Tubules". Cell 126 (3): 435–439. doi:10.1016/j.cell.2006.07.019. பன்னாட்டுத் தர தொடர் எண்:00928674.
- ↑ "Functions of Smooth ER". University of Minnesota Duluth.