இலை
இலை (leaf) என்பது பூக்கும் தாவரத் தண்டின் முதன்மை ஒட்டுறுப்பாகும் அல்லது இணைவாகும்;[1] இது தரைக்கு மேலே பக்கவாட்டில் தோன்றுகிறது. இலை ஒளிச்சேர்க்கை நிகழும் உறுப்பாகும். இலைகளின் திரள் தழை எனப்படும். இது" இலையுதிர் தழை"யைப் போன்றது. [2][3] இலைகள், தண்டு, மலர், பழம் கூடிய தொகுப்பு தண்டுத்தொகுதி அல்லது தளிர் எனப்படும்.[4] பெரும்பாலான இலைகளில், வேலிக்கால் இடைத்திசு முதன்மை ஒளிச்சேர்க்கைத் திசுவாகச் செயல்படுகிறது. இது இலையலகின் மேல்தளத்தில் அமைந்துள்ளது.[1] ஆனால், இயூகாலிப்ட்டசு போன்ற சில தாவர இனங்களில்,[5] வேலிக்கால் இடைத்திசு மேல், கீழ் இருதளங்களிலும் அமைந்திருக்கும். இது போன்ற இலைகள் சம இருதள இலைகள் எனப்படுகின்றன. பெரும்பாலான இலைகள் தட்டயானவை; தெளிவான அச்சுநோக்கிய மேல் தளமும் அச்சுவிலகிய கீழ்த்தளமும் கொண்டுள்ளன; இத்தளங்கள் நிறத்திலும், மயிரிழையிலும், இலைத்துளை (மூச்சுயிர்ப்புப் புரைகள்) எண்ணிக்கையிலும் புறத்தோல் மெழுகின் அளவிலும் கட்டமைப்பிலும் இன்னும் சில கூறுபாடுகளிலும் வேறுபடும். இலைகல் தன்னுள் பச்சையத்தைக் கொண்டுள்ளதால், பெரும்பாலும் பச்சை நிறத்தில் அமையும். இந்தப் பச்சையம் சூரிய ஒளியை உட்கவர்வதால் ஒளிச்சேர்க்கை நிகழ இன்றியமையாதது. வெள்ளை நிறமுள்ள அல்லது வெள்ளைத் திட்டுகள் அல்லது விளிம்புகள் உள்ள இலை வேற்றுருவ இலை எனப்படும்.
இலைகள் பல்வேறு உருவங்களிலும் அளவுகளிலும் யாப்பிலும் வண்ணங்களிலும் இருக்கலாம். புக்கும் தாவரங்களின் சிக்கல்லன்ன நரம்பமைவோடு கூடிய அகன்ற, தட்டையான இலைகள் பேரிலைகள் எனப்படும். பெரும்பாலும் அகன்ற இலைகளைக் கொண்ட தாவர இனங்கள் பேரிலைத் தாவரங்கள் எனப்படுகின்றன, இந்த பேரிலைத் தாவரங்களில், பல்வேறு படிமலர்ச்சிவழி தோற்றங்களைக் கொண்ட அஃகு பூவாத தாவரங்களும் பெரணிவகைகளும் இலைக்கோபோடுகளும் அடங்கும். ஒரே ஒரு தனி நரம்பு மட்டும் உள்ள எளிய இலைகள் நுண்ணிலைகள் எனப்படுகின்றன.[6] கிழங்கூ போன்ற சில இலைகள் தரைக்கு மேல் அமைவதில்லை. பல நீர்த் தவர இனங்களில் இலைகள் நீரில் அமிழ்ந்துள்ளன. பாலிலைத் தாவர இனங்களின் இலைகள் தடித்தும் சாறுடனும் அமைகின்றன.இவற்றில் மாற்றிலைகள், முட்கள், நாண்கள், ஊமுட்கள் போன்ற சில இலைமாற்றுகள் ஒளிச்சேர்க்கையில் ஈடுபடாமல்,முதிர்ந்ததும் இறந்துவிடுகின்றன. மேலும் சாற்றுக்குழல் தாவரங்களில் உள்ள பல இலைவடிவ கட்டமைப்பு வகைகள் முழுமையாக இலைகளை ஒத்தமைவதில்லை. காட்டாக, மட்டைகள் எனப்படும் தாவரத் தண்டுகள் தடித்த தட்டையான கட்டைகளைப் போல அமைகின்றன. சில தடித்த தட்டையான இலைக்காம்புகளும் கட்டமைப்பிலும் தோற்றத்திலும் இலைகளிலிருந்து வேறுபடுகின்றன.[3][7] மாறாக, சாற்றுக்குழல் இல்லாத தாவரங்களின் இலையொத்த கட்டமைப்புகள், பார்வையிலும் செயலிலும் இலைகளைப் போலவே செயல்படுகின்றன. எடுத்துகாட்டுகளாக, தாள் பாசடை, குமிழ் அல்லது படலப் பாசடைகளின் இலைச்செதில்களைக் கூறலாம்.
பொதுப்பான்மைகள்
[தொகு]பெரும்பாலான சாற்றுக்குழல் தவரங்களில் இலை மிகவும் முதன்மையான உறுப்பாகும்.[8] பசுமைத் தாவாவரங்கள் தன் உணவின; அதாவது இவை உனவைப் பிற உயிரிகலில் இருந்து பெறுவதில்லை; ஒளிசேர்க்கை வழி தம் உணவை தாமே உருவாக்குகின்றன. இவை ஆர்றலைச் சூரியனில் இருந்து பெறுகின்றன. இந்த ஆற்றலைப் பயன்படுத்தி, எளிய சர்க்கரைகளாகிய குளூக்கோசு சுக்ரோசு, கரிம ஈராக்சைடு, நீர் ஆகியவற்றை உருவாக்குகின்றன. சர்க்கரைகள் மாவுப் பொருளாகத் தேக்கி வைக்கின்றன. இவை பின்னர் வேதித் தொகுப்பு வழியாக புரதம், நாரிழையம் போன்ற மேலும் சிக்கலான கரிம மூலக்கூறுகளாக மாற்றுகின்றன. இவையே தாவர உயிர்க்கலச் சுவர்களின் அடிப்படைக் கட்டமைப்புப் பொருள்களாகும். அல்லது இவை உயிர்க்கல மூச்சுயிர்ப்பின்போது வளர்சிதை மாற்றத்தால் உயிர்கால நிகழ்வுகளுக்கு வேண்டிய வேதி ஆற்றலாக மாற்றப்படுகின்றன. இலைகள் தரையில் இருந்து நீராவிப்போக்கின்போது சாற்றுக்குழல் கடத்து முறை வழியாக நீரை உறிஞ்சுகின்றன. கரிம ஈராக்சைடை வளிமண்டலத்தில் இருந்து விரவல் நிகழ்வால் இலையின் மேல்தளப் புறத்தோலில் அமைந்த இலைத்துளைகளின் ஊடாகப் பெறுகின்றன. இலைகள் தம் மேற்பரப்பைப் பெரும அளவு ஆற்றலைப் பெறும்படி தம்மை நிலைநிறுதுகின்றன. சர்க்கரை தொகுக்கப்பட்டதும், முனப்பான வளர்ச்சிப் பகுதிகலாகிய தாவர தளிர்களுக்கும் வேர்களுக்கும் கொன்டுசெல்லாப்படுகின்றன. சாற்றுக்குழல் தாவரங்கள் கடத்துகுழல்நார் எனும் சிறப்புத் திசு வழியாக சுக்ரோசைக் கொண்டுசெல்கின்றன. கடத்துகுழலும் சாற்ருக்குழலும் ஒன்றுக்கொன்று இணையாக அமைகின்றன. ஆனால், அவை எதிர் எதிராக பொருட்களைக் கடத்துகின்றன.
முதன்மை நரம்பு,இரண்டாம்நிலை நரம்பு. மென்தகட்டினதும். இலை விளிம்பு பல வடிவங்களில், அளவுகளில் காணப்படுகின்றன என்றாலும், பொதுவாக ஒரு இலை என்பது ஒரு மெல்லிய தட்டையான உறுப்பு, தரையில் மேலே பரவி, ஒளிச்சேர்க்கைக்கு சிறப்பான முதன்மை ஒளிச்சேர்க்கை திசு, கொல்லிமண்டல் மெசோஃபில், இலைகளின் பிளேடு அல்லது லமீனாவின் மேல் பகுதியில் அமைந்துள்ளது. ஆனால் யூகலிப்டஸ் முதிர்ச்சியுள்ள பசுமையாக உள்ள சில இனங்கள், இருபுறமும் இலைகள் இபோபிளேடாலல் என்று கூறப்படுகிறதுஇலைகளில் தனித்துவமான மேல் மேற்பரப்பு (அடிவயிற்று) மற்றும் குறைந்த மேற்பரப்பு (அசாதாரணமானது), நிறம், கூந்தல், ஸ்டோமாட்டாவின் எண்ணிக்கை (உட்கொள்ளும் மற்றும் வெளியீடு வாயுக்கள்), காளானுறைவு மெழுகு அளவு மற்றும் கட்டமைப்பு மற்றும் பிற அம்சங்கள் ஆகியவை வேறுபடுகின்றன.
பரவலான பிளாட் இலைகள் சிக்கலான இடத்தோடு மெகாஃபில்ஸ் மற்றும் அவை தாங்கக்கூடிய இனங்கள், பெரும்பான்மையானவை, பரந்த-அடுக்கப்பட்ட அல்லது மெகாஃபில்ஸ் செடிகள் என அழைக்கப்படுகின்றன. வேறுபட்ட பரிணாம மூலங்களுடன் கூடிய கிளாஸ்மஸ்கள் போன்ற இலைகள் இலைகள் எளிமையானவையாகும், இவை ஒற்றை நரம்பு கொண்டவை மற்றும் மைக்ரோஃபில்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.
புல்வெளிகளைப் போன்ற சில இலைகள் தரையில் மேலே இல்லை, பல நீர்வகைகளில் இலைகள் நீரில் மூழ்கியுள்ளன. சதைப்பற்றுள்ள தாவரங்கள் பெரும்பாலும் தடித்த தழும்பு இலைகளைக் கொண்டிருக்கின்றன, ஆனால் சில இலைகள் பெரிய ஒளிச்சேர்க்கை செயல்பாடு இல்லாமல் இருக்கின்றன, மேலும் முதிர்ச்சியடையாத நிலையில் அவை இறந்து போயிருக்கலாம், சில கேபபில்ஸ் மற்றும் ஸ்பைன்கள் போன்றவை. மேலும், பல வகையான இலை-போன்ற கட்டமைப்புகள் வாஸ்குலார் செடிகளில் காணப்படுகின்றன, அவற்றுடன் முற்றிலும் இல்லை. உதாரணமாக, பைலோகாக்லேட்ஸ் மற்றும் கிளாடோட்ஸ் என்று அழைக்கப்படும் தட்டையான செடியின் தண்டுகள், மற்றும் ஃபைலோட்ஸ்கள் என்று அழைக்கப்படும் இலைத் தண்டுகள் அவற்றின் கட்டமைப்பு மற்றும் தோற்றம் ஆகியவற்றில் இருந்து வேறுபடுகின்றன. தாவரங்கள் அல்லாத (பொடியாக்கின் அங்கத்தினர் என்ற முறையில் இருப்பதால்) தாவரங்கள் அல்ல, அவை இலைகளைப் போல தோற்றமளிக்கின்றன மற்றும் சில கட்டமைப்புகள்.
இலை என்பது மரஞ்செடி கொடிகளின்மரம் செடி கொடிகளைத் தமிழில் நிலைத்திணை என்றும் தாவரம் என்று கூறுவர். இதுவே ஒளிச்சேர்க்கை வழி மரஞ்செடி கொடிகளின் உயிர்ப்புக்கு ஊட்டம் அல்லது ஆற்றல் பெற உதவுவது. கதிரவனின் ஒளியைப் பெறும் இலைகள் பல்வேறு வடிவங்கள் கொண்டுள்ளன, சில தட்டையாகவும், சில நீண்டும் இருக்கின்றன. இலைகளில் பச்சையம் என்ற நிறமி இருப்பதன் காரணமாக இலைகள் பொதுவாக பச்சை நிறத்தில் இருக்கின்றன. இலைகள் பொதுவாக உணவையும் நீரையும் சேமித்து வைப்பினும், சில தாவரங்களில் வேறு விதங்களிலும் பயன்படுகின்றன.
இலையின் புறவடிவியல்
[தொகு]மரஞ்செடி கொடிகளில் இலைகளின் புறத்தோற்றம் பல்வேறு வடிவங்கள் கொண்டுள்ளன சில அகலமாக அடிவிரிந்தும் நுனி குறுகியும், சில இலைகளின் விளிம்பில் பல்வேறு நெளிவுகள் கொண்டும், சில ஊசி போன்ற வடிவிலும் உள்ளன.
ஒரு பூக்கும் தாவரத்தின் அல்லது வித்திலைத் தாவரத்தின் முழுமையான கட்டமைப்புள்ள இலை, இலைக்காம்பு, இலையலகு, இலைச்செதில்கள் (இலைக்காம்பின் அடிப்பகுதியில் இருபுறமும் உள்ள சிறுகட்டமைவுகள்), உறை ஆகிய உறுப்புகளைப் பெற்றுள்ளன. ஒவ்வொரு தாவரமும் இலை சார்ந்த அனைத்து உறுப்புகளையும் பெற்றிருப்பதில்லை. பெரணித் தாவரங்களில் உள்ள அண்மிய இலைக்காம்புகள் குறுஞ்செதில்கள் எனப்படுகின்றன. இலையலகு பசுங்கணிகங்கள் உள்ள விரிந்த தட்டையான இலை உறுப்பாகும். இலையுறை என்பது தாவரத் தண்டின் அடிப்பகுதியில் தண்டில் இணைந்த கணுவுக்கு மேலே தண்டை முழுமையாகவோ பகுதியாகவோ தழுவியுள்ள உறுப்பாகும். இலையுறை புற்களிலும் குடைத்தாவரங்களிலும் அமைகின்றன. இலையுறைக்கும் இலையலகுக்கும் இடையில், போலி இலைக்காம்பு அமையலாம். வாழை, பனை, மூங்கில் போன்ற ஒருவித்திலைத் தவரங்களில் போலி இலைக்காம்புகள் அமைகின்றன.[10]
கிண்ண வடிவில் தரையில் படர் இலைகள் கிடைமட்ட இலைகள் எனப்படுகின்றன
அடிப்படை இலை வகைகள்
[தொகு]பல்லாண்டுத் தாவரங்களில் ஆண்டுதோறும் இலையுதிப்பவை இலையுதிர்வன என்றும் கார்க்காலத்தில் இலை உதிராதவை நிலைபசுமையன என்றும் அழைக்கப்படுகின்றன.
தண்டுடன் இலைக்காம்பு வழியாக இணையும் இலைகள் காம்பிலைகள் எனவும் தண்டுடன் நேரடியாக இணையும் இலைகள் காம்பிலா இலைகள் எனவும் அழைக்கப்படுகின்றன.[11]
- பெரணிகள் அகலிலைகளைக் கொண்டுள்ளன.
- ஊசியிலைத் தாவர சிறகு வடிவ இலைகள் ஊசி வடிவிலோ அல்லது செதில் வடிவிலோ அல்லது ஆமணக்கு இலை வடிவிலோ அமைகின்றன. இவை நிலைபசுமையனவாகவோ இலையுதிர்வனவாகவோயைருகாலாம். இவற்றில் ஒரே நரம்பே அமையும்.
- பூக்கும் தாவரத்தின் செந்தர வடிவ இலைகளில் இலைச்செதில், இலைக்காம்பு, இலையலகு ஆகிய உறுப்புகள் அமையும்.[12]
- பெரும்பாலான புற்களிலும் பிற ஒருவித்திலைத் தாவரங்களிலும் அமையும் உறையிலைகளே அமைகின்றன.
தண்டில் இலையமைவு
[தொகு]தண்டின் மீதமையும் இலைகளின் ஒழுங்கமைப்பு இலையமைவு எனப்படுகிறது.[13] இயற்கையில் பல்வேறு வகையான இலையமைவுகள் உள்ளன:
இலைக்காம்பின் பாங்குகள்
[தொகு]இலைக்காம்புள்ள இலைகள் காம்பிலை எனப்படும்.
காம்பின்றி இலை நேரடியாக தண்டில் இணையும் இலைகள் காம்பிலா இலை எனப்படும். துணைக் காம்பிலைகள் மிகவும் சிறிய காம்புகளைப் பெற்று காம்பிலாதன போல தோற்றம் அளிக்கின்றன.
அணைந்த அல்லது கீழொட்டிவளர் இலைகளின் இலையலகு தண்டை ஓரளவு அணைந்து காணப்படும்.
இலைநரம்புகள்
[தொகு]இலைநரம்புகள் இலைகளின் கண்னுக்குப் புலப்படும் கூறுபாடுகள் ஆகும். இலையின் நரம்புகள் அதன் சாற்றுக்குழல் கட்டமைப்பைக் காட்டுகின்றன; இவை இலைக்கம்பு ஊடாக இலைக்குள் விரிவடைந்து தண்டுக்கும் இலைக்கும் இடையில் நீரையும் ஊட்டச் சத்துகளையும் கொண்டுசெல்கின்றன. இதனால், இலையின் நீரளவும் ஒளிச்சேர்க்கை நிகழ்வும் திறமும் பேணப்படுகின்றன.
இலையின் பணிகள்
[தொகு]உணவு தயாரித்தல்
[தொகு]ஒளிச்சேர்க்கை மூலம் இலைகள் உணவைத் தயாரிக்கின்றன.
வளிமப் பரிமாற்றம்
[தொகு]தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது கரியமில வாயு (கார்பன் டை ஆக்ஸைடு) உள் எடுத்துக்கொண்டு உயிர்வளியை (ஆக்ஸிஜன்) வெளியிடுகின்றன. மூச்சுயிர்த்தலின்போது உயிர்வளியை உள் எடுத்துக்கொண்டு கரிம ஈராக்சைடை வெளியிடுகின்றன. இலையில் உள்ள சிறு துளைகள் (இலைத்துளைகள்) வழியாகவே இந்த வளிமப் பரிமாற்றம் நிகழ்கிறது.
நீராவிப்போக்கு
[தொகு]இலையில் உள்ள அதிகப்படியான நீரை இலைத்துளை வழியாக நீராவியாக வெளியேற்றும் நிகழ்ச்சி நீராவிப்போக்கு எனப்படும்
தனித்தாவர புறவடிவ மாற்றங்கள்
[தொகு]- ஒத்த அலகின
- தாவர இலையின் துளிர்நிலை முதல் முதிர்நிலைகள் வரை இலையின் அளவும் உருவும் வளர்ச்சிப் பாங்கும் சிறிதளவே மாறும் பான்மை ஆகும் ; மாறாக,
- மாறலகின
- தாவர இலையின் துளிர்நிலை முதல் முதிர்நிலைகள் வரை இலையின் அளவும் உருவும் வளர்ச்சிப் பாங்கும் கணிசமான அளவில் மாறும் பான்மை ஆகும்.
இலையின் உள் கட்டமைப்பு
[தொகு]இலை, பின்வரும் இழையங்களைக் கொண்டுள்ள ஒரு தாவர உறுப்பு ஆகும்:
- இலையின் மேல் மற்றும் கீழ் மேற்பரப்புக்களை மூடியிருக்கும் புறத்தோல்.
- இரு பக்க புறத்தோலுக்கும் இடையில் அமைந்திருக்கும் இலை நடுவிழையம்.
- இலை நரம்பு எனப்படும், உரியம், மற்றும் காழ்க் கலன்களைக் கொண்ட கலனிழையம்.
உருப்பெருக்கிய இலையின் வெட்டுமுகம் |
புறத்தோல்
[தொகு]புறத்தோல் என்பது பல படைகளாக அமைந்து இலைகளை மூடியிருக்கும் திசுள் (கலம்) தொகுதியாகும். இது இலையின் உட்பகுதித் திசுள்களை புறச் சூழலிலிருந்து பிரிக்கின்றது. புறத்தோல், நீரிழப்பைத் தடுத்தல், வளிமப் பரிமாற்றத்தை ஒழுங்கமைத்தல், வளர்சிதைமாற்றத்துக்கான நீர்மங்களைச் சுரத்தல், சில இனங்களில் நீரை உறிஞ்சுதல் ஆகியவை உள்ளிட்ட பல செயற்பாடுகளைக் கொண்டுள்ளன. பல இலைகளில் மேல் புறத்தோலும், கீழ் புறத்தோலும் வெவ்வேறு விதமான அமைப்புக்களை உடையனவாக இருப்பதுடன் வெவேறு செயற்பாடுகளையும் கொண்டிருக்கின்றன.
புறத்தோல் பொதுவாக ஒளி புகவிடும் தன்மை கொண்டிருப்பதுடன், நீரிழப்பைத் தடுப்பதற்காக அவற்றின் மேல் மெழுகு போன்ற தோலி எனப்படும் பூச்சும் இருக்கும். சில சந்தர்ப்பங்களில் மேற்பக்கத் தோலி, கீழ்ப்பக்கத் தோலியிலும் தடிப்பானதாக இருக்கும். வரண்ட பகுதித் தாவரங்களின் இலைகளில் தடிப்புக் கூடிய தோலிகளும், ஈரவலயத் தாவரங்களின் தோலிகள் ஒப்பீட்டளவில் தடிப்புக் குறைந்தவையாகவும் காணப்படுகின்றன.
புறத்தோல் திசுக்கள் பல்வேறுபட்ட திசுள் (கலம்) வகைகளைக் கொண்டுள்ளன. புறத்தோல் திசுள்கள், காப்பணுக்கள், துணைத் திசுள்கள், புறத்தோல் உரோமங்கள் என்பன இவற்றுள் அடங்கும். புறத்தோல் திசுள்களே இவற்றுள் எண்ணிக்கையில் அதிகமானவையாகவும், பெரியனவாகவும், சிறப்புச் செயற்பாடுகள் குறைந்தவையாகவும் உள்ளன. இருவித்திலைத் தாவர இலைகளின் புறத்தோல் திசுள்கள், ஒருவித்திலைத் தாவர இலைகளில் உள்ளவற்றிலும் நீளம் கூடியவையாகக் காணப்படுகின்றன.
புறத்தோலில், இலைத்துளைகள் எனப்படும் துளைகள் பரவியுள்ளன. இவற்றுடன், இத் துளைகளின் இருபுறமும் பசுங்கணிகம் அடங்கிய காப்பணுக்களும், இரண்டு முதல் நான்கு எண்ணிக்கையான துணைத் திசுள்களும் அமைந்திருக்கும். இவை கூட்டாக இலைத்துளைத் தொகுதி எனப்படும். இலைத்துளைத் தொகுதி, இலையின் உட்புறத்துக்கும், வெளியிலுள்ள வளிமண்டலத்துக்கும் இடையிலான வளிமம் மற்றும் நீராவிப் பரிமாற்றங்களை ஒழுங்குபடுத்துகின்றது. பொதுவாக, கீழ் புறத்தோலில், மேல் புறத்தோலிலும் கூடிய எண்ணிக்கையில் இலைத்துளைகள் காணப்படுகின்றன.
நடுத்திசு
[தொகு]மேலும் கீழும் அமைந்துள்ள புறத்திசுப் படலங்களுக்கு இடையே இலையின் உட்புறத்தின் பெரும்பகுதி நடுத்திசு எனப்படும் பஞ்சுத்திசுக்களால் ஆனது. இந்தத் தன்வயமாக்கல் (assimilation) திசுக்களே தாவரங்களில் ஒளித்தொகுப்பு நடைபெறுகின்ற முக்கியமான இடங்களாகும்.
பன்னங்களிலும், பெரும்பாலான பூக்கும் தாவரங்களிலும், நடுத்திசு இரண்டு படைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
- மேல் புறத்தோலுக்கு நேர் கீழே, ஒன்று அல்லது இரண்டு திசுள் தடிப்புக் கொண்ட, வேலிக்கால்திசுப் படை. இது நெருக்கமாக அடைக்கப்பட்டுள்ள, நிலைக்குத்தாக நீண்ட திசுள்களைக் (கலங்கள்) கொண்டது ஆகும். இது பஞ்சுத்திசுப் படையிலிருப்பதிலும், மிகவும் கூடுதலான பசுங்கணியங்களைக் (chloroplasts) கொண்டுள்ளது. இந்த நீண்ட உருளை வடிவத் திசுள்கள், ஒன்று முதல் ஐந்து வரையான வரிசைகளில் ஒழுங்காக அடுக்கப்பட்டுள்ளன. திசுள்களின் சுவர்களுக்கு அருகில் பசுங்கணியங்களைக் கொண்டுள்ள இந்த உருளைத் திசுக்கள் உகந்த அளவில் சூரிய ஒளியைப் பெறக்கூடிய வசதியைக் கொண்டுள்ளன. இத் திசுள்களுக்கு இடையே காணப்படுகின்ற சிறு இடைவெளிகள், அதிகூடிய அளவில் காபனீரொட்சைட்டை உறிஞ்சிக் கொள்வதற்கு வசதியாக உள்ளது. நீர் கடத்தப்படுவதை உறுதிசெய்ய, மேற்கூறிய இடைவெளிகள் நுண்புழைக் கவர்ச்சியை (capillary action) உருவாக்குமளவு ஒடுக்கமாக இருத்தல் வேண்டும். தாவரங்கள் தங்கள் சூழலுக்கு (எடு: கடும் ஒளி அல்லது நிழல்) ஏற்பத் தகைவு (adaptation) பெறுவதற்காக இலையின் இந்த அமைப்பு உகந்த வகையில் அமைதல் வேண்டும். கூடிய சூரிய ஒளி கொண்ட சூழலில் உள்ள இலைகளில் வேலிக்கால் திசுக்கள் பல படைகளாகவும், நிழலில் காணப்படும் இலைகள் ஒரு வேலிக்கால் திசுப் படையைக் கொண்டும் அமைந்திருக்கும்.
- வேலிக்கால் திசுப் படைகளுக்குக் கீழே பஞ்சுத் திசுப் படை இருக்கும். இப் பஞ்சுத் திசுப் படையில் இருக்கும் திசுள்கள் கூடிய வட்ட வடிவம் கொண்டவையாகவும், நெருக்கமாக அடைக்கப்படாதவை ஆகவும் இருக்கும். திசுள்களுக்கு இடையே பெரிய வளி இடைவெளிகள் காணப்படும். இவை வேலிக்கால் திசுக்களில் காணப்படுவதிலும் குறைந்த அளவிலேயே பசுங்கணியத்தைக் கொண்டிருக்கும்.
புறத்தோலில் காணப்படும் இலைத் துளைகள் அவற்றுக்குப் பின்னால் இருக்கும் சிறிய அறைகளுக்குத் திறந்திருக்கும். இவ்வறைகளுக்குப் பஞ்சுத் திசுப் படையில் உள்ள வளி இடைவெளிகளுடன் தொடர்பு இருக்கும்.
நடுத்திசுவின் இந்த இரு வேறுபட்ட படைகள், நீர்த் தாவரங்களிலோ, சதுப்பு நிலத் தாவரங்களிலோ காணப்படுவதில்லை. சில சமயங்களில், புறத்தோல் மற்றும் நடுத்திசு கூடக் காணப்படாமல் இருக்கலாம். இத்தகைய இலைகளில் ஒருதன்மைத்தான மெல்லிய சுவர்களைக் கொண்ட திசுள்கள் பெரிய வளிம இடைவெளிகளினால் பிரிக்கப்பட்டுக் காணப்படும். இவற்றின் இலைத் துளைகள் இலையின் மேற் பகுதியிலேயே காணப்படும்.
இலைகள் பொதுவாகப் பச்சை நிறமானவை. இது கணிகங்களில் (plastids) காணப்படும் பச்சையத்தினால் ஏற்படுகின்றது. பச்சையத்தைக் கொண்டிராத தாவரங்கள் ஒளித்தொகுப்புச் செய்ய முடியாது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Esau 2006.
- ↑ Haupt 1953.
- ↑ 3.0 3.1 Mauseth 2009.
- ↑ "Shoot system". Dictionary of botanic terminology. Cactus Art Nursery. n.d. பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
- ↑ James et al 1999.
- ↑ Stewart & Rothwell 1993.
- ↑ Cooney-Sovetts & Sattler 1987.
- ↑ Tsukaya 2013.
- ↑ Heywood et al 2007.
- ↑ Simpson 2011, pp. 356–357.
- ↑ Botany Illustrated: Introduction to Plants Major Groups Flowering Plant Families. Thomson Science. 1984. p. 21.
- ↑ https://www.quora.com/What-is-a-lamina-or-leaf-blade
- ↑ Didier Reinhardt and Cris Kuhlemeier, "Phyllotaxis in higher plants", in Michael T. McManus, Bruce Veit, eds., Meristematic Tissues in Plant Growth and Development, January 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84127-227-6, Wiley-Blackwell.
நூல்தொகை
[தொகு]நூல்களும் இயல்களும்
[தொகு]- Esau, Katherine (2006) [1953]. Evert, Ray F (ed.). Esau's Plant Anatomy: Meristems, Cells, and Tissues of the Plant Body: Their Structure, Function, and Development (3rd. ed.). New York: John Wiley & Sons Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-04737-8.
- Haupt, Arthur Wing (1953). Plant morphology. McGraw-Hill.
- Mauseth, James D. (2009). Botany: an introduction to plant biology (4th ed.). Sudbury, Mass.: Jones and Bartlett Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7637-5345-0.
- Stewart, Wilson N; Rothwell, Gar W. (1993) [1983]. Paleobotany and the Evolution of Plants (2nd ed.). கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-38294-6.
- Heywood, V.H.; Brummitt, R.K.; Culham, A.; Seberg, O. (2007). Flowering plant families of the world. New York: Firefly books. p. 287. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55407-206-4.
- Simpson, Michael G. (2011). Plant Systematics. Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-051404-8.
கட்டுரைகளும் ஆய்வுரைகளும்
[தொகு]- Shelley, A.J.; Smith, W.K.; Vogelmann, T.C. (1998). "Ontogenetic differences in mesophyll structure and chlorophyll distribution in Eucalyptus globulus ssp. globulus (Myrtaceae)". American Journal of Botany 86 (2): 198–207. doi:10.2307/2656937. பப்மெட்:21680359.
- Cooney-Sovetts, C.; Sattler, R. (1987). "Phylloclade development in the Asparagaceae: An example of homoeosis". Botanical Journal of the Linnean Society 94 (3): 327–371. doi:10.1111/j.1095-8339.1986.tb01053.x.
- Tsukaya, Hirokazu (January 2013). "Leaf Development". The Arabidopsis Book 11: e0163. doi:10.1199/tab.0163. பப்மெட்:23864837.
வலைத்தளங்கள்
[தொகு]- Bucksch, Alexander; Blonder, Benjamin; Price, Charles; Wing, Scott; Weitz, Joshua; Das, Abhiram (2017). "Cleared Leaf Image Database". School of Biology, ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 12 March 2017.
- Geneve, Robert. "Leaf" (PDF). PLS 220: Introduction to plant identification. University of Kentucky: Department of Horticulture. Archived from the original (PDF) on 2016-03-15.
- Kling, Gary J.; Hayden, Laura L.; Potts, Joshua J. (2005). "Botanical terminology". இலினொய் பல்கலைக்கழகம் (அர்பானா சாம்பேன்), Urbana-Champaign. பார்க்கப்பட்ட நாள் 7 March 2017.
- de Kok, Rogier; Biffin, Ed (November 2007). "The Pea Key: An interactive key for Australian pea-flowered legumes". Australian Pea-flowered Legume Research Group. பார்க்கப்பட்ட நாள் 9 March 2017.
- Kranz, Laura. "The Vein Patterns of Leaves" (Drawings).
- Massey, Jimmy R.; Murphy, James C. (1996). "Vascular plant systematics". NC Botnet. University of North Carolina at Chapel Hill. பார்க்கப்பட்ட நாள் 19 January 2016.
- "Leaves"., in (Massey & Murphy 1996)
- Purcell, Adam (16 January 2016). "Leaves". Basic Biology. Adam Purcell. Archived from the original on 19 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 17 February 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - Simpson, Michael G. "Plants of San Diego County, California". College of Science, San Diego State University. பார்க்கப்பட்ட நாள் 2 March 2017.
- "Florissant Fossil Beds Leaf Key" (PDF). Florissant Fossil Beds National Monument. National Park Service, US Department of the Interior. பார்க்கப்பட்ட நாள் 16 February 2017.
- "Plant Database". School of Horticulture, Kwantlen Polytechnic University. 2015. Archived from the original on 21 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 9 March 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - "Angiosperm Morphology". TutorVista. 2017. Archived from the original on 2020-06-21. பார்க்கப்பட்ட நாள் 2023-05-11.
- கலைச்சொற்களின் விளக்கம்
- Hughes, Colin. "The virtual field herbarium". Oxford University Herbaria. Archived from the original on 5 March 2017. பார்க்கப்பட்ட நாள் 4 March 2017.
- "Plant Characteristics". Archived from the original (Glossary) on 5 March 2017. பார்க்கப்பட்ட நாள் 4 March 2017., in (Hughes 2017)
- "Glossary of botanical terms". Neotropikey. Royal Botanic Gardens, Kew. பார்க்கப்பட்ட நாள் 18 February 2017.
- "Illustrated glossary of leaf shapes" (PDF). Center for Aquatic and Invasive Plants, Institute of Food and Agricultural Sciences, University of Florida. 2009. பார்க்கப்பட்ட நாள் 8 January 2020.
- "Leafshapes". Donsgarden. Archived from the original on 4 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 9 January 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- "Leaf". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911).