தோட்டக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தோட்டக்கலை என்பது, வழமையாக ஒருவருடைய வீட்டுக்கு அருகில், தோட்டம் என்று பொதுவாக அழைக்கப்படுகின்ற இடத்தில் தாவரங்களை வளர்க்கின்ற ஒரு கலையாகும். வீட்டுக்கு அருகாமையில் அமைந்திருக்கும் தோட்டம் வீட்டுத் தோட்டம் எனப்படுகின்றது. பொதுவாகத் தோட்டங்கள் வீட்டைச் சூழவுள்ள நிலப்பகுதியிலேயே அமைவது வழக்கமெனினும், வீட்டுக் கூரைகள், பலகணித் தொட்டிகள், பல்கனிகள் போன்ற பகுதிகளிலும் அமைக்கப்படுவதுண்டு.

"உள்ளகத் தோட்டக்கலை" என்பது கட்டிடங்களுக்குள் தாவரங்களை வளர்ப்பது சம்பந்தமானது. வீட்டுத் தாவரங்கள் இதற்கென அமைக்கப்பட்ட காப்பகங்கள், பசுமைக்குடில் போன்றவற்றுள்ளும் வளர்க்கப்படுவதுண்டு.

"நீர்த் தோட்டக்கலை", சிறு குளங்கள், தடாகங்கள் போன்றவற்றுக்குப் பொருத்தமான தாவரங்களை வளர்ப்பதோடு சம்பந்தப்பட்டது.

வீட்டுத்தோட்டங்களில் மட்டுமன்றி, பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், நெடுஞ்சாலையோரங்கள், சுற்றுலாப்பகுதிகள் போன்றவற்றிலும் தோட்டக்கலை சம்பந்தப்பட்டுள்ளது.

தோட்டக்கலை நோக்கங்கள்[தொகு]

தாவரங்கள் பயன்பாடு சார்ந்த மற்றும் பயன்பாடு சாராத பல்வேறு தேவைகளுக்காக வளர்க்கப்படுகின்றன. இவற்றுள் சில பின்வருமாறு:

பயன்பாடு சார்ந்தவை

பயன்பாடு சாராதவை

மரக்கறி வகைகள், பழ வகைகள், மூலிகைகள், நிழல் மரங்கள், புல், பல்லாண்டுத் தாவரங்கள், அலங்காரத் தாவரங்கள், பூச்செடிகள் போன்ற பலவகைத் தாவரங்களும் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. பல தோட்டங்களில், இவற்றில் பலவற்றை ஒருங்கே காணக்கூடும்.

பழ மரங்கள் வீட்டுத் தோட்டங்களிலே வளர்க்கப்படுவது வழக்கமெனினும் பெருமளவில் வளர்க்கும்போது தோப்புகளிலே வளர்ப்பார்கள்.

பின்வருவனவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோட்டக்கலை&oldid=2319997" இருந்து மீள்விக்கப்பட்டது