கூரைத் தோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராக்ஃபெல்லர் மையத்தில் (Rockefeller Center) கூரைத் தோட்டம்.

கூரைத் தோட்டம் என்பது எவ்வித கட்டிடத்தின் கூரையிலும் பயிர் செய்யும் கலையாகும். இது அழகிற்காக மட்டுமின்றி, சரிவர பயன்படுத்தினால் உணவிற்கும் பயன்படுத்த இயலும். இது போக இவை வெப்பத்தினை கட்டுக்குள் வைக்கவும், நீர் சார்ந்த பயன்களும், தோற்ற ஏற்றமும், பொழுதுபோக்கு அம்சங்களும், சுற்றுச்சூழல் பேணிக்காக்கும் பயன்களும் அளிக்கும்[1]. இவ்வகைத் தோட்டங்கள் பொதுவாக உணவுப்பொருட்களை விளைவித்தால் அதனை கூரை உழவு (rooftop farming) என்றும் கூறலாம்[2][3][4]. பச்சைக்கூரை வடிவமைத்து, நிலமின்றி உழவு செய்யும் முறைகளைக்கையாண்டு தொட்டி தோட்டங்கள் அமைப்பர்[5]. முன்னரே இருக்கும் இடம் போக கூடுதலாக இடம் கொள்ள கட்டட அமைப்பினை உட்புகுத்தியும், வளியில் பாலங்கள் போன்ற அமைப்புகள் மீதும் இவ்வுழவினை செய்வர்[6].

வளர்ப்பு[தொகு]

வீட்டின் மாடிப்பகுதியில் காய்கறி மற்றும் அலங்காரச் செடிகள், மூலிகைச் செடிகள் வளர்க்கும் முறையான மாடித் தோட்ட வளர்ப்பு முறை பரவலாக பெருகி வருகிறது. இதனை ‘கூரைத் தோட்டம்’ என்றும் அழைக்கிறார்கள். [7]

கவனித்தில் கொள்ள வேண்டியவை[தொகு]

  • நீங்கள் வளர்க்கும் செடிகளின் தொட்டியின் நீர்க்கசிவினால் மேல் தளம் பாதி்க்கப்படலாம்.
  • ஆணிவேர் கொண்ட செடிகளை கூரைத் தோட்டங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்

தொடர்பான படங்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூரைத்_தோட்டம்&oldid=2220767" இருந்து மீள்விக்கப்பட்டது