உள்ளடக்கத்துக்குச் செல்

புல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புல் என்பது ஒருவித்திலைத் தாவரமாக இருப்பதுடன், பொதுவாக நிலத்திலிருந்து தொடங்கும் ஒடுங்கிய இலைகளைக் கொண்ட செடி வகையைச் சார்ந்த தாவரமாகும். இது பச்சை நிறத்தில் காணப்படும். இதில் பல வகைகளும் உள்ளன. புல்வெளி என்பது பொதுவாக புற்கள் அடர்ந்து காணப்படும் இடத்தை குறிக்கும். அருகம் புல் , மூங்கில், மக்காச்சோளம் மற்றும் சில களை வகைகளும் புற்கள் ஆகும்.

வெட்டும் புற்கள்

புல் என்ற சொல் முறை

[தொகு]

புற்கள் ஒருவித்திலைத் தாவர வகையைச் சார்ந்தது. புற்களைப் போன்று அடர்ந்து நீளமாக காணப்படும் தாவரத்தையும் புற்கள் என்று கூறும் வழக்கமும் உண்டு. புல் என்றச் சொல் தமிழில் பல காலமாகப் பயன்பாட்டில் உள்ளது. புற்கள் இரண்டு வகைப்படும். வெட்டும் புற்கள், மேய்ச்சல் புற்கள் என்று பகுக்கலாம்.

வீடு (கட்டிடம்)பசுங்கூரை, ஐசுலாந்து

இதன் முக்கியதுவம்

[தொகு]

புற்கள் அல்லது புல்வெளி என்பது பொதுவாக கால்நடைகளுக்கு உணவு அளித்து வருகின்றது. இதனால் இதனை மேய்ச்சல் நிலம் என்றும் கூறுவர். பல கால்நடைகள் இதையே மிக முக்கியமான உணவாக உட்கொள்கின்றன.

கி.மு.2400ஆம் ஆண்டிலிருந்து காகிதம் தயாரிக்கவும் புற்கள் உபயோகமாக உள்ளன. உணவு தாணியங்களான நெல், கோதுமை மற்றும் பார்லி ஆகியவையும் புல் இனத்தையே சேர்ந்தவையாகும்.
அறுகம்புல் (Cynodon dactylon) ஒரு மருத்துவ மூலிகையாகும்.

புல் வகைகள்

[தொகு]

புற்கள் அவை விலங்குணவாகப் பயன்படும் முறையில் இரு பிரதான வகைகளாகப் பகுக்கப்படும்.

  1. மேச்சல் புல் (Grazing grass)
  2. வெட்டுப்புல் (Fodder grass)

உயரமாக வளரக்கூடியது. 15-20 அடி வரை வளரக்கூடியவை. வெட்டி உணவூட்டுதலுக்கு உகந்ததாகையால் வெட்டும்புல் எனப்படுகின்றது. கணுஇடைவெளி அதிகம் காணப்படுகின்றது. வெட்டி உணவூட்டுதலுக்கு உகந்ததாகையால் வெட்டும்புல் எனப்படுகின்றது. கணுஇடைவெளி அதிகம் காணப்படுகின்றது.

அதிகளவு உரம் தேவைப்படும். வெட்டி உணவூட்டுதலுக்கு உகந்ததாகையால் வெட்டும்புல் எனப்படுகின்றது. நேரடி சூரியஓளி அவசியம். நிழலை தாங்கி வளரமாட்டா.

விளையாட்டுப் பொருளகம்

[தொகு]
விளையாட்டரங்கம்

விளையாட்டரங்கம் மற்றும் திடல்களில் புற்களை அழகாக சமன்படுத்தி உபயோகப்படுத்துவது வழக்கம். அதிகமான உடல் திறன் விளையாட்டுகளில் புற்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. புல்வெளி மைதானங்களில் விளையாடப்படும் முக்கியமான விளையாட்டுகள் அமெரிக்கக் காற்பந்தாட்டம், காற்பந்தாட்டம், அடிப்பந்தாட்டம், துடுப்பாட்டம், ரக்பி ஆகியவை ஆகும். சில உள் விளையாட்டரங்கங்களிலும் மற்றும் புல்வெளி மைதானங்களை பராமரிக்கச் சிரமமாக உள்ள இடங்களிலும் செயற்கைப் புல்தரை எனப்படும் புற்களைப் போல் உள்ள செயற்கை இழைகளைக்கொண்டு மாற்று ஏற்பாடு செய்கின்றனா். கோல்ஃப், டென்னிசு மற்றும் துடுப்பாட்டம் போன்ற சில விளையாட்டுகளில் விளையாட்டின் தேவைக்கேற்ப புற்களின் தரம் மாறுபடுகிறது.

துடுப்பாட்டம்

[தொகு]
துடுப்பாட்டத்தில் ஆட்டத்தின் போக்கை நிர்ணயிக்கும் விதமாக பிச் எனப்படும் புல்தரைப்பகுதி உள்ளது. பந்துவீசுவதற்கு ஏதுவாகவும் பந்து நன்கு குதித்து எழும்பும் விதமாகவும் பிச் கணமான கல் உருளையால் சமன்படுத்தப்படுகிறது. கடினமானதாகவும் தட்டையாகவும் அமைக்கப்படும்பிச் முதல் நாள் ஆட்டத்தில் மட்டையாளருக்குச் சாதகமாக அமைகிறது. தொடர்ந்து அதில் விளையாட புற்கள் காய்ந்துபோவதுடன் ஆட்டத்தின் போக்கை அடுத்த அடுத்த நாட்களில் மாற்றக்ககூடியதாகவும் உள்ளது.

இதையும் பார்க்க‌

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புல்&oldid=3734754" இலிருந்து மீள்விக்கப்பட்டது