மக்காச்சோளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சோளம்
மக்காச்சோளம் சுடுதல்

மக்காச்சோளம் (இலங்கையில் 'சோளம்', அறிவியல் பெயர்/தாவரவியல் பெயர் - Zea mays) உலகம் முழுவதும் பயிரிடப்படும் ஒரு உணவுத் தானியம். உலகில் அதிகம் பயிரிடப்படும் பயிர் இதுவே ஆகும். உலகின் சோள உற்பத்தியில் பாதியளவு ஐக்கிய அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதுதவிர இந்தியா, சீனா, பிரேசில், பிரான்ஸ், இந்தோனேசியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் அதிகம் பயிரிடப்படுகிறது. இவற்றைப் பெரும்பாலும் சோளப்பொரி செய்யவே பயன்படுத்துகின்றனர்.

இது முதலில் நடு அமெரிக்காவில் பயிரிடப்பட்டு பின்னர் அமெரிக்காக் கண்டம் முழுதும் பரவியது. 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஐரோப்பியர்களுக்கு அமெரிக்காவுடன் ஏற்பட்ட தொடர்புகளைத் தொடர்ந்து இது உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது. அமெரிக்காவில் அதிகம் பயிரிடப்படும் பயிர் மக்காச்சோளம் ஆகும். ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 270 மில்லியன் தொன்கள் எடைகொண்ட மக்காச்சோளம் உற்பத்தியாகிறது. பொதுவான மக்காச்சோளப் பயிரைக் காட்டிலும், கலப்பின மக்காச்சோளப் பயிர்கள் அதிக விளைவைத் தருவதால் விவசாயிகள் கலப்பினங்களையே பெரிதும் விரும்புகிறார்கள். சில மக்காச்சோளத் தாவரங்கள் 7 மீட்டர் (23 அடி) உயரம் வரை வளர்கின்றன. எனினும் பெரும்பாலான வணிக அடிப்படையில் பயிராகும் மக்காச்சோளத் தாவரங்கள் 2.5 மீட்டர் (8 அடி) வரை உயரமாக வளர்கின்றன. இனிப்பு மக்காச்சோள வகைகள் பிற மக்காச்சோள வகைகளிலும் குட்டையானவை.

உடற்தோற்றம்[தொகு]

மக்காச்சோளத் தண்டுகள் மேலோட்டமாகப் பார்க்கும்போது மூங்கிலின் வடிவத்தை ஒத்தது. இவற்றில் கணுவிடைகள் 20 - 30 சதமமீட்டர் அளவு கொண்டவையாக உள்ளன. மக்காச்சோளம் தனித்துவமான வடிவம் கொண்டதாக வளர்கின்றது. கீழ்ப்பகுதி இலைகள் 50-100 சதமமீட்டர் (சமீ) நீளமும், 5-10 சமீ அகலமும் கொண்டவை. தண்டுப் பகுதி நிமிர்ந்த நிலையில் 2-3 மீட்டர்கள் வரை வளர்கின்றது.

ஒளிப்படக் காட்சியகம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்காச்சோளம்&oldid=1978813" இருந்து மீள்விக்கப்பட்டது