களை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Yellow starthistle, தெற்கு ஐரோப்பாவுக்கும், மத்திய கிழக்குக்கும் சொந்தமான ஒரு தாவரம், வட அமெரிக்காவில் ஒரு ஆக்கிரமிப்புக் களையாகக் கருதப்படுகிறது.
நச்சுக் களைகளை உண்டு 700 கால்நடைகள் ஓரிரவிலேயே இறந்தன.

களை (Weed) என்பது, குறித்த சந்தர்ப்பங்களில் பிரச்சினைகளைக் கொடுக்கும், மனிதனால் உருவாக்கப்பட்ட தோட்டங்கள், புல்தரைகள், வயல்கள் போன்ற சூழல்களில் வளரும் தேவையற்ற தாவர வகைகளைக் குறிக்கும். பொதுவாக இச் சொல் வேகமாகப் பெருகும் தாயக மற்றும் பிற இடத்துத் தாவரங்களைக் குறிக்க இச்சொல் பயன்படுகின்றது. இவை பயிர்களுக்கு இடையே வளரும் விரும்பத்தகாத மற்றும் பயிர்களுக்குண்டான நீர், நில ஆதாரங்களுக்கு போட்டியிட்டு பயிர் உற்பத்தியையும், மனித மேம்பாட்டையும் பாதிப்பவையாகும்[1].

பல காரணங்களால் களைகள் தேவையற்றனவாகக் கருதப்படலாம். பயிர்களுக்கு மண்ணிலிருந்து கிடைக்கும் ஊட்டச் சத்துக்களுக்குப் போட்டியிடுவதனால் பயிர்களின் வளர்ச்சிக்குக் குந்தகமாக இருத்தல், பயிர்களுக்குக் கிடைக்க வேண்டிய சூரிய ஒளியைத் தடுத்தல், பார்வைக்கு அழகற்றனவாக இருத்தல் என்பன இவற்றுட் சில. இவை நோய்க்காரணிகளுக்கு இடம் கொடுத்து, பிற பயிர்களுக்குத் தொற்றை ஏற்படுத்தி அவற்றின் தரம் குறைவதற்குக் காரணமாகவும் அமையக்கூடும். சில களைகள் முட்களைக் கொண்டுள்ளன, வேறு சில தொடும்போது அரிப்பை உண்டாக்குவனவாக இருக்கின்றன, வேறு சிலவற்றின் பகுதிகள் உடலிலோ ஆடைகளிலோ ஒட்டிக்கொண்டு விடுகின்றன. இதனாலும் இக் களைகள் விரும்பப்படாதன ஆகின்றன.

களைகளின் இயல்புகள்[தொகு]

 • எல்லாக் காலங்களிலும் தோன்றி செழிப்பாக வளரும் தன்மையுடையது.
 • ஒவ்வொரு வருடமும் ஏராளமான விதைகளை உற்பத்தி செய்கின்றன.
 • களைகள் எல்லா மண்ணிலும் செழிப்பாக வளர்ந்து மண்ணில் உள்ள சத்துக்களை கிரகித்துவிடும் தன்மை உடையது.
 • களைகளின் விதைகள் பயிர் விதைகளை விட சிறியதாக உள்ளன.
 • களைகளின் விதைகள் விலங்குகளின் உடலில் ஒட்டிக்கொண்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
 • களைகளின் விதைகள், பயிர்களின் விதைகளைப் போன்ற அமைப்பும் பருமனும் நிறமும் உடையதாக இருப்பதால் தாவரங்களின் விதைகளிலிருந்து எளிதில் பிரிக்க முடிவதில்லை.
 • களைகளின் விதைகளில் இறகுகள் போன்ற அமைப்பு இருப்பதால் காற்றில் வெகுதூரம் அடித்துச் செல்லப்படுகின்றன.
 • களைகளின் விதைகளைச் சற்றி உள்ள உறை, உரோமம் மற்றும் முட்களின் உதவியால் விலங்குகளிடமிருந்து தப்பித்துக் கொள்கின்ற்ன,
 • பயிர் அறுவடையாகும்போது களைகளின் விதைகள் தானியங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் சந்ததியை பெருக்குகின்றன.
 • பெரும்பாலான களைகள் விதையில்லா இனப்பெருக்கம் மூலம் வேகமாக பெருகுகின்றன.

களைகளால் ஏற்படும் பாதிப்புகள்[தொகு]

 • பயிர்களோடு போட்டியிட்டு பயிர்களுக்குண்டான ஊட்டச்சத்துக்கள், நீர், சூரிய ஒளி மற்றும் நிலம் போன்றவற்றை அதிக வீரியத்துடன் பகிர்ந்து கொண்டு பயிர் மகசூலைக் குறைக்கிறது.
 • பல்லாண்டுக் களைகள் நிலத்தின் மதிப்பைக் குறைக்கின்றன.
 • களை விதைகள் கலப்பதால் விளை பொருட்களின் தரம் மற்றும் மதிப்பு குறைகிறது.
 • களைகள் அதிகளவு ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து கிரகித்துக் கொள்வதால் மண்ணின் ஊட்டத்திறன் குறைகிறது.
 • களைகளால் ஏற்படும் நச்சுத்தன்மையால் மனிதன் மற்றம் கால்நடைகளின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது.

நன்மை தரும் களைகள்[தொகு]

 • களைகளை நிலத்தோடு சேர்த்து உழுவதால் நிலத்திற்கு தழைச்சத்து கிடைக்கிறது.
 • சில களைகள் களர் நிலங்களை சீர்திருத்தும் குணமுடையது.
 • களைகளை எரிப்பதால் சாம்பல் சத்து கிடைக்கிறது.
 • களைகள் கால்நடைகளுக்கு தீவனமாக கிடைக்கிறது.
 • களைகளால் மண் அரிமானம் தடுக்கப்படுகிறது.
 • சில களைகள் மனிதன் மற்றும் கால் நடைகளுக்கு உணவாகப் பயன்படுகிறது. (எ.கா. கீரைகள்)
 • சில களைச் செடிகள் அலங்காரத்தாவரமாகப் பயன்படுகின்றன (எ.கா. உளிமுள்)
 • சில களைகளின் கிழங்குகள் (கோரை) அகர்பத்திகள் தயாரிக்கவும், சில களைகள் வாசனை எண்ணெய் தயாரிக்கவும் பயன்படுகிறது.
 • பல புதிய இரகங்களை உருவாக்குவதில் களைகள் உதவி புரிகின்றன.

மேலும் பார்க்க[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. வேளாண் செயல்முறைகள் - பாடப்புத்தகம் (பதினோராம் வகுப்பு)
"https://ta.wikipedia.org/w/index.php?title=களை&oldid=2747996" இருந்து மீள்விக்கப்பட்டது