துடுப்பாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
துடுப்பாட்டம்
Pollock to Hussey.jpg
உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்புபன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
முதலில் விளையாடியது18ஆம் நூற்றாண்டில்
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள்
அணி உறுப்பினர்கள்இரு அணியில் தலா 11 வீரர்கள்
இருபாலரும்ஒருவருக்கான
பகுப்பு/வகைஅணி, பந்தும் மட்டையும்
கருவிகள்துடுப்பாட்டப் பந்து, துடுப்பாட்ட மட்டை, இழப்பு
விளையாடுமிடம்துடுப்பாட்டக் களம்
தற்போதைய நிலை
ஒலிம்பிக்1900 (கோடைக் காலத்தில் மட்டும்)

துடுப்பாட்டம் (ஆங்கிலம்: Cricket) என்பது மட்டையும் பந்தும் கொண்டு ஆடப்படும் ஒரு விளையாட்டு ஆகும். இது முறையே 11 வீரர்கள் கொண்ட இரு அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. தற்பொழுது, இந்த ஆட்டம் பொதுநலவாய நாடுகளில் பரவலாக ஆடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் மிகப் பிரபலமான விளையாட்டாக உள்ளது. தேர்வு, ஒருநாள் மற்றும் இருபது20 ஆகிய மூன்றும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட துடுப்பாட்ட வகைகள் ஆகும்.

துடுப்பாட்டத்தின் தோற்றம் குறித்து உறுதியான வரலாற்றுச் சான்றுகள் எதுவும் இல்லை. 16ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தென்கிழக்கு இங்கிலாந்தில் விளையாடப்பட்டது என்பதே துடுப்பாட்டத்தின் முதல் வரலாற்றுச் சான்றாகும். பிரித்தானியப் பேரரசின் விரிவாக்கம் மூலம் துடுப்பாட்ட விளையாட்டு உலகளவில் பரவியது. இதனால் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் துடுப்பாட்டம் பன்னாட்டு ரீதியாக விளையாடப்படத் தொடங்கியது. தற்போது துடுப்பாட்டத்தின் உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்பான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் 100க்கும் மேற்பட்ட அணிகள் உறுப்பினர்களாக உள்ளன. அவற்றில் 12 உறுப்பினர்கள் தேர்வுத் துடுப்பாட்டம் ஆடும் தகுதிபெற்றவையாகும்.

விதிகள் மற்றும் ஆட்ட முறைகள்[தொகு]

Muralitharan bowling to Adam Gilchrist.jpg
5
6
7
7
10
11
12
12
நடுவர்
இழப்பு
காத்திருப்பவர்
பந்துவீச்சாளர்
5
பந்து
6
வீசுகளம்
7
எகிறும் களம்
மட்டைவீசுபவர்
இழப்பு
10
இழப்பு-கவனிப்பாளர்
11
முதல் வழுவாய்
12
திரும்பு களம்

ஆட்டம்[தொகு]

முதலில் மட்டைவீசும் அணியைச் சேர்ந்த இரு வீரர்கள் வீசுகளத்தின் இரு முனைகளிலும் உள்ள எல்லைக்கோடுகளில் நின்று கொள்வர். பந்துவீசும் அணியைச் சேர்ந்த ஒரு பந்து வீச்சாளர் மட்டையாளரின் எதிர்முனையில் இருந்து பந்து வீசுவார். வீச்சாளர் இழப்பை நோக்கி குறிவைத்து பந்து வீசி மட்டையாளரை வீழ்த்த முயற்சி செய்வார். இழப்பின் முன் நிற்கும் மட்டையாளர் அந்த பந்தை இழப்பின் மேல் படாமல் மட்டையைக் கொண்டு தடுக்க வேண்டும். அத்துடன் பந்தை மட்டையால் அடித்துவிட்டு வீசுகளத்தின் ஓரு முனையிலிருந்து மறுமுனைக்கு ஓடிச்சென்று அங்கு இழப்புக்கு முன்பு உள்ள எல்லைக்கோட்டைத் தன் மட்டையால் தொடலாம். அவருடன் காத்திருக்கும் மட்டையாளரும் முனைமாற வேண்டும். இதன்மூலம் ஒரு ஓட்டம் கிடைக்கும். இவ்வாறு எத்தனை முறை மட்டையாளர்கள் முனைமாறிச் சென்று எள்லைக்கோடுகளைத் தொடுகிறார்களோ அத்தனை ஓட்டங்கள் வழங்கப்படும். மேலும், மட்டையாளர் அடித்த பந்து ஆடுகளத்தின் எல்லையைத் தாண்டிவிட்டால் அவருக்கு 4 அல்லது 6 ஓட்டங்கள் வழங்கப்படும். அப்போது முனைமாற்றத்தில் எடுத்த ஓட்டங்கள் கணக்கில் வராது. பந்து இழப்பின் மீது பட்டுவிட்டாலோ அடிக்கப்படும் பந்து நிலத்தில் படாமல் நேராக பந்துவீசும் அணியினருள் ஒருவரின் கைகளில் அகப்பட்டுக்கொண்டாலோ மட்டையாளர் களத்தில் இருந்து வெளியேற வேண்டும். அதன் பிறகு மட்டைவீசும் அணியின் மற்றொரு வீரர் வந்து ஆட்டத்தைத் தொடர்வார். இவ்வாறு பத்து மட்டையாளர்களை பந்து வீச்சாளர் வீழ்த்தி விட்டால் அந்த அணியின் ஆட்டம் முடிவுக்கு வரும். மட்டையாளரை வீழ்த்துவதற்கு முற்கூறியன தவிர மேலும் சில வழிகளும் உள்ளன.

ஆட்டத்தின் முதல் பகுதியில் பந்து வீசிய அணி இரண்டாம் பகுதியில் மட்டைவீசும். இறுதியில் அதிக ஓட்டங்கள் குவித்த அணி போட்டியில் வெற்றி பெறும்.

ஆடுகளம்[தொகு]

நீள் வட்டம் அல்லது வட்ட வடிவில் அமைந்த துடுப்பாட்ட மைதானத்தின் நடுவில் சுமார் மீட்டர் நீள அகலத்தில் மையக்க்களம் (pitch) எனப்படும் பகுதி அமைக்கப்பட்டிருக்கும். இப்பகுதியின் நிலம் பதப்படுத்தப்பட்டும் புற்கள் வெட்டப்பட்டும் இருக்கும். இந்த மையக்களத்தின் இரு முனைகளில் தலா ஒரு இழப்பு அமைக்கப்பட்டிருக்கும்.

இழப்பு மற்றும் வரைகோடு[தொகு]

வீசுகளத்தின் இரு முனைகளில் உள்ள வரைகோடுகளில் இரு இழப்புகள் அமைந்திருக்கும். அவை ஒன்றுக்கொன்று ஒத்திருக்கும் மூன்று மரத் தண்டுகளும் அதன் மேல் இரண்டு சிறிய மரக் கட்டைகளும் வைத்து அமைக்கப்படும். இவற்றின் மொத்த உயரம் 72 சென்டிமீட்டர் (28 அங்குலம்). மேலும் மூன்று தண்டுகளின் ஒருங்கிணைந்த அகலம், அவற்றுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் 23 சென்டிமீட்டர் (9 அங்குலம்) இருக்கும்.

வீசுகளத்தில் இரு எல்லைக் கோடுகள் மற்றும் இரு திரும்புக் கோடுகள் என்று மொத்தம் நான்கு வரைகோடுகள் இருக்கும்.

மட்டை மற்றும் பந்து[தொகு]

இது வில்லோ எனும் மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் நீளம், அகலம் போன்றவை முறையே 96.5 செ.மீ, 11.4 செ.மீ. இதன் எடை 2 பவுண்ட்ஸ் ஆகும். இதை ஜோன்பால் என்பவர் முதன் முதலில் வடிவமைத்தார்.

இது அநேகமாக வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களிலேயே காணப்படுகிறது. இவற்றின் சுற்றளவுகள் 20.79 செ.மீ தொடக்கம் 22.8 செ.மீ வரை காணப்படுகிறன. இவற்றின் எடை அண்ணளவாக 5.75 அவுன்ச் ஆகும்.

ஆட்ட நடுவர்[தொகு]

ஆடுகளத்தில் நடைபெறும் துடுப்பாட்ட விளையாட்டு இரண்டு கள நடுவர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு ஆட்ட நடுவர் பந்து வீச்சாளரின் இழப்புக்குப் பின்புறம் நிற்பார். மற்றொரு நடுவர் துடுப்பாட்டகாரின் இழப்பிலிருந்து 15–20 மீட்டர் தொலைவில் "square leg" எனப்படும் பகுதியில் நிற்பார்.

நடுவர்களின் முதன்மையான பணி சரியான தீர்ப்பளிப்பதாகும். அதாவது வீசுகளத்தில் ஒரு பந்து சரியான அளவில்தான் வீசப்பட்டதா, அது அகல வீச்சா? (wide) அல்லது பிழை வீச்சா? (no ball)? மேலும் ஒரு ஓட்டம் எடுக்கப்படும்போது மட்டையாளர் இழப்பு தாக்கப்படும் முன்பு எல்லைக்கோட்டில் மட்டையை வைத்தாரா? இதுமட்டுமல்லாமல் களத்தில் உள்ள பந்து பிடிக்கும் வீரர்களின் கோரிக்கைகளயும் ஆராய்ந்து கள நடுவர்கள் தீர்ப்பளிக்கவேண்டும்.

இதுதவிர கள நடுவர்கள் பணி, எப்பொழுது ஆட்டம் தொடங்குவது, இடைவெளி எப்பொழுது விடுவது, மையக்களத்தின் தன்மை, விளையாடுவதற்கு உகந்த வானிலை உள்ளதா? எப்பொழுது ஆட்டத்தை முடிப்பது அல்லது கைவிடுவது? இதுபோன்ற முடிவுகளையும் கள நடுவர்களால் தீர்மானிக்கப்படும்.

மூன்றாவது ஆட்ட நடுவர்[தொகு]

பெரும்பாலும் மூன்றாவது ஆட்ட நடுவர் என்பவர் களத்திற்கு வெளியே இருப்பார். தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படும் போட்டிகளில் மூன்றாவது ஆட்ட நடுவரின் பங்கு இருக்கும். இவரது பணி, கள நடுவர்களால் ஒரு தீர்பபை வழங்க இயலாத போதும் அல்லது ஒரு சர்ச்சையான முடிவை கள நடுவர்கள் எடுக்கும்போது அதை மறுபரிசீலனை செய்வதும் (தொலைக்காட்சியில் பதிவான் காட்சிகள் மூலம் ஆராய்ந்து சரியான முடிவை வழங்குவது) மூன்றாவது நடுவரின் பணியாகும்.

ஐசிசியில் முழுமையான உறுப்பினர்கள் இடையே விளையாடப்படும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட நிறைவுகள் கொண்ட பன்னாட்டுப் போட்டிகள் ஆகிய அனைத்திலும் மூன்றாவது ஆட்ட நடுவர் கட்டாயமாக இடம்பெறவேண்டும் என்பது ஐசிசி விதியாகும்.

அண்மைக்கால போட்டிகளில் துடுப்பாட்ட சட்டங்கள் மற்றும் விளையாட்டில் பற்று ஆகியவற்றுடன் வீரர்கள் விளையாடுவதை உறுதிப்படுத்துவதற்கு, கள மற்றும் மூன்றாவது நடுவர்களைத் தவிர தற்போது போட்டி நடுவர் (match referee) ஒருவரும் இருக்கிறார். அவர் ஆடுகளதில் விளையாடும் வீரர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து ஒழுங்கீனமாக செயல்படும் வீரர்களுக்கு அபராதம் மற்றும் தவறு செய்யும் வீரர்களுக்கு போட்டிகளில் விளையாட தடை போன்ற தீர்ப்புகளை வழங்குவார்.

விளையாடும் அணியின் அமைப்பு[தொகு]

ஒரு அணி என்பது பதினொரு வீரர்களைக் கொண்டுள்ளது. விளையாடும் வீரரின் முதன்மை திறன்களைப் பொறுத்து, ஒரு வீரரை மட்டையாளர் அல்லது பந்து வீச்சாளர் என்று வகைப்படுத்தலாம். நன்கு சமநிலையான அணியில் பொதுவாக ஐந்து அல்லது ஆறு சிறப்பு மட்டையாளர்கள் மற்றும் நான்கு அல்லது ஐந்து சிறப்பு பந்துவீச்சாளர்கள் இருப்பர். இவர்களுள், தனித்துவமான இழப்புக் காப்பாளர் ஒருவர் எப்போதும் அணியில் இருப்பார். ஒவ்வொரு அணியும் ஒரு அணித்தலைவரின் தலைமையில் வழிநடத்ப்படுகிறது, அவர் பந்துவீச்சு வரிசையை தீர்மானித்தல், களத்தடுப்பு வீரர்களுக்கான இடம் மற்றும் பந்து வீச்சாளர்களின் சுழற்சியை தீர்மானித்தல் போன்ற திறமையான முடிவுகளை எடுப்பதற்கு பொறுப்பானவர்.

மட்டைவீச்சு மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறந்து விளங்கும் ஒரு வீரர் பன்முக ஆட்டக்காரர் (All Rounder) என்று அழைக்கப்படுகிறார். ஒரு இழப்புக் காப்பாளர் என்பவர் மட்டையாளராகவும் உள்ளதால் சில நேரங்களில் அவரும் ஒரு பன்முக ஆட்டக்காரர் என்று கருதப்படுகிறார். பெரும்பாலான வீரர்கள் மட்டைவீசுவது அல்லது பந்துவீசுவது ஆகிய திறமைகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே கவனம் செலுத்துவதால் பன்முக ஆட்டக்காரர் என்பவர் ஒரு அணியில் மிகவும் அரிதானவராகவும் முக்கியமானவராகவும் உள்ளார்.

ஆட்ட வகைகள்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளே துடுப்பாட்டத்தின் பாரம்பரிய போட்டியாகும். ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை தொடர்ந்து நடக்கும். ஒவ்வொரு அணியும் தலா இரு ஆட்டப் பகுதிகள் விளையாட வேண்டும். இரு ஆட்டப் பகுதியையும் சேர்த்து அதிக ஓட்டங்கள் எடுத்த அணி வென்றதாக கருதப்படும். உலகில் முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி மார்ச் 15, 1787 நாளன்று இலண்டன் இலார்ட்சு மைதானத்தில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்றது.

வரையிட்ட நிறைவுகள் துடுப்பாட்டம்[தொகு]

ஒருநாள் போட்டிகள்[தொகு]

ஒருநாள் போட்டிகள் 1970களில் அறிமுகப் படுத்தப்பட்டது. இவ்வகைப் போட்டியில் இரு அணிகளும் ஐம்பது நிறைவுளுக்கு மிகாமல் ஒரு ஆட்டப் பகுதி ஆட வேண்டும். அதிக ஓட்டங்கள் எடுத்த அணி வெற்றி பெறும். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் உலகக்கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிகளில் இந்த ஆட்ட வகையே கடைபிடிக்கப்படுகிறது. முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டி ஜனவரி 5, 1971 நாளன்று ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இருபது 20 போட்டிகள்[தொகு]

இருபது20 ஒரு வகை துடுப்பாட்டப் போட்டி வகையாகும். இது இங்கிலாந்து மற்றும் வேல்சு துடுப்பாட்ட வாரியத்தினால் கவுண்டிகளுக்கிடையே 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிகளுக்காக முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் இரண்டு அணிகள் ஒவ்வொரு ஆட்டப் பகுதிகளைக் கொண்டிருப்பதோடு அணிக்கு உச்ச வரம்பாக 20 நிறைவுகள் மட்டையாட வழங்கப்படுகின்றது.

பன்னாட்டுக் கட்டமைப்பு[தொகு]

உறுப்பினர்கள்[தொகு]

முழு உறுப்பினர்கள் பின்வருமாறு:

நாடு ஆட்சிக் குழு உறுப்பினரான நாள்
 ஆத்திரேலியா துடுப்பாட்டம் ஆத்திரேலியா 15 சூலை 1909[1]
 ஆப்கானித்தான் ஆப்கானித்தான் துடுப்பாட்ட வாரியம் 22 சூன் 2017
 அயர்லாந்து துடுப்பாட்டம் அயர்லாந்து 22 சூன் 2017
 இங்கிலாந்து இங்கிலாந்து மற்றும் வேல்சு துடுப்பாட்ட வாரியம் 15 சூலை 1909[1]
 இந்தியா இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் 31 மே 1926[1]
 இலங்கை இலங்கை துடுப்பாட்டம் 21 சூலை 1981[1]
 தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்டம் 15 சூலை 1909A[1]
 நியூசிலாந்து நியூசிலாந்து துடுப்பாட்டம் 31 மே 1926[1]
 பாக்கித்தான் பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியம் 28 சூலை 1953[1]
 மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்டம் மேற்கிந்தியத் தீவுகள் 31 மே 1926[1]
 வங்காளதேசம் வங்காளதேசத் துடுப்பாட்ட அவை 26 சூன் 2000[1]

இணை மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உறுப்பினர்கள்[தொகு]

ஐசிசி உறுப்பு நாடுகள்:
     தேர்வு உறுப்பினர்கள்
     இணை உறுப்பினர்கள்
     ஒருநாள் இணை உறுப்பினர்கள்
     முன்னாள் அல்லது நீக்கப்பட்ட உறுப்பினர்கள்

இணை மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அணிகள். இவை ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 தகுதிகளைக் கொண்டுள்ளன:

நாடு ஆட்சிக் குழு உறுப்பினரான ஆண்டு தற்போதைய ஐசிசி ஒருநாள் தரம்
 கனடா கனேடியத் துடுப்பாட்டம் 1968[1] 16
 கென்யா கென்யா துடுப்பாட்டம் 1981[1] 13
 நெதர்லாந்து நெதர்லாந்து துடுப்பாட்ட வாரியம் 1966[1] 12
 இசுக்காட்லாந்து ஸ்காட்லாந்து துடுப்பாட்டம் 1994[1] 15

உலகக்கிண்ணம் வென்ற அணிகள்[தொகு]

அணி 1975 1979 1983 1987 1992 1996 1999 2003 2007 2011 2015 2019
 ஆத்திரேலியா
 இந்தியா
 பாக்கித்தான்
 இலங்கை
 மேற்கிந்தியத் தீவுகள்
 இங்கிலாந்து
குறிப்பு: - உலகக் கோப்பை வென்ற அணி

துடுப்பாட்டத்தின் சமூக தாக்கங்கள்[தொகு]

துடுப்பாட்டம் ஐக்கிய இராச்சிய மேல்வர்க்கத்தில் தோன்றிய ஒரு பொழுது போக்கு விளையாட்டு. இவ்விளையாட்டை அங்கு கனவான்களின் ஆட்டம் (Gentlemen's game) என்று அழைப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. துடுப்பாட்டம் இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் ஐக்கிய இராச்சியத்தின் காலனிகளாக இருந்த போது அங்கே பரவியது. துடுப்பாட்டம் பிரபலமான பின்பு பல மரபு வழி விளையாட்டுக்கள் மறைந்து போக வழிக்கோலியது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 "A brief history ...". Cricinfo. பார்த்த நாள் 2 May 2008.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துடுப்பாட்டம்&oldid=2790586" இருந்து மீள்விக்கப்பட்டது