மட்டையாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மட்டையாளர் ஒருவர்

மட்டையாளர் என்பது துடுப்பாட்டத்தில் மட்டையடித்துக் கொண்டிருக்கும் வீரரையோ அல்லது மட்டையடிப்பதற்கான சிறப்புத் திறமைகளைக் கொண்டிருக்கும் வீரரையோ குறிக்கும். மட்டையாளர் என்பது பால் வித்தியாசமின்றி இருபாலாரையும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

மட்டையாளரின் பங்கு[தொகு]

விளையாட்டின் போது, மட்டையடிக்கும் அணியின் இரண்டு வீரர்கள் ஆடுகளத்தில் இருப்பார்கள், ஏனையவர்கள் களத்துகு வெளியே அரங்கத்தில் அணியின் அறையில் இருப்பார்கள். களத்தில் இருக்கும் இரண்டு வீரர்களும் தற்போதைய மட்டையாளர்கள் எனப்படுவர். இவ்விரு வீரர்களும் களத்தின் மையத்துக்கு அருகாமையில் இருக்கும் பட்டிகையின் இரு அந்தங்களிலும் காணப்படும் குச்சங்களுக்கு அண்மையில் இருப்பார்கள்.

இரண்டு மட்டையாளர்களும் வெவ்வேறு பனிகளைக் கொண்டிருக்கின்றனர்:

  • ஆடுபவர் இவர் தனக்கு அருகிலுள்ள குச்சங்களுக்கு முன்பாக நின்று, அதனை எதிர் முனையிலிருந்து பந்து வீச்சாளர் வீசும் பந்து வீச்சுகளில் இருந்து காப்பார்.
  • காத்திருப்பவர் இவர் பந்து வீச்சாளரின் குச்சங்களுக்கருகே காத்திருப்பார்.

பந்துவீச்சுகளில் இருந்து குச்சத்தை காப்பதோடு அதனை மறித்து களத்துக்குள் மட்டையாள் அடித்துவிட்டு ஆடுபவரும் காத்திருப்பவரும் முனைகளை மாற்றுவதன் மூலம் ஓட்டங்கள் பெறப்படும். ஒரு முறை முனைகள் மாறினால் ஒரு ஓட்டம் பெறப்படும். மட்டையாளர்கள் களத்தடுப்பில் உள்ள அணியிணர் பந்தைப்பிடித்து ஏதாவது குச்சத்துக்கருகில் பறிமாற்றும் வரையில் முனைகளை மாற்றி ஓட்டங்களைக் குவிக்கலாம். பந்து களத்தின் எல்லைக்கோட்டைத் தாண்டிச் செல்லும் போது முனைகளை பரிமாற்றாமலேயே ஓட்டங்கள் பெறப்படும். ஆடுபவர் பந்தை எதிர்தாட தயாராக உள்ளபோது காத்திருப்பவர் பொதுவாக ஓட்டத்துக்கு தயாராக காத்திருப்பார்.

மட்டையாளரின் திறமைகள்[தொகு]

சிறந்த மட்டையாளரிடமிருந்து எதிபார்க்கப்படும் திறமைகள் போட்டியின் வகையையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து வேறுபடும். பொதுவாக மட்டையாளர்கள் அநாவசிய ஆபத்துக்களை எதிர்கொண்டு தனது இலக்கை விட்டுக் கொடுக்காமல் கூடிய வேகத்தில் ஓட்டங்களைக் குவிக்க வேண்டப்படுவார்கள். சில சந்தர்ப்பங்களில் ஓட்டம் எதனையும் பெறாவிட்டாலும் தனது இலக்கை விட்டுக்கொடுக்காமல் போட்டி நேரம் முடிவடையும் வரையில் மெதுவாக ஆட வேண்டப்படுவார்கள். ஓட்ட விகிதம் மற்றும் ஓட்ட வேகம் என்பன மட்டையாளர் ஒருவரின் திறமையை அளவிடும் முறைகளாக பயன்படுத்தப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மட்டையாளர்&oldid=2132180" இருந்து மீள்விக்கப்பட்டது