சச்சின் டெண்டுல்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சச்சின் டெண்டுல்கர்
The cricket legend Sachin Tendulkar at the Oval Maidan in Mumbai During the Duke and Duchess of Cambridge Visit(26271019082).jpg
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்
பிறப்பு 24 ஏப்ரல் 1973 (1973-04-24) (அகவை 45)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
உயரம் 5 ft 5 in (1.65 m)
வகை மட்டையாளர்
துடுப்பாட்ட நடை வலக்கை
பந்துவீச்சு நடை வலக்கை இடச்சுழல், வலக்கை வலச்சுழல், வலக்கை இடத்திருப்பு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 187) நவம்பர் 15, 1989: எ பாகிஸ்தான்
கடைசித் தேர்வு சனவரி 2, 2011: எ தென்னாப்பிரிக்கா
முதல் ஒருநாள் போட்டி (cap 74) திசம்பர் 18, 1989: எ பாகிஸ்தான்
கடைசி ஒருநாள் போட்டி ஏப்ரல் 2, 2011:  எ இலங்கை
சட்டை இல. 10
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1988–இன்று மும்பை துடுப்பாட்ட அணி
2008–இன்று மும்பை இந்தியன்சு
1992 யோர்க்சயர் கவுண்டி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒருமுதஏ-தர
ஆட்டங்கள் 200 463 310 551
ஓட்டங்கள் 15,921 18426 25,396 21,999
துடுப்பாட்ட சராசரி 53.78 44.83 59.86 45.54
100கள்/50கள் 51/68 49/96 77/105 60/114
அதிக ஓட்டங்கள் 248* 200* 248* 200*
பந்து வீச்சுகள் 4,240 8,054 7,605 10,230
இலக்குகள் 46 154 71 201
பந்துவீச்சு சராசரி 54.17 44.48 61.74 42.17
சுற்றில் 5 இலக்குகள் 0 2 0 2
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/10 5/32 3/10 5/32
பிடிகள்/ஸ்டம்புகள் 115/– 134/– 174/– 175/–

ஏப்ரல் 29, 2016 தரவுப்படி மூலம்: ஈஎஸ்பிஎன்கிரிக்கின்போ

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் (Sachin Ramesh Tendulkar இந்த ஒலிக்கோப்பு பற்றி உச்சரிப்பு, பிறப்பு ஏப்ரல் 24, 1973) ஓர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரர் மற்றும் அணித் தலைவர் ஆவார்.[1] துடுப்பாட்ட விளையாட்டில் எல்லா காலங்களில் விளையாடிய வீரர்களில் சச்சின் சிறந்த  மற்றும் மிகவும் மதிக்கப்படும்  வீரராக பரவலாக அனைவராலும் கருதப்படுகிறார்[2].[3] இவர் பதினொரு வயதுமுதல் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார். தனது பதினாறாவது வயதில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 1989இல் கராச்சியில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத்தில் முதன்முறையாக விளையாடினார். [4] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் முதன்முதலாக இருநூறு (துடுப்பாட்டம்) ஓட்டங்களை எடுத்தவர் இவர் ஆவார். சர்வதேசப் போட்டிகளில் நூறு முறை நூறு (துடுப்பாட்டம்) எடுத்தவரும் இவர் ஆவார். தேர்வுத் துடுப்பாட்டம் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே[5] மேலும் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் 30,000 ஓட்டங்களைக் கடந்த ஒரே வீரரும் ஆவார். [6]

இது வரை துடுப்பாட்டம் விளையாடிய அனைத்து மட்டையாளர்களிலும் தேர்வுப் போட்டிகளில் பிராட்மனுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளில் ரிச்சர்டுசுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் 2002 இல் விசுடன் குழுமம் வெளியிட்ட தர வரிசை அறிவிக்கின்றது.[7] இவர் ஆறு முறை துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளார். அதில் 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பிடித்திருந்தார். [8] தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் தொடர் நாயகன் விருது வென்றார். விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு தனது 150 ஆண்டு விழாவின் போது அனைத்து காலத்திற்குமான சிறந்த பதினொரு நபர்கள் கொண்ட தேர்வுத் துடுப்பாட்ட அணியை அறிவித்தது. அதில் இடம் பெற்ற ஒரே இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் சச்சின் மட்டுமே.[9][10][11]

விளையாட்டுத் துறையில் இவரின் சாதனைகளைப் பாராட்டும் விதமாக 1994 ஆம் ஆண்டில் அருச்சுனா விருதும், 1997 ஆம் ஆண்டில் விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் பெற்றுள்ளார்.[12][13] மேலும் 1999 இல் இந்தியாவின் குடிமை விருதுகளில் நான்காவதாக கருதப்படும் பத்மசிறீ விருதையும், 2008 இல் இரண்டாவதாக கருதப்படும் பத்ம விபூசண் விருதினைப் பெற்றார். [14]மேலும் 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் நவம்பர் 16, 2013 இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற சில மணித்தியாலத்தில் இந்தியப் பிரதமரின் அலுவலகத்திலிருந்து ஒரு அறிவிப்பு வந்தது. அதில் இந்தியாவின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் பாரத ரத்னா விருது சச்சினுக்கு வழங்கப்பட இருப்பதாக தகவல் இருந்தது. [15][16] மிக இள வயதில் இந்த விருதைப் பெற்றவர் என்ற சாதனையையும், விளையாட்டு வீரர்களில் இந்த விருதினைப்பெறும் முதல் வீரர் எனும் சாதனைகளைப் படைத்தார்.[17] [18] 2010 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவருக்கு அந்த ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான சர் கர்ஃபீல்டு சோபர்ஸ் கோப்பை விருது வழங்கியது.[19]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சச்சின் டெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல துடுப்பாட்ட வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் சேர்ந்தார். மும்பையின் பள்ளிகளுக்கிடையிலான போட்டி ஒன்றில், இப்பள்ளியின் சார்பாக விளையாடிய இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ஓட்டங்கள் குவித்துச் சாதனை புரிந்தனர். பின்னர் 1988/89இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ஓட்டங்களைக் குவித்தார். இது இவர் ஆடிய முதல் மாநிலங்களுக்கிடையிலான போட்டி என்பதும் அப்போது அவர் வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.

சச்சின் 1989ஆம் ஆண்டு தம் 16ஆவது வயதில் முதன்முறையாக இந்தியாவின் சார்பாகத் தேர்வுப் போட்டிகளில் விளையாடினார். பாக்கித்தான் அணிக்கு எதிரான இந்தத் தேர்வுத் தொடரில் அவரால் ஓர் அரைச்சதம் மட்டுமே அடிக்க முடிந்தது. 1990இல் இங்கிலாந்து அணிக்கு எதிராகத் தனது முதல் சதத்தை அடித்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாகத் தொடர்ந்து ஆடி வந்த இவர், தேர்வுப் போட்டிகளில் 15,000 ஓட்டங்களுக்கு மேலும் ஒரு நாள் போட்டிகளில் 18,000 ஓட்டங்களுக்கு மேலும் குவித்த வீரராவார்.

சச்சினுக்கு அஞ்சலி என்ற மனைவியும் அர்ஜுன் என்ற மகனும் சாரா என்ற மகளும் உள்ளனர்.

துடுப்பாட்ட வாழ்க்கை[தொகு]

டெண்டுல்கர் ஆடுகளத்தில்
 • 1991-1992 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது சிட்னியில் (ஷேன் வார்னின் முதல் போட்டி) சச்சின் ஆட்டமிழக்காமல் 148 ஓட்டங்கள் குவித்தார்.
 • 1994 செப்டம்பர் ஒன்பதாந்திகதி ஒரு நாள் அனைத்துலகப் போட்டியின் முதல் சதத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கையில் நிறைவு செய்தார்.
 • 1997 உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் (523) குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். கொல்கொத்தா ஈடன் கார்டன் அரை இறுதியில் சச்சின் வெளியேறியதும் ஒருவர் பின் ஒருவர் பரிதாபமாக ஆட்டமிழந்த நேரத்தில் இரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட இந்தியா இலங்கையுடன் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. சச்சின் அரையிறுதியில் 65 ஓட்டங்களை குவித்தார்.
 • 1998இல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய தேர்வுத் தொடரில் வரிசையாக மூன்று சதங்கள் அடித்து வெற்றி வாகை பெற்றுத் தந்தார். அதே வருடம் சார்ஜாவில் நடைபெற்ற கோக்கோ-கோலா முத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரண்டு சதங்களை அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். [20]
 • 1999இல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பாகித்தானுக்கு எதிரான தேர்வுப் போட்டியில் முதுகில் வலியையும் வைத்துக் கொண்டு சச்சின் 136 ஓட்டங்களைக் குவித்தார். அப்போட்டியில் கடைசி நான்கு இலக்குகள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேற இந்தியா தோல்வியடைந்தது.
 • 1999 உலகக் கோப்பைப் போட்டிகளின் நடுவே தந்தையை இழந்த சச்சின் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வண்ணம் சிம்பாப்வே அணியுடனான ஒரு போட்டியில் பங்கேற்காமல் இந்தியா வர வேண்டியிருந்தது. பின்னர் மீண்டும் அணியில் திரும்பிக் கென்யாவிற்கு எதிராக 141 ஓட்டங்களைக் குவித்தார். அந்தச் சதத்தைத் தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாகக் கூறி கண்ணீர் மல்கினார்.
 • 2003 உலகக் கோப்பைப் போட்டிகளின் 11 ஆட்டங்களிலிருந்து 673 ஓட்டங்களைக் குவித்து இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெறக் காரணமானார். இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும் சச்சின் தொடர் நாயகன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
 • திசம்பர் 10, 2005 அன்று கவாஸ்கரின் தேர்வுச் சதங்கள் (34) சாதனையை இலங்கைக்கு எதிராக முறியடித்தார்.
 • 2007-2008இல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காமன்வெல்த் பேங்க் தொடரில் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்துத் தொடர் வெற்றிக்கு வழி செய்தார்.
 • 2008ஆம் ஆண்டு அக்டோபர் 17இல் உலகில் மேற்கு இந்தியத் தீவு ஆட்டக்காரர் இலாராவின் சாதனையை முறியடித்து தேர்வுத் துடுப்பாட்டத்தில் கூடிய ஓட்டங்கள் (12273 ஓட்டங்கள்-நவம்பர் 10, 2008இன் படி) எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றார். தேர்வுப் போட்டிகளின் வரலாற்றில் இது வரை மொத்தம் 51 சதங்கள் எடுத்து முதலிடத்திலுள்ளார். அதிக பட்ச ஓட்டம் 248*.
 • ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்களுடன் 17598 ஓட்டங்கள் எடுத்துள்ளார் (ஆகத்து 2012இல்). அதிகபட்ச ஓட்டம் 200*. ஆனால் சச்சின் ஆடிய முதல் 78 ஒரு நாள் ஆட்டங்களில் சதமேதும் எடுக்கவில்லை என்பது ஓர் ஆச்சரியமான தகவல்.
 • 24 முறை சச்சின் 90-99 ஓட்ட இடைவெளியில் வெளியேறிச் சதங்களைக் கோட்டை விட்டுமிருக்கிறார்.
 • ஒருநாள், தேர்வு ஆட்டங்களில் சச்சின் பிடிப்பதிலும் சதமடித்துள்ளார், ஒரு நாள் போட்டிகளில் 134 பிடிகளையும் தேர்வுப் போட்டிகளில் 106 பிடிகளையும் பிடித்துள்ளார். மிகச்சிறந்த பந்துபிடிப்பாளருமாவார் சச்சின்.
 • 2011ஆம் ஆண்டு நவம்பர் எட்டாந்திகதி அன்று தேர்வு ஆட்டங்களில் 15000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

சோதனை காலம்

 • இருமுறை அணித்தலைவர் பொறுப்பு ஏற்றும் அவர் தலைமையின் கீழ் சொல்லத் தகுந்த வெற்றிகளை இந்திய அணி குவிக்கவில்லை.
 • 2001 போர்ட் எலிசபெத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பந்தைச் சேதப்படுத்தியதாக ஆட்ட நடுவர் மைக் டென்னஸ் சச்சின் மேல் குற்றம் சாட்டி ஒரு தேர்வுப் போட்டியில் ஆடத் தடை விதித்தார். ஆனால், தொலைக்காட்சியில் சச்சின் பந்தைத் துடைப்பதாக மட்டுமே தெரிய வந்தது. இனவெறியினால் (Racism) தான் நடுவர் இவ்வாறு குற்றம் சாட்டுகிறார் என்பது வரை பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டது. இதன் பின்னர் அனைத்துலகத் துடுப்பாட்டக் கழகம் தலையிட்டுத் தடையை நீக்கியது (இந்தியப் பாராளுமன்றம் வரை இந்தச் சிக்கல் விவாதிக்கப்பட்டது.).
 • 2003இல் முழங்கை வலியினால் (Tennis elbow) அவதிப்பட்டு 10 மாதங்கள் அனைத்துலகப் போட்டிகளில் பங்குபெற முடியாமலிருந்தார்.
 • 2004இல் பாக்கித்தானுடனான தேர்வுத் தொடரில் 194 ஓட்டங்கள் குவித்து ஆடிக் கொண்டிருந்த போது அணித்தலைவர் இராகுல் திராவிட் ஆட்டத்தை நிறைவு செய்வதாக அறிவித்ததால் சச்சினின் இரட்டைச் சதம் சாத்தியமில்லாமல் போனது.

சச்சினின் தேர்வுச் சதங்கள்[தொகு]

இதுவரை சச்சின் எடுத்துள்ள 51 தேர்வுச் சதங்களில் 11 முறை மட்டுமே இந்தியா தோல்வியடைந்துள்ளது. 20 முறை சமநிலையும் 19 முறை வெற்றியும் அடைந்துள்ளது.

1990

1. இங்கிலாத்திற்கு எதிராக ஓல்ட் டிரஃபோர்டில், ஆகஸ்ட் 14, 1990, 119* ஓட்டங்கள்(சமநிலை)

1992

2. முதல் சதமெடுத்து ஏறக்குறைய இரு வருடங்கள் பின்னரே ஜனவரி 6, 1992 சிட்னி, ஆஸ்திரேலியாவில் இரண்டாவது சதத்தை (148* ஓட்டங்கள்)நிறைவு செய்தார்.(சமநிலை)

3. பிப்ரவரி 3, 1992, அதே ஆஸ்திரேலிய தொடரின் ஐந்தாவது ஆட்டத்தில் 114 ஓட்டங்கள் எடுத்தார்.(தோல்வி)

4. நவம்பர் 28, 1992-தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஜோகனஸ்பெர்க்கின், வாண்டரர்ஸ் மைதானத்தில் 111 ஓட்டங்கள்(சமநிலை)

இதுவரை எடுத்த நான்கு சதங்களுமே இந்தியாவிற்கு வெளியே ஆடுகையில் எடுத்தவை தான்.

1993

5. பிப்ரவரி12, 1993-சென்னை, எம்.ஏ.சி மைதானம், இங்கிலாந்திற்கு எதிராக 165 ஓட்டங்கள்(வெற்றி)

6. ஜூலை 31,1993-எஸ்.எஸ்.சி மைதானம், கொழும்பு, இலங்கைக்கு எதிராக 104* ஓட்டங்கள்.(வெற்றி)

1994

7. ஜனவரி 19, 1994, லக்னோ, இலங்கைக்கு எதிராக, 142 ஓட்டங்கள்(வெற்றி)

8. டிசம்பர் 2, 1994-நாக்பூர், மே.இ தீவின் அதிவேக பந்துவீச்சிற்கு எதிராக 179 ஓட்டங்கள்(சமநிலை)

1996

9. ஜூன் 8,1996-(swing)வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான எட்ஜ்பாஸ்டான் மைதானம்,பிர்மிங்காமில், இங்கிலாந்திற்கு எதிராக 122 ஓட்டங்கள்(தோல்வி)

10. ஜூலை 5, 1996-ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானம், நாட்டிங்காம், இங்கிலாந்திற்கு எதிராக 177 ஓட்டங்கள்.(சமநிலை)

1997

11. ஜனவரி 4, 1997, நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், கேப்டவுன், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 169 ஓட்டங்கள்(தோல்வி)

12. ஆகஸ்ட் 3, 1997, பிரேமதாசா மைதானம், கொழும்பு,இலங்கைக்கு எதிராக 143 ஓட்டங்கள்(சமநிலை)

13. ஆகஸ்ட் 11, 1997, 12 ஆவது சதம் எடுத்த ஒரு வாரத்திற்குள் SSC மைதானம், கொழும்பில் இலங்கைக்கு எதிராக 13 ஆவது சதமெடுத்தார் (139 ஓட்டங்கள்). முதன் முறையாக இரு ஆட்டங்களில் தொடர்ச்சியாக சச்சின் எடுத்த சதங்கள் இந்த இரண்டும்.(சமநிலை)

14. டிசம்பர் 4, 1997, வான்கடே மைதானம், மும்பை, இலங்கைக்கு எதிராக 148 ஓட்டங்கள்(சமநிலை)

1998

15. மார்ச் 9, 1998, எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 155* ஓட்டங்கள்(வெற்றி)

16. மார்ச் 26, 1998, எம்.சின்னசாமி மைதானம், பெங்களூர், ஆஸிக்கு எதிராக 177 ஓட்டங்கள்(தோல்வி)

17. டிசம்பர் 29, 1998, வெலிங்டன், நியூசிலாந்திற்கு எதிராக 113 ஓட்டங்கள்(தோல்வி)

1999

18. ஜனவரி 31, 1999, எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை, பாகிஸ்தானிற்கு எதிரான முதல் சதம்,136 ஓட்டங்கள் (தோல்வி)

முதுகுவலியுடன் சக்லைன் முஷ்டாக்கின் கடுமையான பந்துவீச்சினை சமாளித்து சச்சின் எடுத்த இந்த சதம் பலருக்கு மறக்கவியலாதது. சென்னை ரசிகர்கள் இந்தியாவின் தோல்விக்குப் பின்னரும் பாகிஸ்தான் அணிக்கு எழுந்து நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

19. பிப்ரவரி 28, 1999, SSC மைதானம், கொழும்பு, இலங்கைக்கு எதிராக 124* ஓட்டங்கள். (சமநிலை)

20. அக்டோபர் 30, 1999, PCA மைதானம், மொகாலி, நியூசிலாந்திற்கு எதிராக 126* ஓட்டங்கள்(சமநிலை)

21. அக்டோபர் 30, 1999, சர்தார் பட்டேல் மைதானம், அஹ்மதாபாத், நியூசிலாந்திற்கு எதிராக 217 ஓட்டங்கள்(முதல் இரட்டை சதம், சமநிலை)

22. டிசம்பர் 28, 1999. MCG, மெல்போர்ன், ஆஸிக்கு எதிராக 116 ஓட்டங்கள்(தோல்வி)

2000

23. நவம்பர் 21, 2000, ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானம், டில்லி, சிம்பாப்வேக்கு எதிராக 122 ஓட்டங்கள் (வெற்றி)

24. நவம்பர் 26, 2000VCA மைதானம், நாக்பூர், சிம்பாப்வேக்கு எதிராக 201* ஓட்டங்கள்(சமநிலை)

2001

25. மார்ச் 20, 2001, எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை, ஆஸிக்கு எதிராக 126 ஓட்டங்கள்(வெற்றி)

26. நவம்பர் 3, 2001, தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 155 ஓட்டங்கள்(தோல்வி)

27. டிசம்பர் 13, 2001, சர்தார் பட்டேல் மைதானம், அஹ்மதாபாத், இங்கிலாந்திற்கு எதிராக 103 ஓட்டங்கள்(சமநிலை)

2002

28. பிப்ரவரி 24, 2002, VCA மைதானம், நாக்பூர், சிம்பாப்வேக்கு எதிராக 176 ஓட்டங்கள்(வெற்றி)

29. ஏப்ரல் 20, 2002, குயின்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஆஃப் ஸ்பெயின், மே.இ தீவிற்கு எதிராக 117 ஓட்டங்கள் . (வெற்றி) டான் பிராட்மேனின் 29 சதங்களை சமன் செய்த சதம் இது.

30. ஆகஸ்ட் 23, 2002 லீட்ஸ், இங்கிலாந்திற்கு எதிராக 193 ஓட்டங்கள்(வெற்றி)

31. நவம்பர் 3, 2002, ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா, மே.இ.தீவிற்கு எதிராக 176 ஓட்டங்கள். (சமநிலை)

2003 ல் காயம் காரணமாக அதிக ஆட்டங்கள் ஆடவில்லை

2004

32. ஜனவரி 4, 2004, SCG மைதானம், சிட்னி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 241* (சமநிலை)

33. மார்ச் 29, 2004, முல்தான், பாகிஸ்தானிற்கு எதிராக 194* ஓட்டங்கள் அப்போதைய அணித்தலைவர் ராகுல் டிராவிட் எடுத்த முடிவு சச்சினை இரட்டை சதம் எடுக்காமல் செய்தது. (வெற்றி)

34. டிசம்பர் 12, 2004, டாக்கா, பங்களாதேஷிற்கு எதிராக 248* ஓட்டங்கள். இதோடு சுனில் கவாஸ்கரின் உலக சாதனையான 34 சதங்களை சமன் செய்தார். (வெற்றி)

2005

35. டிசம்பர் 22, 2005, டெல்லி, இலங்கைக்கு எதிராக 109 ஓட்டங்கள்(வெற்றி) 34 ஆவது சதத்திற்கு பிறகு அடுத்த சதத்தை எடுத்து கவாஸ்கரின் சாதனையை முறியடிப்பதற்கு ஒரு வருடம் ஆகியது சச்சினுக்கு.

இடையில் பலமுறை தொண்ணூறுகளில் ஆட்டமிழந்தார்

2006

2006 ல் ஆடிய ஐந்து டெஸ்ட் ஆட்டத்திலும் சதமேதும் எடுக்கவில்லை. சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்ற சலசலப்பு ஏற்பட்டது இந்த வருடத்தில் தான்.

2007

36. மே 19, 2007, சிட்டகாங்கில் பங்களாதேஷிற்கு எதிராக 101 ஓட்டங்கள். (சமநிலை)

37. மே 26, 2007, டாக்காவில், பங்களாதேஷிற்கு எதிராக 122* (வெற்றி)

2008

38. ஜனவரி 4, 2008, SCG மைதானம் சிட்னியில் 154* ஓட்டங்கள்(தோல்வி) நடுவர்களின் பல தீர்ப்புகள் சர்ச்சைக்கு உள்ளான ஆட்டம்

39. ஜனவரி 25, 2008, அடிலைடு ஓவலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 153 ஓட்டங்கள். சர்வதேச அளவில் இது அவருக்கு 80 ஆவது சதம்(ஒருநாள் ஆட்டங்களின் சதங்களும் சேர்த்து) (சமநிலை)

40. நவம்பர் 6, 2008, நாக்பூரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 109 ஓட்டங்கள். லாராவின் உலக சாதனையான 11,000 ஓட்டங்களை சச்சின் கடந்த ஆட்டம் இது(வெற்றி)

41. டிசம்பர் 15, 2008, சென்னையில் இங்கிலாந்திற்கு எதிராக 103* ஓட்டங்கள்(வெற்றி). மும்பை தாக்குதலுக்கு பின்னர் இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் நாடு திரும்பவா வேண்டாமா என்ற குழப்பத்திற்கு பின்னர் ஆடிய ஆட்டம் இது.

இந்தியர்கள் அனைவருக்கும் இந்த சதத்தை சமர்ப்பிப்பதாக சச்சின் தெரிவித்தார்

2009

42. மார்ச் 20, 2009, ஹாமில்டனில் நியூசிலாந்திற்கு எதிரான சச்சினின் 160 ஓட்டங்கள்(வெற்றி) 33 வருடங்களுக்கு பிறகு நியூசிலாந்தில் இந்தியா வெற்றி பெற வழி வகுத்தது

43. 20 நவம்பர் 2009, அஹ்மதாபாத், இலங்கைக்கு எதிராக 100* ஓட்டங்கள் (சமநிலை)

2010

44. ஜனவரி 18, 2010, சிட்டங்காங்கில், பங்களாதேஷிற்கு எதிராக 105* ஓட்டங்கள்(வெற்றி)

45. ஜனவரி 25, 2010, டாக்காவில், பங்களாதேஷிற்கு எதிராக 143 ஓட்டங்கள்(வெற்றி)

46. பிப்ரவரி 9, 2010, நாக்பூரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 100 ஓட்டங்கள் (தோல்வி)

47. பிப்ரவரி 15, 2010 ஈடன் காடர்ன் மைதானம்,கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 106 ஓட்டங்கள். இந்த வருடத்தில் ஆடிய நான்கு டெஸ்ட் ஆட்டங்களிலும் சதமடித்திருக்கிறார் சச்சின். (வெற்றி)

48. சூலை 28, 2010 - எசு.எசு.சி., கொழும்பு - இலங்கைக்கு எதிராக இரண்டாவது தேர்வுப் போட்டியில் 203 ஓட்டங்கள். (சமநிலை)

49. அக்டோபர் 12, 2010 - சின்னசாமி அரங்கம், பெங்களூரு - ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது தேர்வுப் போட்டியில் 214 ஓட்டங்கள். (வெற்றி)

50. டிசம்பர் 19, 2010, செஞ்சூரியனில் தென்னாபிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் 111* ஓட்டங்கள் (தோல்வி)

2011

51. ஜனவரி 2, 2011, கேப்டவுனில் தென்னாபிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது போட்டியில் 146 ஓட்டங்கள்

விருதுகள்[தொகு]

 • 1994 அர்ஜூனா விருது.
 • 1997-98 ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது.
 • 1997-விஸ்டனின் மிகச் சிறந்த வீரர் விருது.
 • 1999-பத்மசிறீ விருது.
 • 2008-பத்மவிபூஷன் விருது.
 • 2014- பாரத ரத்னா விருது.

பாரத ரத்னா விருது விமர்சனம்[தொகு]

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, ஹாக்கியின் மறைந்த வீரர் தியான் சந்த்திற்கு வழங்க வேண்டியிருந்த விருதை மாற்றி சச்சின் தெண்டுல்கருக்கு வழங்கியதாக இவ்விருதின் தேர்வு முறை குறித்த சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.[21][22]

புகழுரைகள்[தொகு]

 • உலகின் தலை சிறந்த மட்டையாளரும் ஆஸ்திரேலியருமான சர் டான் பிராட்மன் சச்சினின் ஆட்டம் தன்னுடைய ஆட்டத்தைப் போன்றே இருப்பதாகக் கூறியுள்ளார்; பிராட்மேனின் மனைவியாகிய ஜெசியும் அதை ஒப்புக் கொண்டுள்ளார்.
 • 1991-1992 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது வேகப்பந்து வீச்சாளரான மெர்வ் ஹியூஸ் அணித்தலைவரான ஆலன் பார்டரிடம் “இந்த பொடியன் உன்னை விட அதிக ஓட்டங்கள் குவிப்பான்” என்று கூறியிருக்கிறார்.[சான்று தேவை]
 • ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் தனது புத்தகத்தில் உலகின் தலை சிறந்த வீரர்களின் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம் கொடுத்து கவுரவித்துள்ளார்.

ஒரு நாள் போட்டியில் இரட்டைச்சதம்[தொகு]

2010 பிப்ரவரி 24, குவாலியரில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆட்டமிழக்காது 200 ஓட்டங்கள் குவித்து உலக கிரிக்கெட்டில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இந்த மகத்தான சாதனை படைக்க சச்சின் டெண்டுல்கர் எடுத்துக்கொண்ட பந்துகள் வெறும் 147 மட்டுமே!

" இரட்டை சதம் அடித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் இப்படியொரு சாதனையைச் செய்ய வேண்டும் என்ற இலக்கு வைத்து நான் ஆடவில்லை. அணிக்காக ஆடியபோது இந்த சாதனை படைக்க முடிந்தது. 20 ஆண்டுகளாக எனது ஆட்டத்தை ரசித்து உற்சாகப்படுத்தும் என் நாட்டு மக்களுக்கு இந்த சாதனையை அர்ப்பணிப்பதை சிலிர்ப்பாக உணர்கிறேன்!" என்கிறார் கிரிக்கெட் சாதனையாளர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். 40 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை தெண்டுல்கர் சாத்தியப்படுத்தியுள்ளார்.[23] [24]

ஓய்வு[தொகு]

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நவம்பர் 14 முதல் 18 வரை நடைபெறற உள்ள 200 ஆவது டெஸ்ட் போட்டியுடன் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார்.[25][26]

2013 நவம்பர், 15 அன்று மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தனது இறுதி தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் இன்னிங்சில் 74 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 16,000 ஓட்டங்களை எட்ட 79 ஓட்டங்கள் குறைவில் ஆட்டமிழந்தார்.[27]

இவரது ஓய்வின்போது இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது கொடுக்க முடிவு செய்து பின்னர் 2014-ம் ஆண்டு வழங்கப்பட்டது.. இப்பரிசு பெற்ற முதல் விளையாட்டு வீரர் சச்சின் ஆவார். மேலும், மிக இளவயதில் பாரத ரத்னா விருதைப்பெற்ற முதல் இந்தியர் என்கிற சிறப்புக்கும் உரியவர் ஆவார். [28]

மாநிலங்களவை உறுப்பினர்[தொகு]

சச்சின் டெண்டுல்கர் , ஏப்ரல் 27 , 2012 அன்று மாநிலங்களவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார் .[29] மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதில் இருந்து , ஆகத்து 2014 வரை , 3 முறை மட்டுமே அவைக்கு வந்திருந்தார் .[30]

சுயசரிதை[தொகு]

2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி மும்பையில் என் வழியில் விளையாடுகிறேன் (Playing It My Way) என்ற தலைப்பிலான தனது சுயசரிதையை வெளியிட்டார்.[31][32][33]

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "சச்சின் டெண்டுல்கர் (ஆங்கிலத்தில்)". கிரிக்கெட்டு ஆர்க்கைவு. பார்த்த நாள் நவம்பர் 03, 2012.
 2. "This Video Shows Why Sachin Tendulkar Is The Most Respected Cricketer" (in en-US), funniestindian.com, 2017-12-26, https://funniestindian.com/videos/this-video-shows-why-sachin-tendulkar-is-the-most-respected-cricketer/, பார்த்த நாள்: 2018-04-20 
 3. * "Sachin Tendulkar is greatest cricketer in history – Brian Lara". BBC. மூல முகவரியிலிருந்து 16 November 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 November 2013.
 4. சிசோ (சூன் 09, 2012). "சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை, சாதனைகளை விளக்கும் புதிய நூல் வெளியீடு". தட்ஸ்கிரிக்கெட். பார்த்த நாள் நவம்பர் 03, 2012.
 5. "விளையாட்டு வாழ்க்கையில் கூடிய ஓட்டங்கள் (ஆங்கிலத்தில்)". ஈ. எசு. பி. என். கிரிக்கின்போ. பார்த்த நாள் நவம்பர் 03, 2012.
 6. "Records / Combined Test, ODI and T20I records / Batting records ; Most runs in career". ESPNcricinfo (17 November 2013). மூல முகவரியிலிருந்து 21 November 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 17 November 2013.
 7. rediff.com
 8. "Reliving a dream". The Hindu. 6 April 2011. Archived from the original on 19 May 2012. http://www.thehindu.com/life-and-style/nxg/article1604713.ece. பார்த்த நாள்: 6 April 2011. 
 9. "Don Bradman, Shane Warne in Wisden's XI". theaustralian.com. 23 October 2013. Archived from the original on 24 October 2013. http://www.theaustralian.com.au/sport/cricket/don-bradman-shane-warne-in-wisdens-xi/story-e6frg7rx-1226745875416. பார்த்த நாள்: 23 October 2013. 
 10. "WG Grace and Shane Warne in Wisden all-time World Test XI". BBC. 23 October 2013. Archived from the original on 24 October 2013. https://www.bbc.co.uk/sport/0/cricket/24640224. பார்த்த நாள்: 23 October 2013. 
 11. "Sachin Tendulkar in Wisden's All-time World Test XI". NDTV. 23 October 2013. Archived from the original on 23 October 2013. http://sports.ndtv.com/cricket/news/215990-sachin-tendulkar-in-wisdens-all-time-world-test-xi. பார்த்த நாள்: 23 October 2013. 
 12. "Sachin first sportsperson to win country’s highest civilian honour Bharat Ratna". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (16 நவம்பர் 2013). பார்த்த நாள் 16 நவம்பர் 2013.
 13. "Bharat Ratna for Prof CNR Rao and Sachin Tendulkar". Prime Minister's Office (India) (16 நவம்பர் 2013). பார்த்த நாள் 16 நவம்பர் 2013.
 14. "Padma Awards". Ministry of Home Affairs, Government of India (2015). மூல முகவரியிலிருந்து 15 November 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 21 July 2015.
 15. "Bharat Ratna for Prof CNR Rao and Sachin Tendulkar". Prime Minister's Office (16 November 2013). மூல முகவரியிலிருந்து 19 November 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 November 2013.
 16. "Sachin first sportsperson to win country's highest civilian honour Bharat Ratna". Hindustan Times (16 November 2013). மூல முகவரியிலிருந்து 17 January 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 November 2013.
 17. "Sachin Tendulkar and CNR Rao conferred Bharat Ratna". The Times of India. 4 February 2014. Archived from the original on 4 February 2014. https://web.archive.org/web/20140204191430/http://timesofindia.indiatimes.com/sports/cricket/series-tournament/sachin-tendulkar-hangs-his-boots/top-stories/Sachin-Tendulkar-and-CNR-Rao-conferred-Bharat-Ratna/articleshow/29849599.cms. பார்த்த நாள்: 4 February 2014. 
 18. "CNR Rao, Sachin receive Bharat Ratna". The Hindu. 4 February 2014. Archived from the original on 22 February 2014. http://www.thehindu.com/news/national/cnr-rao-sachin-receive-bharat-ratna/article5652196.ece. பார்த்த நாள்: 4 February 2014. 
 19. "Sachin Tendulkar named cricketer of the year". மூல முகவரியிலிருந்து 12 October 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 November 2010.
 20. 1st Test, Australia tour of India at Chennai, Mar 6-10 1998 | Match Summary | ESPNCricinfo, http://www.espncricinfo.com/series/15960/scorecard/63794/India-vs-Australia-1st-Test-Australia-tour-of-India-1997-98/, பார்த்த நாள்: 2018-04-20 
 21. http://indiatoday.intoday.in/story/dhyan-chand-bharat-ratna-sachin-tendulkar-denied-upa-manmohan-singh/1/374649.html
 22. http://sports.ndtv.com/hockey/news/228210-dhyan-chand-deserved-bharat-ratna-before-sachin-tendulkar-says-olympian-son-ashok-kumar
 23. Flawless Tendulkar 200 gives India series - கிரிக்இன்ஃபோ
 24. [1] http://thamizhanedwin.blogspot.com/2008/11/19.html
 25. டெஸ்டுடன் விடைபெறுகிறார் மாஸ்டர்
 26. [2]
 27. "Tendulkar exits for 74, India build lead". Cricinfo. 15 October 2013. http://www.espncricinfo.com/india-v-west-indies-2013-14/content/story/688749.html. 
 28. ரத்தினங்கள் - 43
 29. ANI (28 April 2012). "Mixed reactions to Tendulkar's RS nominationAV-News Videos". Hindustan Times. http://www.hindustantimes.com/audio-news-video/AV-News/Mixed-reactions-to-Tendulkar-s-RS-nomination/Article2-846911.aspx. பார்த்த நாள்: 3 May 2012. 
 30. "சச்சினுக்கு விடுப்பா? மாநிலங்களவை எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு" 1. தீக்கதிர் தமிழ் நாளிதழ் (12 ஆகத்து 2014). பார்த்த நாள் 12 ஆகத்து 2014.
 31. "Sachin Tendulkar's 'Playing It My Way' autobiography to release on November 6". NDTV. பார்த்த நாள் 2 September 2014.
 32. "Sachin Tendulkar to launch his autobiography "Playing It My Way" on r 6". Zee News. பார்த்த நாள் 2 September 2014.
 33. "Sachin Tendulkar’s autobiography releasing on Nov 6". The Hindu. பார்த்த நாள் 2 September 2014.

வெளியிணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:ஓரு நாள் கிரிக்கெட்டில் 10000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சச்சின்_டெண்டுல்கர்&oldid=2628797" இருந்து மீள்விக்கப்பட்டது