இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி
Ramanathapuram C S Murugabhoopathy 1983 DSC05262.JPG
கச்சேரி ஒன்றில் முருகபூபதி
பின்னணித் தகவல்கள்
பிறப்புபெப்ரவரி 14, 1914(1914-02-14)
இறப்புமார்ச்சு 21, 1998(1998-03-21) (அகவை 84)
இசை வடிவங்கள்இந்திய பாரம்பரிய இசை
தொழில்(கள்)மிருதங்கம் வாசிப்பு
குறிப்பிடத்தக்க இசைக்கருவிகள்
மிருதங்கம்

இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி என்பவர் (பெப்ரவரி 14, 1914 - மார்ச் 21, 1998) தென்னிந்தியாவைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் ஆவார். சிறந்த மிருதங்கக் கலைஞர்களாக விளங்கிய பாலக்காடு டி. எஸ். மணி ஐயர், பழனி சுப்பிரமணிய பிள்ளை ஆகியோரின் சம காலத்தவர் முருகபூபதி ஆவார்.[1] இம்மூவரும் ‘மிருதங்க மும்மூர்த்திகள்’ என இசை விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறார்கள்.[1]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

தமிழ்நாட்டின் இராமநாதபுரத்தில் பிறந்த இவர், தனது தந்தை சித்சபை சேர்வையிடம் ஆரம்பகால இசைப் பயிற்சியினை ஆரம்பித்தார். தொடர்ந்து பழனி முத்தையா பிள்ளையிடம் இசையினைக் கற்றார். முருகபூபதியின் மூத்த தமையன் சி. எஸ். சங்கரசிவம் பாகவதர் என்பவர், முருகபூபதி தனக்கென ஒரு பாணியினை வளர்த்துக் கொள்ள பெரிதும் துணை புரிந்தார். இடது கையினால் மிருதங்கத்தில் செய்யப்படும் வாசிப்பு நுணுக்கங்களை, அக்காலத்து தலைசிறந்த மிருதங்கக் கலைஞர்களில் ஒருவரான கும்பகோணம் அழகநம்பி பிள்ளையிடமிருந்து முருகபூபதி கற்றார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

இவர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்திருக்கிறார்:

இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்:[1]

  • மாவேலிக்கரா சங்கரகுட்டி நாயர்
  • காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி
  • கும்பகோணம் பிரேம்குமார்
  • பி. துருவராஜ்
  • ஜி. ஹரிசங்கர்

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Ramanathapuram C S Murugabhoopathy: The Last of the Titans, an Obituary by K S Kalidas, May 1998. Shruti, 164: 15-16.
  2. "Padma Awards Directory (1954-2009)" (PDF). Ministry of Home Affairs. 2013-05-10 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2013-08-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "Sangeet Natak Akademi Puraskar (Akademi Awards) list of Awardees". Sangeet Natak Akademi, http://www.sangeetnatak.org/. பிப்ரவரி 17, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. March 16, 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி); External link in |publisher= (உதவி)
  4. Publication of the Percussive Arts Centre, Bangalore
  5. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 22 டிசம்பர் 2018. 2012-02-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 டிசம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளியிணைப்புகள்[தொகு]