என். ரமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என். ரமணி
N. Ramani
பிறப்பு(1934-10-15)15 அக்டோபர் 1934
பிறப்பிடம்திருவாரூர், தமிழ்நாடு
இறப்பு9 அக்டோபர் 2015(2015-10-09) (அகவை 80)
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)கருநாடக வாத்தியக் கலைஞர்
இசைக்கருவி(கள்)புல்லாங்குழல்
இசைத்துறையில்1939–2015

என். ரமணி (15 அக்டோபர் 1934 - 9 அக்டோபர் 2015) தமிழ்நாட்டைச் சேர்ந்த புல்லாங்குழல் இசைக் கலைஞர் ஆவார்.[1]

பிறப்பும், இசைப் பயிற்சியும்[தொகு]

தமிழ்நாடு திருவாரூரில் 1934 ஆம் ஆண்டு பிறந்த இவர், தனது தாத்தா ஆழியூர் நாராயணசாமி ஐயரிடம்[2] புல்லாங்குழல் இசையைக் கற்கத் தொடங்கினார். ரமணியின் முதல் கச்சேரி சிக்கில் சிங்காரவேலர் ஆலயத்தில் நடந்தது. அதன்பின்னர் 1950ஆம் ஆண்டில் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். தனது உறவினரான புல்லாங்குழல் கலைஞர் டி. ஆர். மகாலிங்கத்திடம் மாணவராக இசை பயின்றார்.

இசை வாழ்க்கை[தொகு]

அனைத்திந்திய வானொலியில் இசை நிகழ்ச்சிகளை செய்துள்ளார். வெளிநாடுகள் பலவற்றிலும் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.

புதுமை நிகழ்ச்சிகள்[தொகு]

  • திருவனந்தபுரம் வெங்கட்ராமன் (வீணை), லால்குடி ஜெயராமன் (வயலின்) இவர்களுடன் இணைந்து இவர் வழங்கிய வேணு - வீணை - வயலின் எனும் சேர்ந்திசை மிகுந்த வரவேற்பினைப் பெற்றது.
  • தனது இளமைக்கால நண்பரான ஏ. கே. சி. நடராஜனுடன் (கிளாரினெட்) இணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தினார்.
  • கே. வீ. நாராயணசுவாமியின் வாய்ப்பாட்டுக் கச்சேரிகளில் புல்லாங்குழல் வாசித்தார்.
  • அரிபிரசாத் சௌராசியா, எம். எஸ். கோபாலகிருஷ்ணன், என். ராஜம், பண்டிட் விசுவமோகன் பட், மேண்டலின் உ. ஸ்ரீநிவாஸ் இவர்களுடன் இணைந்து ஜூகல்பந்திகளை நடத்தினார்.

விருதுகள்[தொகு]

குடும்பம்[தொகு]

இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் என நான்கு குழந்தைகள். இவரின் மகன் தியாகராஜனும், பேரன் அதுல் குமாரும் புல்லாங்குழல் இசைக் கலைஞர்கள் ஆவர்.

மறைவு[தொகு]

புற்றுநோய் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ரமணி 9 அக்டோபர் 2015 அன்று காலமானார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Flautist N. Ramani passes away". தி இந்து. 9 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 10 அக்டோபர் 2015.
  2. "என். ரமணி". தி இந்து. June 23, 2006. Archived from the original on 2012-11-02. பார்க்கப்பட்ட நாள் 2008-05-16. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 22 டிசம்பர் 2018. Archived from the original on 2012-02-12. பார்க்கப்பட்ட நாள் 22 டிசம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._ரமணி&oldid=3674555" இலிருந்து மீள்விக்கப்பட்டது