தேட்டகுடி அரிகர வினாயக்ராம்
தோற்றம்
| தேட்டக்குடி அரிகர வினாயக்ராம் | |
|---|---|
| பின்னணித் தகவல்கள் | |
| பிறப்பு | சூன் 24, 1944 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| இசை வடிவங்கள் | கருநாடக இசை, கலப்பிசை |
| தொழில்(கள்) | தாளயிசை கலைஞர் |
| இசைக்கருவி(கள்) | கடம், மோர்சிங் |
| இசைத்துறையில் | 1951–நடப்பு |
தேட்டக்குடி ஹரிஹர வினாயக்ராம் (Thetakudi Harihara Vinayakram, பி:சூன் 24, 1944), அல்லது பரவலாக விக்கு வினாயக்ராம், கிராமி விருது பெற்ற இந்திய தாளயிசைக் கலைஞர் ஆவார். இவர் மண்குடத்தாலான கடத்தினை கருநாடக இசைக் கச்சேரிகளில் பயன்படுத்துகிறார். மேற்கத்திய மற்றும் இந்துத்தானிக் கலைஞர்களுடன் இணைந்து இசைத்துள்ளார்; இதன்மூலம் தமிழகத்தின் கடத்தின் பெருமையை அனைவரும் அறியச் செய்தவராவார்.
விருதுகள்
[தொகு]- பத்மசிறீ விருது, 2002
- சங்கீத நாடக அகாதமியின் மிக உயரிய விருதான சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் பெருமை, 2012
- பத்ம பூசன் விருது, 2014[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கமல்ஹாசன், வைரமுத்துவுக்கு பத்ம பூஷண் விருது". Retrieved ஜனவரி 27, 2014.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)
