பத்மா சுப்ரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பத்மா சுப்பிரமணியம்
Padma Subrahmanyam DS.jpg
தேசியம் இந்தியா
குடியுரிமைஇந்தியர்
பணிநடனம், நடன அமைப்பாளர், இசையமைப்பாளர், நடன ஆசிரியை, எழுத்தாளர்
அறியப்படுவதுபரதநாட்டியம்
சமயம்இந்து

பத்மா சுப்ரமணியம் (பிறப்பு: 4 பிப்ரவரி 1943, சென்னை) தமிழ்நாட்டைச் சேர்ந்த பரத நாட்டியக் கலைஞர் ஆவார். பரதநாட்டியத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், நடன அமைப்பாளர், இசையமைப்பாளர், எழுத்தாளர், ஆசிரியர் என பல துறைகளிலும் பங்களித்து வருகிறார். இவர் இந்தியாவைப் போன்றே உலக நாடுகளிலும் மிகப் பிரபலமானவர்; இவருடைய சிறப்பைக் குறிக்கும் வகையிலும், மரியாதையின் பொருட்டும் ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் இவர் குறித்து ஆவணப்படங்கள், குறும்படங்கள் எடுத்துள்ளன[சான்று தேவை].

வாழ்க்கை வரலாறு[தொகு]

பத்மா சுப்ரமணியம் தமிழ்த் திரைப்பட இயக்குனர் கே. சுப்ரமணியம் - மீனாட்சி தம்பதியினரின் மகளாவார். இவரது தாயார் மீனாட்சி ஒரு இசையமைப்பாளர், தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் பாடல் எழுதக்கூடியவர். பத்மா, வழுவூர் பி. இராமையா பிள்ளையிடம் பரதம் பயின்றார்.

கல்வி[தொகு]

பத்மா இசையில் இளங்கலையும், மரபிசையியலில் (Ethno-Musicology) முதுகலைப் பட்டமும், நாட்டியத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் பரதம் குறித்து பல புத்தகங்கள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் பலவும் எழுதியுள்ளார். மேலும், கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கான இந்தியத் துணைக்கண்டக் குழுவில்(Indo-Sub-Commision) அதிகாரப்பூர்வமற்ற (Non-Official) உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018. Archived from the original on 2018-03-16. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018. 
  2. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 22 டிசம்பர் 2018. 2012-02-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 டிசம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. Honour for Padma Subrahmanyam

பிற இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மா_சுப்ரமணியம்&oldid=3295883" இருந்து மீள்விக்கப்பட்டது