கி. கஸ்தூரிரங்கன் (அறிவியலாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Dr. Krishnaswamy Kasturirangan
Kasturirangan at IISc.jpg
முனைவர் . கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன்
பிறப்பு 24 அக்டோபர் 1940 (1940-10-24) (அகவை 78)
எர்ணாகுளம், கேரளம், இந்தியா
தேசியம் இந்தியர்
துறை வானியல்/ விண்வெளி அறிவியல், தொழினுட்பம்
பணியிடங்கள் National Institute of Advanced Studies; இந்திய விண்வெளி ஆய்வு மையம்
கல்வி கற்ற இடங்கள் Bachelor of Science with Honours from Ramnarain Ruia College, Matunga (Mumbai),மும்பை பல்கலைக்கழத்தில் இருந்து முதுநிலை பட்டம் மற்றம், 1971ல் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம், குஜராத் பல்கலைக்கழகத்திலிருந்து வானியல் மற்றம் வானியற்பியலில் முனைவர் பட்டம்.
அறியப்படுவது இந்திய விண்வெளித்துறையின் தலைவர் , மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் தொடர்பான அறிக்கை
விருதுகள் பத்மஸ்ரீ, பத்ம பூசன் மற்றும் பத்ம விபூசண்

கி. கஸ்தூரிரங்கன் என்னும் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் (Dr. Krishnaswamy Kasturirangan) (பிறப்பு 24 அக்டோபர்.1940) , ஒரு விண்வெளி அறிவியலாளர்.

வாழ்க்கையும், கல்வியும்[தொகு]

நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் பிறந்தது கேரள மாநிலம் எர்ணாகுளத்தில். மும்பைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலைப்பட்டம். விண்வெளியியல் மற்றும் விண்வெளி இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்

பணிகள்[தொகு]

இந்திய விண்வெளித் துறையில் சேர்ந்து, இந்திய தேசிய செயற்கைகோள்கள் (இன்சாட் வரிசை செயற்கை கோள்கள்), இந்திய தொலை உணர்வுச் செயற்கைக்கோள்கள் (ஐஆர்எஸ் வரிசை செயற்கைக்கோள்கள்), பாஸ்கரா செயற்கைகோள்கள், துருவச் செயற்கைக்கோள், ஏவு வாகனம் (பிஎஸ்எல்வி), என இந்தியாவின் புகழை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் பணியில் பங்கேற்றார். இந்திய விண்வெளித்துறையின் தலைவராகவும் மாநிலங்களவை உறுப்பினராக 1994 முதல் 2003 வரை பணியாற்றினார். 150க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், 6 புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

விருதுகள்[தொகு]

  • சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது.
  • ஸ்ரீ ஹரி ஓம் ஆஷ்ரம் டாக்டர் விக்ரம் சாரா பாய் ப்ரெரிட் விருது
  • எம்.பி. பிர்லா நினைவு விருது.
  • பத்மஸ்ரீ விருது.
  • பத்மபூஷன் விருது. [1]

குறிப்புகள்[தொகு]

  1. தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்14