வாலி (கவிஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கவிஞர் வாலி
பிறப்பு டி. எஸ். ரங்கராஜன்
அக்டோபர் 29, 1931 (1931-10-29) (அகவை 83)
இந்தியாவின் கொடி திருவரங்கம், திருச்சி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு ஜூலை 18, 2013 (அகவை 81)
சென்னை
பணி கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர்

கவிஞர் வாலி (இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், 29 அக்டோபர், 1931 - 18 சூலை 2013) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. ஆனந்த விகடன் இதழில் வாலி தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய‌ 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெயர் பெற்றது. வாலி திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அவர் நடித்த திரைப்படங்களுள் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

பிறப்பும் வளர்ப்பும்[தொகு]

ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட[1] வாலி பிறந்து, வளர்ந்தது திருவரங்கத்தில். தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.

திருவரங்கத்தில் வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிகையில் பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா .

வாலி இறப்பு[தொகு]

மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக, ஜூன் 7-ஆம் தேதி 2013 அன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி அவர் 18 ஜூலை 2013 மாலை 5 மணியளவில் காலமானார்.[2]

வாலி பெயர்க்காரணம்[தொகு]

தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார்.[3]

எழுதிய நூல்கள்[தொகு]

சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள் எழுதியுள்ளார்[1] .அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன். வாலி அவர்களின் 80வது பிறந்தநாள் அன்று நடைபெற்ற விழாவில், 'வாலி 1000' என்ற பெயரில், வாலியின் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையிசைப்பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது. அவ்விழாவில் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், சூர்யா, பத்திரிகையாளர் சோ உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

குறிப்பிடத்தக்க பாடல்களில் சில[தொகு]

பாடல் படம் வருடம்
" ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை... " ஆயிரத்தில் ஒருவன் 1968
" மல்லிகை என் மன்னன் மயங்கும்... " தீர்க்க சுமங்கலி 1974
" மாதவிப்பொன் மயிலாள் தோகைவிரித்தாள்... " இரு மலர்கள் 1967
நான் ஆணையிட்டால் எங்க வீட்டு பிள்ளை (1965)
காற்று வாங்க போனேன் - கலங்கரை விளக்கம் (1965)
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ- சந்திரோதயம் (1966)
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா - எதிர்நீச்சல் (1968)
இறைவா உன் மாளிகையில்- ஒளிவிளக்கு (1968)
அந்த நாள் ஞாபகம் - உயர்ந்த மனிதன் (1968)
புன்னகை மன்னன் பூவிழிகண்ணன்- இருகோடுகள் (1969)
ஆண்டுக்கு தேதி சுபதினம் (1969)
மதுரையில் பறந்த மீன்கொடியை- பூவா தலையா (1969)

விருதுகள்[தொகு]

  • பத்மஸ்ரீ விருது-2007
  • 1973-ல் 'இந்திய நாடு என் வீடு' என்ற பாரத விலாஸ் திரைப்படப் பாடலுக்காகக் கிடைத்த இந்திய தேசிய விருதை மறுத்தார்.

வாலி ஐந்துமுறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர்[4].

எழுதிய திரைப்பாடல்கள்[தொகு]

கீழே காண்பது வாலி எழுதிய பாடல்களின் தொகுப்பு ஆகும். இது முழுமையான பட்டியல் அல்ல.

ஆண்டு திரைப்படம் பாடல்(கள்) பிற குறிப்புகள்
2014 காவியத் தலைவன் "அல்லி அர்ச்சுனா" கடைசி திரைப்படம்
திருடன் போலீஸ் "மூடு பனிக்குள்"
யான் "ஏ லம்பா லம்பா"
ராமானுஜன் "நாராயணா"
நான் தான் பாலா "திரு வாய்"
கோச்சடையான் "மெதுவாகத்தான்"
பண்ணையாரும் பத்மினியும் "எனக்காக பிறந்தாயோ"
"பேசுறேன் பேசுறேன்"
"உனக்காக பிறந்தேனோ"
2013 என்றென்றும் புன்னகை "கடல் நான்தான்"
பிரியாணி "நானா நானா"
"மிஸ்சிப்பி"
மரியான் "சொனாபரியா"
"நேற்று அவள்"
தில்லு முல்லு 2014 "கை பேசி"
எதிர்நீச்சல் "எதிர்நீச்சல்"
"வெளிச்சப் பூவே"
உதயம் தே நெ 4 " இன்றோடு தடைகள்"
அலெக்ஸ் பாண்டியன் "ஒன்னாம் கிளாஸ்"
கண்ணா லட்டு தின்ன ஆசையா "ஏ உன்னைத்தான்"
"பர்த் டே"
"டூயட் சாங்"
2012 போடா போடி "அப்பன் மவனே வாடா"
மிரட்டல்
தடையறத் தாக்க
ஆதலால் காதல் செய்வீர் "தப்புத் தண்டா"
2011 ஒஸ்தி "கலாசலா"
"ஒஸ்தி மாமே"
மங்காத்தா "மச்சி ஓப்பன் தி பாட்டில்"
"நண்பனே"
வெடி "காதலிக்க பெண் ஒருத்தி"
சட்டப்படி குற்றம்
ஆடு புலி
உயர்திரு 420
அய்யன் "விடுதலைக் குயில் நான்"
மாவீரன் "பொன்னான கோழிப் பொண்ணு"
"வண்டினத்தைச் சும்மா சும்மா"
"ஆசை ஆசை"
கண்டேன் "யாவருக்கும் தலைவன்"
எங்கேயும் காதல் "தீ இல்லை"
"நங்கை நீதானே செங்கை"
பொன்னர் சங்கர்
2010 பாணா காத்தாடி "தாக்குதே கண் தாக்குதே"
நினைவில் நின்றவள் அனைத்து பாடல்களும்
சுறா "வெற்றிக்கொடி ஏத்து"
தீராத விளையாட்டுப் பிள்ளை "தீராத விளையாட்டுப் பிள்ளை"
அகராதி
வாலிபன் சுற்றும் உலகம்
லீலை
தொட்டுப்பார்
கோவா "ஊரு நல்ல ஊரு"
"அடிடா நையாண்டிய"
"கோவா"
"இடை விழி"
குரு சிஷ்யன் (2010)

திரைப்படப் பட்டியல்[தொகு]

1950களில்[தொகு]

1960களில்[தொகு]

1970-1974[தொகு]

1975-1979[தொகு]

1980-1984[தொகு]

1985-1989[தொகு]

1990-1994[தொகு]

1995-1999[தொகு]

2000-2004[தொகு]

2005-2009[தொகு]

2010[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

Wikinews-logo.svg
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலி_(கவிஞர்)&oldid=1897235" இருந்து மீள்விக்கப்பட்டது