உன்னைச் சொல்லி குற்றமில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உன்னை சொல்லி குற்றமில்லை
இயக்கம்அமீர்ஜான்
தயாரிப்புராஜம் பாலச்சந்தர்
புஷ்பா கந்தசாமி
கதைகிரேசி மோகன் (வசனம்)
திரைக்கதைஅனந்து
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுசி.எஸ்.ரவிபாபு
படத்தொகுப்புஎஸ்,எஸ்.நசிர்
கலையகம்கவிதாலயா
விநியோகம்கவிதாலயா
வெளியீடுமார்ச்சு 17, 1990 (1990-03-17)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உன்னை சொல்லி குற்றமில்லை 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படம் அதிரடித் திரைப்பட வகையைச் சார்ந்தது. இத்திரைப்படத்தை அமீர்ஜன் இயக்கியுள்ளார் , கார்த்திக் மற்றும் சித்தாரா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை தயாரித்தவர்கள் ராஜம் பாலசந்தர் மற்றும் புஷ்பா கந்தசாமி. இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். 17 மார்ச், 1990 அன்று திரைப்படம் வெளியிடப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த கராத்தே நிபுணரான சிகன் ஹுசைனி இத்திரைப்படத்தின் முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.[1][2][3]

கதை[தொகு]

படித்த இளைஞரான பாலு கிராமத்திலிருந்து பணக்காரர் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் நகரத்திற்கு வருகிறார். முதலில் காவல் துறையினருக்கு தகவல் கொடுப்பவராக வேலை செய்கிறார். காவல்துறை கண்காணிப்பாளரான வீரபாண்டியனின் மகள் ஜானகியை காதல் செய்கிறார். வீரபாண்டியன் தனது மகளை யாராவது காதலிக்கிறார்களா என்று கண்காணிக்கும்படி பாலுவிற்கு ஆணை பிறப்பிக்கிறார். இதே நேரத்தில் வீரபாண்டியனின் எதிரியான குமார் வீரபாண்டியனின் மகளை கடத்த திட்டமிடுகிறார். அவர்களிடமிருந்து பாலு ஜானகியை காப்பாற்றுகிறார். முறைகேடாக போதைப்பொருட்களை வர்த்தகம் செய்யும் கும்பலை பிடித்ததனால் வீரபாண்டியன் துணைக் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெறுகிறார். பாலு அவரின் தகவல் கொடுக்கும் வேலையை விட்டு நீங்கி விடுகிறார். குற்றவாளிகளிடமிருந்து பணத்தைத் திருடி பாலு பணக்காரர் ஆகிறார். பாலுவின் தங்கை பார்வதி மீது குமார் காதல் கொள்கிறார். வீரபாண்டியன் பாலுவை கைது செய்து சிறையில் அடைக்கிறார். இந்த வேலையில் குமார் நல்லவன் இல்லை என்று பார்வதி அறிந்துகொள்கிறார். அதனால் குமார் பார்வதியை கொன்றுவிடுகிறார். நடந்த அனைத்திற்கும் தர்மராஜ் தான் காரணம் என்று ஜானகி கூறியவுடன் வீரபாண்டியன் பாலுவை விடுதலை செய்கிறார். பாலு குமாரையும், தர்மராஜையும் அவரின் தங்கை மரணத்திற்காக கொன்றுவிடுகிறார்.

இசை[தொகு]

உன்னை சொல்லி குற்றமில்லை திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார் . பாடல்கள் 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நான்கு பாடல்கள் வெளியிடப்பட்டன, அவற்றின் பாடலாசிரியர் வாலி.[4][5]

வரவேற்பு[தொகு]

இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களுடன் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Find Tamil Movie Unnai Solli Kutramillai". jointscene.com. பார்க்கப்பட்ட நாள் 2012-01-05.
  2. "Unnai Solli Kutramillai". popcorn.oneindia.in. பார்க்கப்பட்ட நாள் 2012-01-05.
  3. "Filmography of unnai solli kutramillai". cinesouth.com. பார்க்கப்பட்ட நாள் 2012-01-05.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Unnai Solli Kutramillai Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2012-01-05.
  5. "Unnai Sollo Kutramillai - Illayaraja". thiraipaadal.com. பார்க்கப்பட்ட நாள் 2012-01-05.