சூர்யா (நடிகர்)
சூர்யா | |
---|---|
![]() | |
பிறப்பு |
சரவணன் சூலை 23, 1975 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1997 – முதல் |
சமயம் | இந்து |
பெற்றோர் |
சிவகுமார், லட்சுமி |
வாழ்க்கைத் துணை | ஜோதிகா (2006) |
பிள்ளைகள் | தியா, தேவ் |
சூர்யா (பிறப்பு - சூலை 23, 1975), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.[1] இவர் நடிகர் சிவகுமாரின் மகனும் "பருத்திவீரன்" புகழ் கார்த்தியின் அண்ணனும் ஆவார்.[2] மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதற்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவர் அறியப்படுகிறார். இருமுறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்.[1][3] நடிகை ஜோதிகாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று மணந்துக் கொண்டார்.[4] இவர்களுக்கு ஏப்ரல் 10, 2007 அன்று பெண்குழந்தை பிறந்தது.
பொருளடக்கம்
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
சரவணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் நடிகர் சிவக்குமாரின் மகனும் நடிகர் கார்த்தியின் அண்ணனும் ஆவார். இவர் லயோலா கல்லூரியில் இளங்கலை முடித்தவர். 2006ல் நடிகை ஜோதிகாவை விரும்பி பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தேவ், தியா என்ற குழந்தைகள் உள்ளனர். தற்போது (2012-13) சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார்.
திரைப்பட வாழ்க்கை[தொகு]
இவர் மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதில் மிகுந்த திறன்மிக்கவராக விளங்குகிறார். இவர் நந்தா திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதினை வென்றுள்ளார்.
பொது வாழ்க்கை[தொகு]
பொதுச்சேவை மற்றும் தொண்டு[தொகு]
அகரம் ஒரு பொது நலன் கருதிய, லாப நோக்கற்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஏழைக் குழந்தைகளின் கல்வியில் இத்தொண்டு நிறுவனம் பங்காற்றி வருகிறது.[5]
நடித்த திரைப்படங்கள்[தொகு]
தயாரித்த திரைப்படங்கள்[தொகு]
ஆண்டு | திரைப்படம் | மொழி | இயக்குனர் |
---|---|---|---|
2015 | 36 வயதினிலே | தமிழ் | ரோசன் ஆன்ட்ரீவ் |
பசங்க 2 | தமிழ் | பாண்டியராஜ் | |
2016 | 24 | தமிழ் | விக்ரம் குமார் |
2017 | மகளிர் மட்டும் ![]() |
தமிழ் | பிரம்மா |
வெளியிணைப்புகள்[தொகு]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "சூர்யா". தமிழ் திரை உலகம். பார்த்த நாள் நவம்பர் 11, 2012.
- ↑ சங்கர் (அக்டோபர் 30, 2012). "நடிகர் சிவகுமாருக்கு என்ன ஆச்சு?". ஒன்இந்தியா. பார்த்த நாள் நவம்பர் 11, 2012.
- ↑ "சூர்யா, சந்தியாவுக்கு பிலிம்பேர் விருது!". ஒன்இந்தியா (பெப்ரவரி 5, 2004). பார்த்த நாள் நவம்பர் 11, 2012.
- ↑ "சூர்யா - ஜோதிகா செப். 11ல் திருமணம்!". ஒன்இந்தியா (ஆகத்து 6, 2006). பார்த்த நாள் நவம்பர் 11, 2012.
- ↑ "ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவ முன்வர வேண்டும்: சூர்யா வேண்டுகோள்". (12 சூன், 2016). தி இந்து தமிழ்