ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்ரீகாந்த்
பிறப்புராஜாவெங்கட்ராமன்
1940
ஈரோடு
பணிதிரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1965-தற்காலம்

ஸ்ரீகாந்த் 1960களில் இருந்து தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வரும் ஒரு மூத்த நடிகர் ஆவார். இவர் 1965 இல் இயக்குநர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்.[1] நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் நெருங்கிய நண்பரான இவர்,[2] திரையுலகில் நுழையும் முன் அமெரிக்கத் தூதரகத்தில் பணிசெய்தார்.[3] இவர் நிறைய படங்களில் சிவாஜி கணேசன், முத்துராமன் , ஜெய்சங்கர் போன்ற நடிகர்களோடு துணைப் பாத்திரங்களில் நடித்தார். பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களோடு எதிர்நாயகனாகத் தோன்றினார். ரஜினி கதாநாயகனாக நடித்த முதல் படமான பைரவியில் முதன்மை எதிர்நாயகனாக நடித்தது இவரேயாவார். இவர் கதைநாயகனாக நடித்து 1974 இல் வெளிவந்த திக்கற்ற பார்வதி திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றது.[4]

நடித்த சில திரைப்படங்கள்[தொகு]

ஸ்ரீகாந்த் தமிழில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சில குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் பின்வருவன:

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sridhar (Director)". Nilacharal.com (2008-10-20). பார்த்த நாள் 2011-06-04.
  2. "Life & Style / Metroplus : All the world's a stage". The Hindu (2010-02-02). பார்த்த நாள் 2011-06-04.
  3. Malathi Rangarajan (2010-11-18). "Arts : Vignettes from a veteran". The Hindu. பார்த்த நாள் 2011-06-04.
  4. "21st National awards for films". Directorate of Film Festivals. மூல முகவரியிலிருந்து 28 செப்டம்பர் 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 4 June 2011.