ஈரோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஈரோடு
மாநகராட்சி
ஈரோடு சந்திப்பு இரயில் நிலையம்
ஈரோடு சந்திப்பு இரயில் நிலையம்
அடைபெயர்(கள்): மஞ்சள் மாநகரம், நெசவு மாநகரம், கைத்தறி மாநகரம்
ஈரோடு is located in தமிழ் நாடு
ஈரோடு
ஈரோடு
ஈரோடு is located in இந்தியா
ஈரோடு
ஈரோடு
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
ஆள்கூறுகள்: 11°20′27″N 77°43′02″E / 11.34083°N 77.71722°E / 11.34083; 77.71722ஆள்கூற்று: 11°20′27″N 77°43′02″E / 11.34083°N 77.71722°E / 11.34083; 77.71722
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு
பகுதிகொங்கு நாடு
அரசு
 • வகைமாநகராட்சி
 • Bodyஈரோடு மாநகராட்சி
 • மக்களவை உறுப்பினர்அ. கணேசமூர்த்தி
 • சட்டமன்ற உறுப்பினர்கே. வி. இராமலிங்கம் (ஈரோடு மேற்கு)
கே. எஸ். தென்னரசு (ஈரோடு கிழக்கு)
 • மாநகர முதல்வர்காலியிடம்
 • மாவட்ட ஆட்சியர்திரு. சி. கதிரவன் இ. ஆ. ப.
பரப்பளவு
 • மாநகராட்சி109.52
ஏற்றம்183
மக்கள்தொகை (2011)
 • மாநகராட்சி1,57,101
 • பெருநகர்5,21,891
மொழிகள்
 • அலுவல்தமிழ் மொழி
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு63800x
இந்தியாவில் தொலைபேசி எண்கள்91 (424)
வாகனப் பதிவுTN-33, TN-86, TN-56
சென்னையிலிருந்து தொலைவு350 கி.மீ (220 மைல்)
பெங்களூரிலிருந்து தொலைவு220 கி.மீ (140 மைல்)
கோவையிலிருந்து தொலைவு89 கி.மீ (55 மைல்)
கன்னியாகுமரியிலிருந்து தொலைவு400 கி.மீ (250 மைல்)
இணையதளம்https://erode.nic.in/ta/

ஈரோடு (ஆங்கிலம்:Erode), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தின் தலைநகரமாக இருக்கும் மாநகராட்சி ஆகும். இது மாநில தலைநகரான சென்னையிலிருந்து தென்மேற்கு திசையில் 400 கிலோமீட்டர் (249 மைல்) தொலைவிலும், காவிரி மற்றும் பவானி ஆறுகளின் நதிக்கரையில் அமைந்துள்ளது. இதன் இரட்டை நகரமான பள்ளிபாளையமானது, காவிரி நதியின் கிழக்கு கரையில் நாமக்கல் மாவட்ட அதிகாரத்தின் கீழ் அமைந்துள்ளது.

பெயர்க் காரணம்[தொகு]

நவீன வரலாற்றாசிரியர்கள் ஈரோடு எனும் சொல்லானது ”இரு ஓடை” எனும் இரட்டை சொற்களிலிருந்து வந்ததாகக் கூறுகின்றனர்.

சூரம்பட்டியின் பெரும்பள்ளம், பிராமண பெரிய அக்ரஹாரம் மற்றும் காசிபாளையத்தின் காளிங்கராயன் கால்வாய்ப் பகுதியும் தற்போது ஈரோடு மாநகராட்சிப்பகுதியின் எல்லைகளாகத் திகழ்கின்றன. ஆனால் பழைய ஈரோடு நகராட்சியில் கால்வாய்கள் ஏதுமில்லாமல் இருந்தது.

பைரவ புராண விளக்கவுரையில், சிவனின் மாமனாரான தட்சன், தாம் நடத்திய யாகத்திற்கு தமது மருமகனான இறைவன் சிவனை கூப்பிடவே இல்லை, அவரது மனைவி தட்சாயினி தமது கணவர் விருப்பத்திற்கு எதிராக யாகத்திற்கு வந்தாள், யாகத்தில் தமது கணவரை தந்தை இழிவுபடுத்தியதால் மனமுடைந்து திரும்பினாள். மேலும் அவள் சிவனிடம் திரும்பியபின் சிவன் கோபமுற்று தட்சாயினியை எரித்தார் எனக்கூறுகிறது. அதை கேட்ட பிரம்மா தன் ஐந்தாவது தலையை துண்டித்தார். அந்த மண்டை ஓடு சிவனை ஒட்டிக்கொண்டு பிரம்மதோஷம் பிடித்தது. பிரம்மதோஷத்தின் காரணமாக சிவன் இந்தியா முழுவதும் சுற்றினார். அப்போது ஈரோடு வந்து போது இங்குள்ள கபால தீர்த்தத்தில் நீராடியதால் மண்டை ஓடு சிதைந்தது. இந்த மண்டை துணுக்குகள், ஈரோட்டினை சுற்றியுள்ள வெள்ளோடு (Vellode ("வெள்ளை மண்டை")), பேரோடு (Perode ("பெரிய மண்டை")) மற்றும் சித்தோடு (Chithode ("சிறிய மண்டை")) ஆகிய இடங்களில் விழுந்ததாக கூறுகிறது. அவற்றின் பெயர்களும் முன்னுதாரணமாக அமைந்துள்ளன. கபால தீர்த்தமானது ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலின் இடதுபுறத்தில் உள்ளதை இன்றும் காணலாம். மேற்கண்டவாறு வரலாற்றினை பைரவ புராணமானது விளக்குகிறது. வைஷ்ணவர் அவதாரங்களில் குறிப்பிடத்தக்க அவதாரமான கூர்ம அவதாரத்திற்கான அடித்தளமாக இது திகழ்வதாக சான்றுகள் உள்ளன.

வரலாறு[தொகு]

ஈரோடு மாவட்டத்தின் வட்டங்கள்

ஈரோடு நகரமானது உள்ளூர் கங்கை வம்ச அரசர்களான சேர மன்னர்கள் மற்றும் மேற்கு கங்கை வம்ச அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. தாராபுரமானது அவர்களின் தலைமையகமாக திகழ்ந்தது. சோழர்கள் ஆட்சிக்கு பின்னர், முஸ்லிம்கள் (மோடின் சுல்தான் (Modeen Sulthans)) மதுரை நாயக்கர்களின் கீழ் ஆட்சிபுரிந்தனர்.

ஐதர் அலி ஆட்சிக்கு பின் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் மாவீரன் தீரன் சின்னமலை உதவியுடன் ஆதிக்கத்தினை செலுத்தினர். 1799 இல், திப்பு சுல்தான் தமது ஆட்சியினை பிரிட்டிஷ் அரசிடம் இழந்தார், சங்ககிரி மலைக் கோட்டையில் தீரன் சின்னமலையின் மறைவிற்கு பின், கிழக்கு இந்திய கம்பனியானது ஆட்சி புரிந்தது.

ஹைதர் அலி ஆட்சியின் போது, ஈரோடு நன்கு புனரமைக்கப்பட்டு 300 வீடுகள் மற்றும் 1500 மக்கள் தொகை கொண்ட செழிப்பான நகரமாக இருந்தது. சுமார் 4000 சிப்பாய்கள் மூலம் கேர்ரிசன் களிமண் கோட்டையை, கிழக்கு நோக்கிய எல்லையாக (பட்சன் குறிப்பு - 1800 ஆம் ஆண்டு நவம்பர் 7 மற்றும் 8)வும், வடக்கில் காவிரி ஆற்றின் மீது காளிங்கராயன் கால்வாய் வெட்டப்பட்டதால் தென்னந்தோப்புகள் மற்றும் வளமான நிலங்களால் சூழப்பட்டு இருந்தது.

அடுத்தடுத்த மராட்டிய, மைசூர் மற்றும் பிரிட்டிஷ் படையெடுப்புகள் காரணமாக வார்ஸ் கோட்டை பாதுகாப்பு அரண் உட்பட, கிட்டத்தட்ட சிதைந்த ஈரோடு நகரமாக மாறியது. எனினும் பிரிட்டிஷ் சமாதானத்தால் மக்கள் திரும்பி இங்கு குடியேறினர். ஒரு ஆண்டுக்குள் அது வளர்ச்சி காட்ட ஆரம்பித்தது.

கேர்ரிசன் 1807இல் விலகிக்கொண்டது, நகரின் மையத்தில் பாழாக்கி கோட்டையை 1877 ஆம் ஆண்டு பஞ்சத்தின் போது நிவாரண வேலை மூலம் சரி செய்தது. பாதுகாப்பு அரண் உள்ள இடத்தில் தற்போது வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் கோட்டை இருந்த இடத்தில் சிவன் மற்றும் விஷ்ணு ஆகிய இரு இந்து மதக் கோயி்ல்கள் தற்போது இருக்கின்றன.

பண்டைய கொங்கு கால வரலாற்றின் படி சங்க கால கொங்கு பகுதியின் ஒரு பாகமாகவே ஈரோடு திகழ்ந்தது. இராஜ ராஜ சோழனின் ஆட்சியின் கீழ் இப்பகுதியினை ராஷ்ட்ராகுட்டாக்கள் கோசம்புதுரினை தலைமை இடமாக கொண்ட கோசாரஷ் என்ற துருப்புகள் எடுத்துக் கொண்டனர். அவர்கள் கோவையில் பயிற்சி பெற ஏதுவாக தங்கும் பகுதியாக பயன்படுத்தினர். இதை சாளுக்கியர்கள் தங்கள் பகுதியாக்கி கொண்டனர். பின்னர் மதுரை பாண்டிய மன்னர்களும் ஒய்சாளர்களும் தனதாக்கி கொண்டனர்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

மதவாரியான கணக்கீடு[1]
மதம் சதவீதம்(%)
இந்துக்கள்
  
83.15%
முஸ்லிம்கள்
  
12.37%
கிறிஸ்தவர்கள்
  
3.94%

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஈரோடு மாநகரம் 109.52 சகிமீ பரப்பளவும், 74 மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களையும், 4,98,121 மக்கள்தொகையும் கொண்டது. இவ்வூரின் அமைவிடம் 11°21′N 77°44′E / 11.35°N 77.73°E / 11.35; 77.73 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 183 மீட்டர் (600 அடி) உயரத்தில் இருக்கின்றது. இங்கு இந்துக்கள் 83%, முஸ்லிம்கள் 12% மற்றும் கிறிஸ்தவர்கள் 4% ஆகவுள்ளனர்.[1]

மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்[தொகு]

மாநகராட்சி அதிகாரிகள்
மாநகர முதல்வர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்ற உறுப்பினர் கே. வி. இராமலிங்கம் (ஈரோடு மேற்கு)
சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். தென்னரசு (ஈரோடு கிழக்கு)
மக்களவை உறுப்பினர் அ. கணேசமூர்த்தி

ஈரோடு மாநகரமானது, ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிகள் என இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், கே. வி. இராமலிங்கம் என்பவர் அதிமுக சார்பில் ஈரோடு மேற்கு தொகுதியிலிருந்தும் மற்றும் கே. எஸ். தென்னரசு என்பவர் அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அ. கணேசமூர்த்தி வென்றார்.

புவியியல் மற்றும் காலநிலை[தொகு]

ஈரோட்டின் உள்ளூர் திட்டக் குழுமம் 700 ச.கி.மீ-ஆகத் திகழ்கிறது. பொதுவாக ஈரோடு குறைந்த மழை மற்றும் ஒரு வறண்ட காலநிலையினை கொண்டு உள்ளது. அதிகபட்ச மழையானது கோபிச்செட்டிபாளையத்தில் பதிவு செய்யப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாலக்காட்டு இடைவெளியானது கோயம்புத்தூர் மாவட்டம் காலநிலையினை வறண்ட தன்மையாக மாற்றுகிறது. பாலக்காட்டு கணவாய் வழியாக மேற்கு கடற்கரையிலிருந்து வரும் பருவகாற்று, அதன் ஈரப்பதத்தை இழப்பதால் கோயம்புத்தூர் மாவட்ட பகுதிகளும், ஈரோடு பகுதியும் உலர் அடைகின்றன.

பொதுவாக இங்கே பருவ மழை சீசன் போது தவிர மற்ற நாட்கள் முழுவதும் மிதமான-வறண்ட வானிலை உள்ளது. ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் வசந்த காலங்களாக உள்ளன, ஆனால் மார்ச் மாதம், தொடங்கி மே இறுதி வரை கத்திரி வெயில் தொடர்வதால் அதிகபட்ச வெப்பநிலையினை எட்டுகிறது. பொதுவாக மே மாதத்தில் அதிகபட்ச வெப்பமானது பதிவு செய்யப்படுகிறது. இந்த காலத்தில் குறைந்த மழை பொழிவானது வெப்பநிலை குறைக்க முடியாமல் இருக்கிறது. சூன்-ஆகத்து காலத்தில் காலநிலை வசந்த காலநிலையாக மாறுகிறது. இந்த முன் பருவ காலத்தில், வெப்பநிலையில் அதன் போக்கு தலைகீழாகிறது. செப்டம்பர் மாதத்தில் இருண்ட வானிலை நிலவிய போதிலும் மழையளவு மிகக்குறைந்த அளவே உள்ளன. வட கிழக்கு பருவமழை மூலம் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் மழை பெய்கிறது. டிசம்பர் மாதத்தில் தீவிரமடைந்து தெளிவான வானிலையை பெற்றுவிடுகிறது.

முக்கிய தொழில்கள்[தொகு]

இங்கு மஞ்சள் அதிகளவில் பயிரிடப்பட்டு, வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கைத்தறி, விசைத்தறி ஜவுளி பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பிற்கு புகழ் பெற்றது. எனவே இது கைத்தறி நகரம் என்று அழைக்கப்படுகிறது.

உற்பத்தி ரகங்களான பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தரைப்பாய்கள், லுங்கிகள், அச்சிடப்பட்ட துணிகள், துண்டுகள், கால்சட்டைகள் போன்ற பொருட்களை மொத்தமாக இங்கே சந்தைப்படுத்தப்படுகின்றன. இப்பகுதி பருத்தி விளைச்சலுக்கு சாதகமாக உள்ளது. பஞ்சாலைகளும் மோட்டார் வாகன உதிரிபாக தொழிற்சாலைகளும் இங்குள்ள முக்கிய தொழில்களுள் ஒன்றாகும்.

உலகமுழுவதும் ஏற்றுமதி[தொகு]

ஜவுளிப் பொருட்களான துண்டுகள், படுக்கை விரிப்புகள், லுங்கிகள், மற்றும் மஞ்சள் ஆகியன உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

முக்கிய சுற்றுலாத்தலங்கள்[தொகு]

திண்டல் முருகன் கோயில்

தேவாரத் திருத்தலங்கள்[தொகு]

பவானி சங்கமேசுவரர் கோயில், கொடுமுடி மகுடேசுவரர் கோயில் என தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளன.

பிற கோவில்கள்[தொகு]

 • நாகேஸ்வரர் திருக்கோவில் தலையநல்லூர் சிவகிரி
 • பொன்காளியம்மன் கோவில் தலையநல்லூர் சிவகிரி
 • வேலாயுதசுவாமி கோவில் சிவகிரி
 • ஆருத்ர கபாலீஸ்வரா் கோவில்
 • மகிமாலீஸ்வரா் திருக்கோவில்
 • பொிய மாாியம்மன் வகையறா கோவில்கள்
 • கொங்காலம்மன் கோவில்
 • அரங்கநாதா் திருக்கோவில்
 • கொண்டத்து காளியம்மன் திருக்கோவில்
 • ஷீரடி சாய்பாபா திருக்கோவில், வள்ளிபுரத்தான் பாளையம்
 • சாய்பாபா திருக்கோவில், இரயில்வே காலனி
 • சித்தி விநாயகா் திருக்கோவில், இரயில்வே காலனி
 • கோட்டை முனீஸ்வரன் திருக்கோவில்
 • மாாியம்மன் திருக்கோவில், வீரப்பன்சத்திரம்
 • சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், கருங்கல்பாளையம்
 • கோதண்டராமா் கோவில், கருங்கல்பாளையம்
 • காமாட்சி அம்மன் திருக்கோவில், கருங்கல்பாளையம்
 • வலம்புாி விநாயகா் திருக்கோவில், மாநகராட்சி கட்டிட வளாகம்
 • கோட்டை அங்காளம்மன் திருக்கோவில்
சிவரஞ்சனி உணவகம் அருகே பிரப் சாலை

வட்டச் சாலை (Ring Road)[தொகு]

நெரிச்சல் மிக்க ஓர் சந்திப்பு

ஈரோடு மாநகரின் வாகன நெரிச்சலை குறைப்பதற்காக வட்டச் சாலையானது இரண்டு கட்டங்களாக அமைக்கப்படவுள்ளது. முதல் கட்டத்தில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொக்கராயன்பேட்டையிலிருந்து திண்டல் வரை 14.8 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்கப்படுகிறது. இதன் தற்போதைய அகலம் 7 மீ ஆக இருப்பினும் எதிர்கால விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு 30 மீ அளவுக்கு நிலம் கையக்கப்படுத்தப்பட்டுள்ளது. இது கொக்கராயன்பேட்டை, லக்காபுரம், 46பு-தூர், ஆணைக்கல்பாளையம், பெரியசடையம்பாளையம், ஜீவா நகர் வழியாகப் பெருந்துறை சாலையில் உள்ள பவளத்தான்பாளையத்தைச் சென்றடைகிறது.[4][5][6]. இரண்டாவது கட்டத்தில் திண்டல்மேட்டிலிருந்து பவானி சாலையையோ அல்லது சித்தோட்டுடனோ இணைக்க திட்டமிட்டுள்ளார்கள். இதன் நீளம் 9.5 கி.மீ ஆகும். இதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீடு மிகவும் அதிகம் என்பதால், இதற்கான அடிப்படை பணிகளுக்கான அரசு ஒப்புதல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. எனவே தற்காளிகத் தீர்வாக, தற்போது பயன்பாட்டிலிருக்கும் திண்டல்-வில்லரசம்பட்டி-பெரியசேமுர் இணைப்பு சாலையை பல்வழித்தடமாக விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவ்வூரில் பிறந்த புகழ்பெற்ற மனிதர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரோடு&oldid=2815058" இருந்து மீள்விக்கப்பட்டது