போடிநாயக்கனூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
போடிநாயக்கனூர்
—  முதல் நிலை நகராட்சி  —
போடிநாயக்கனூர்
இருப்பிடம்: போடிநாயக்கனூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°01′N 77°21′E / 10.02°N 77.35°E / 10.02; 77.35ஆள்கூற்று: 10°01′N 77°21′E / 10.02°N 77.35°E / 10.02; 77.35
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
நகர்மன்றத் தலைவர் வி. ஆர். பழனிராஜ்
மக்கள் தொகை 73,430 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


353 metres (1,158 ft)

போடிநாயக்கனூர் (ஆங்கிலம்:Bodinayakkanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 10°01′N 77°21′E / 10.02°N 77.35°E / 10.02; 77.35 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 353 மீட்டர் (1158 அடி) உயரத்தில் இருக்கின்றது.

வரலாறு[தொகு]

தமிழகத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நடைபெற்ற போது, மதுரை மண்டலத்தை நிர்வகித்த விசுவநாத நாயக்கர், மதுரை மண்டலத்தை 72 பாளையங்களாகப் பிரித்தார். இந்த 72 பாளையங்களில் போடிநாயக்கனூர் பாளையமும் ஒன்றாக இருந்தது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 73,430 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். போடிநாயக்கனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. போடிநாயக்கனூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

தொழில்[தொகு]

இந்த நகரம், ,இந்தியாவின் முதல் பிரதம மந்திரி அவர்களால் "தெற்கு காஷ்மீரம்" என அழைக்கப்பட்டுள்ளது இந்நகரின் சிறப்பு. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில், மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்ட, 'ஏலக்காய் நகரம்' எனவும் அழைக்கப் படும் ஒரு சிறிய நகராகும்.இந்த நகர், ஏலக்காய், காப்பி "குளம்பி", தேயிலை, பருத்தி விற்பனை செய்வதற்கான, விலை நிர்ணயிக்கக்கூடிய நகரங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.விவசாயமே முக்கிய தொழிலாக இருந்தாலும், அதிகமாக பெண்கள் ஏலக்காய் கடைகளுக்கும், காப்பி கடைகளுக்கும் (ஏலக்காய்/ காப்பி ) வேலைக்குச் செல்கின்றனர்.குறிப்பிட்ட அளவு மாங்காய் விவசாயம் நடைபெறுகிறது

குடிநீர்[தொகு]

போடிநாயக்கனூர் பகுதிக்குத் தேவையான குடிநீர் குரங்கணியில் உள்ள கொட்டகுடி ஆற்றிலிருந்து நீர், குழாய்களில் கொண்டு வரப்பட்டு, பரமசிவன் கோவில் மலையடிவாரத்தில் குடிநீராகப் பிரித்தெடுத்து/சுத்திகரிக்கப்பட்டு ஊருக்குள் வழங்கப்படுகிறது.நீர் பிடிப்புப் பகுதியில் இருந்து வீட்டிற்கு தண்ணீர் வரும் வரை மின்சாரம் செலவளிக்கப்படுவதில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும். இப்பணியை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.

கோவில்கள்[தொகு]

 • விநாயகர் திருக்கோவில். (சந்தைபேட்டைப் பகுதியில் அமைந்துள்ள இக்கோவில் சுமார் 200 வருட பழமை வாய்ந்தது)
 • சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்.
 • ஸ்ரீ நிவாச பெருமாள் கோவில்.
 • ஸ்ரீ ஐயப்பன் கோவில்.
 • பராசக்தியம்மன் திருக்கோவில்.
 • பரமசிவன் மலைக்கோவில் (மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது)
 • குலாளர்பாளையம் காளியம்மன் கோயில்

கல்விக்கூடங்கள்[தொகு]

 • ஜ.கா.நி.மேல்நிலைப்பள்ளி.
 • ஏழாவது பகுதி நகரவை மேல்நிலைப்பள்ளி.
 • பங்கஜம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
 • நாடார் மேல்நிலைப்பள்ளி.
 • சிசம் மெட்ரிக்குலேசன் பள்ளி.
 • ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி.*
 • தி ஸ்பைஸ் வேலி பப்ளிக் ஸ்கூல்(Cbse)

(

காணவேண்டிய இடங்கள்[தொகு]

போடிநாயக்கனூர் (நகராட்சி) தேனியில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது. போடிநாயக்கனூர் 'போடி' என்று சுருக்கமாக அழைக்கபடுகிறது. இதனை அடுத்து 22 கி.மீ. தூரத்தில் உள்ள போடிமெட்டு என்னும் இடத்தில் இருந்து கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதி தொடங்குகிறது. மலைசூழ்ந்த இயற்கை அழகைக் கண்குளிர கண்டு மகிழலாம். போடிமெட்டில் இருந்து இரவு நேரத்தில் தேனிமாவட்டத்தின் பலபகுதிகள் மின்விளக்கு ஒளியில் மின்னுவது காணக்கிடைக்காத காட்சியாகும். போடியில் இருந்து சுமார் ஒரு மணி நேரத்தில் போடிமெட்டுக்கு செல்லலாம். போடியில் இருந்து கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறு சுமார் 70 கி.மீ. தூரத்தில் உள்ளது.முந்தல் என்னும் சந்திப்பில் இருந்து போடிமெட்டு மற்றும் குரங்கணி ஆகிய இடங்களுக்கு பாதைகள் பிரிகின்றன. போடியில் பரமசிவன் கோவிலும்,விடா பாறை அருவி என்ற இரு இடங்கள் காணத் தகுந்தது.பரமசிவன் கோவில் போடி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் தொடர்ந்து 7 நாட்கள், அரசு சார்பாக இந்த கோவிலின் திருவிழா கொண்டாடப்படுகிறது.

ஆதாரங்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "Bodinayakkanur". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
 4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போடிநாயக்கனூர்&oldid=2554340" இருந்து மீள்விக்கப்பட்டது