உள்ளடக்கத்துக்குச் செல்

ஆம்பூர்

ஆள்கூறுகள்: 12°46′49″N 78°43′04″E / 12.780200°N 78.717700°E / 12.780200; 78.717700
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆம்பூர்
—  தேர்வு நிலை நகராட்சி  —
ஆம்பூர்
இருப்பிடம்: ஆம்பூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°46′49″N 78°43′04″E / 12.780200°N 78.717700°E / 12.780200; 78.717700
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பத்தூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கே. தர்பகராஜ், இ. ஆ. ப
நகராட்சி தலைவர் ஏஜாஸ் அகமது
மக்கள் தொகை

அடர்த்தி

1,13,856 (2011)

6/km2 (16/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

17.97 சதுர கிலோமீட்டர்கள் (6.94 sq mi)

346 மீட்டர்கள் (1,135 அடி)

குறியீடுகள்


ஆம்பூர் (Ambur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சியும்[3], ஆம்பூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் ஆகும். ஆம்பூர் பிரியாணி மிகவும் பிரபலமடைந்த உணவாக உள்ளது.[4][5] ஆம்பூர் நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

ஆம்பூர் பெயர் காரணம்

[தொகு]

'ஆம்' என்னும் சொல் ஊற்றுநீரைக் குறிக்கும்.[6] ஊற்று கசியும் ஊர் ஆம்பூர் எனப்பட்டது. ஆம்பூரில் மல்லியும் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. மேலும் ஆம்பூரின் பழங்காலப் பெயர் காட்டாம்பூர் என்பதாகும். அது மருவி கடாம்பூர் என்றும் ஆம்பூர் என்றும் தனித்தனியே அழைக்கப்படுகிறது. அவ்விதம் ஆம்பூர் காடாக இருந்துள்ளது. இது பண்டைக் காலத்தில் தொண்டைநாட்டு ஆமூர்க் கோட்டம் என்று அழைக்கப்பட்டது.

தொழிற்சாலைகள்

[தொகு]

ஆம்பூரில் கிட்டத்தட்ட 80 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன.[7] இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். மேலும் பல காலணிகள் கடைகளும் உள்ளன. முடிக்கப்பட்ட தோல் மற்றும் தோல் தொடர்பான பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான முன்னணி மையமாக ஆம்பூர் விளங்குகிறது.[8] இதனால் மாநில, மத்திய அரசுகளுக்கு அன்னியச் செலவாணி அதிகம் கிடைக்கிறது. தொடக்கத்தில், முதலாம் உலகப் போரின் போதும், அதற்கு முன்னரும் இராணுவ வீரர்களுக்கான காலணிகள் செய்வதற்காக ஆம்பூரில் தோல் பதனிடுதல் தொழில் ஆரம்பிக்கப்பட்டது.[9] குறிப்பிடத்தக்க தொழிற்சாலைகள் பரிதா, புளோரன்ஸ், டிஏடபிள்யூ ஆகியவையாகும்.

சுற்றுச்சூழல் மாசுறுதல்

[தொகு]

தோல் தொழிற்சாலைக் கழிவுகளினால் ஆம்பூர் பகுதியில் பாலாற்றின் இருபுறமும் சுற்றுச்சூழல் மாசடைந்துக் காணப்படுகிறது[10]. இதைத் தடுக்க அண்மைக் காலங்களில் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களும், தனி சுத்திகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன[11].

இரைச்சல் மாசு (noise pollution) பரவலாக ஆம்பூரில் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது[12]. நீர் மாதிரிகளில், மொத்த கரைந்த திடப்பொருட்கள், கடத்துத்திறன், மொத்த கடினத்தன்மை, கால்சியம், மக்னீசியம், குளோரைடு மற்றும் சல்பேட்டு ஆகியவற்றின் உயர் மதிப்பு காரணமாக ஆம்பூர் பகுதியில் நிலத்தடி நீரின் தரம் மோசமடைந்துள்ளது என்பதை நீர் தரக் குறியீட்டு ஆய்வு காட்டுகிறது.[13] தோல் தூசிகள், ஓசோன், குரோமியம், ஈயம், நைதரசனீரொட்சைடு, கந்தக டைஆக்சைடு, மீத்தேன், கார்பனோராக்சைடு மற்றும், ஐதரசன் சல்பைடு போன்ற காற்று மாசுபாடுகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகளில் இருந்து உருவாவதால், தோல் பதனிடும் தொழிலாளர்கள் மற்றும் தோல் பதனிடும் ஆலைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் அதிக நோய் (ஈழை நோய், நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்) தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.[14][15]

சட்டமன்றத் தொகுதி

[தொகு]

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வேலூர் வட்டத்தைச் சார்ந்த அக்ரஹாரம், தோளப்பள்ளி, குருவராஜபாளையம், அகரம், அர்ஜாதி, பலபாடி, நெடும்பாளையம், அரிமலை, ராமநயனிகுப்பம், குப்பம்பட்டு, வேப்பங்குப்பம், குப்பம்பாளையம், பாக்கம்பாளையம், பாக்கம், சின்னபள்ளிகுப்பம், மேல்பள்ளிபட்டு, ஆசனாம்பட்டு, தென்புதுப்பட்டு மற்றும் கள்ளப்பாறை கிராமங்களும், வாணியம்பாடி வட்டத்தைச் சார்ந்த வடபுதுப்பட்டு, கீழ்முருங்கை, வெங்கிளி, குளித்திகை, தோடாளம், மாதனூர், கூத்தம்பாக்கம், அகரம்சேரி, கொல்லமங்கலம், பள்ளிக்குப்பம், பாலூர், திருமலைக்குப்பம், மிட்டாளம், வெங்கடசமுத்திரம், காரபட்டு, கதவாளம், பரசானபள்ளி, கரும்பூர், நாயக்கனேரி, பெரியாங்குப்பம், சோலூர், கம்மகிருஷ்ணப்பள்ளி, குமாரமங்கலம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மணியாரகுப்பம், வீராங்குப்பம், ஆலாங்குப்பம், கன்னடிகுப்பம், கம்மியம்பட்டு, நாச்சாரகுப்பம், விண்ணமங்கலம், மின்னூர், வடகரை, மேல்சாணாங்குப்பம், சின்னபள்ளிகுப்பம், ஈச்சம்பட்டு, இளையநகரம், வெளளத்திகாமணிபெண்டா, சிந்தகம்பெண்டா, மதனஞ்சேரி, கொள்ளகுப்பம், வடச்சேரி, பாபனபள்ளி, செங்கிலிகுப்பம், வெள்ளக்கல் மற்றும் கிரிசமுத்திரம் கிராமங்களும், ஆம்பூர் நகராட்சியும் அடங்கும். ஆம்பூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன.

புவியியல்

[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 12°47′N 78°42′E / 12.78°N 78.7°E / 12.78; 78.7 ஆகும்[16]. கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 316 மீட்டர் (1036 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள்தொகை

[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,13,856 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[17] இவர்களில் 56,052 ஆண்கள், 57,804 பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 86.83% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 91.18%, பெண்களின் கல்வியறிவு 82.65% ஆகும். மக்கள் தொகையில் 12,150 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.[18]

ஆம்பூரிலுள்ள பல்வேறு மதத்தினர்

[தொகு]
ஆம்பூரிலுள்ள பல்வேறு மதத்தினர் (2011)[19]
மதங்களை பின்பற்றுவோர் சதவீதம் (%)
முகமதியர்
50.1%
இந்து
45.8%
கிறித்தவர்
3.8%
மற்ற மதத்தினர்/இறை மறுப்பாளர்கள்
0.3%

2011 ஆம் ஆண்டு மதக் கணக்கெடுப்பின்படி, ஆம்பூரில் பெரும்பான்மையாக முகமதியர் (50.1%) வாழ்கின்றனர். இங்கு, 45.8% இந்துக்களும், 3.8% கிறிஸ்தவர்களும், 0.3% பிற மதத்தினர்/இறை மறுப்பாளர்களும் உள்ளனர்.[19]

வழிபாட்டுத்தலங்கள்

[தொகு]

கோவில்கள்

[தொகு]

1.ஸ்ரீசுயம்பு எட்டியம்மன் ஆலயம் , இராமச்சந்திராபுரம், ஆம்பூர்

2. ஸ்ரீதேவி பூமாதேவி சமேத அமர்ந்த சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில், விண்ணமங்கலம், ஆம்பூர்

3. நாகநாத சுவாமிகள் ஆலயம் (ஆம்பூர்), ஆம்பூர்

4. பிந்துமாதவ பெருமாள் திருக்கோவில், துத்திப்பட்டு

5. கைலாசகிரி மலை, கைலாசகிரி

6. திருமலை திருப்பதி ஸ்ரீ கெங்கையம்மன் திருக்கோவில், தேவலாபுரம்

[தொகு]

இக்கோவிலில் வருடந்தோறும் சிரசு திருவிழாவும், அம்மனுக்கு கூழ் அமுது படைக்கும் நிகழ்ச்சியும் வாண வேடிக்கையுடன் நடைபெறுகின்றது.[20]

7. பெருமாள் கோவில், ஆம்பூர்

8. கங்கையம்மன் கோவில், ஆம்பூர்

9. ஆஞ்சநேயர் கோவில், ஆம்பூர்

10. சாமுண்டியம்மன் கோவில், ஆம்பூர்

11. காளியம்மன் கோவில், ஆம்பூர்

12. கங்கையம்மன் கோவில், சாணாங்குப்பம்

13. பிள்ளையார் கோவில், சாணாங்குப்பம்

14. அழகிய அம்மன் கோவில், சாணாங்குப்பம்

15. ௧ற்பக விநாயகர் கோவில், வீராங்குப்பம்

16. சாமுண்டீஸ்வரி கோவில், வீராங்குப்பம்

[தொகு]

சீரமைக்கப்பட்ட இக்கோவிலுக்கு 2019 ஆம் ஆண்டில் திருவலம் சாந்தா சுவாமிகள் தலைமையில் குடமுழுக்கு செய்யப்பட்டது.[21]

17.சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில், பெரியாங்குப்பம்

[தொகு]

இக்கோவில் ஏரி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் முதல் தேதியில் ஆரம்பித்து 7 நாட்கள் நடைபெறும்[22]. அப்பொழுது, வாணவேடிக்கையுடன் பூங்கரகம் பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள அம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக எரிக்கைரையில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதி சென்றடையும்.[23]

18.முருகன் கோவில், ஆம்பூர் சர்க்கரை ஆலை

மசூதிகள்

[தொகு]

1. ஜாமியா மசூதி, ஆம்பூர்

2. முஹம்மதுபுறா மசூதி, ஆம்பூர்

3. சிறிய மசூதி, ஆம்பூர்

4. காதர்பேட்டை மசூதி, ஆம்பூர்

5. சந்தைபேட்டை மசூதி, ஆம்பூர்

6. பூந்தோட்டம் மசூதி, ஆம்பூர்

7. பிலால் மசூதி, கே எம் நகர், ஆம்பூர்

8. சவுக் மசூதி, பஜார், ஆம்பூர்

9. அக்பர் மசூதி ரெட்டி தோப்பு, ஆம்பூர்

தேவாலயங்கள்

[தொகு]

1. லுத்தரன் தேவாலயம், ஆம்பூர்

2. சி.எஸ்.ஐ தேவாலயம், ஆம்பூர்

3. தென்னிந்திய தேவாலயம், ஆம்பூர்

4. ஏழாம் நாள் தேவாலயம், ஆம்பூர்

கல்வி நிலையங்கள்

[தொகு]

1. மஜ்ஹருல் உலூம் கல்லூரி

2. இந்து மேனிலைப்பள்ளி, ஆம்பூர்

3. இந்து பெண்கள் மேனிலைப்பள்ளி

4. கன்கார்டியா ஆசிரியர் பயிற்சிப்பள்ளி

5. கேஏஆர் பாலிடெக்னிக்

6. மஜாருல் உலூம் மேனிலைப்பள்ளி

7. ஹஸ்னத்-இ-ஜாரியாஹ் பெண்கள் மேனிலைப்பள்ளி

8. டி. அப்துல் வாஹிப் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி

9. அக்பர் நசீம் உதவிபெறும் நடுத்தர பள்ளி

10. ஆனைகார் ஓரியன்டல் அராபிக் மேனிலைப்பள்ளி

11. கன்கார்டியா மேனிலைப்பள்ளி

12. ஹபிபியா ஓரியன்டல் பெண்கள் மேனிலைப்பள்ளி

13. அல் அமீன் பள்ளி

14. பிலெசோ மெட்ரிகுலேஷன் பள்ளி

15. பெத்தேல் மெட்ரிகுலேஷன் பள்ளி

16. நடேசன் கல்வி நிலையம், சாணாங்குப்பம்

17. இந்து மேனிலைப்பள்ளி, கரும்பூர்

18. கிரெசியஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி

19. சாலமன் ஆரம்ப ஆங்கிலப்பள்ளி, பெரியாங்குப்பம்

20. ஜலாலியா ஆரம்ப ஆண்கள் பள்ளி

21. விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி

22. குறிஞ்சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, பெரியாங்குப்பம்

போக்குவரத்து

[தொகு]

ஆம்பூர், சென்னை-பெங்களூரு தேசிய விரைவுப்பாதையில் (என்.எச். 46) உள்ளதால் பல நகரங்களுக்கும் (வாணியம்பாடி, திருப்பத்தூர், பேரணாம்பட்டு, குடியாத்தம், வேலூர்) இங்கிருந்து பேருந்துகள் செல்கின்றன/ இணைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆம்பூர், சென்னை-சோலையார்பேட்டை இரயில் வழியில் உள்ளதால் பல (சென்னை, பெங்களூரு, ஈரோடு, சேலம்) நகரங்களுக்குச் செல்லும் இரயில் வண்டிகள் ஆம்பூர் தொடருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன.

வரலாறு

[தொகு]
  • இரண்டாம் கருனாடகப்போரில், 1749 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மூன்றாம் நாள் முஜாபர் ஜங்- சந்தா சாகிப் கூட்டு படைகளும் -பிரான்சு படைகளும் இணைந்து ஆற்காடு நவாபு முகமது அன்வருதீன்கான் படைகளுடன் ஆம்பூரில் போரிட்டன. இப்போரில், ஆற்காடு நவாபு, முகமது அன்வருதீன்கான் மரணமடைந்தார். இப்போர் ஆம்பூர் போர் என்றழைக்கப்படுகிறது. இரண்டாம் கர்நாடகப் போரின் முதல் பெரிய போர் ஆம்பூர் போராகும்[24].
  • ஆம்பூர் முற்றுகை போர் முதலாம் ஆங்கிலேய - மைசூர் போரின்போது 1767 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி முதல் - திசம்பர் 7 ஆம் தேதி வரை ஆம்பூர் நகரத்திற்கு எதிராக ஐதர் அலியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முற்றுகைப் போராகும். பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் கேப்டன் கால்வெர்ட் உள்ளூர் படையினரின் உதவியுடன், ஒரு சிறிய படையைக் கொண்டு ஆம்பூர் நகரத்தை வெற்றிகரமாக பாதுகாத்துக் கொண்டார்[25].

தட்பவெட்பநிலை

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், ஆம்பூர் (2000–2012)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 35.3
(95.5)
39.8
(103.6)
42.8
(109)
44.4
(111.9)
45.0
(113)
44.3
(111.7)
40.9
(105.6)
39.4
(102.9)
39.6
(103.3)
39.2
(102.6)
35.8
(96.4)
35.0
(95)
45.0
(113)
உயர் சராசரி °C (°F) 29.2
(84.6)
32.0
(89.6)
35.0
(95)
37.1
(98.8)
38.5
(101.3)
36.3
(97.3)
34.6
(94.3)
34.0
(93.2)
34.0
(93.2)
33.0
(91.4)
29.5
(85.1)
28.3
(82.9)
33.46
(92.23)
தாழ் சராசரி °C (°F) 18.2
(64.8)
19.2
(66.6)
21.3
(70.3)
24.8
(76.6)
26.3
(79.3)
26.0
(78.8)
25.1
(77.2)
24.6
(76.3)
24.1
(75.4)
22.9
(73.2)
20.8
(69.4)
19.2
(66.6)
22.71
(72.88)
பதியப்பட்ட தாழ் °C (°F) 10.2
(50.4)
12.0
(53.6)
12.1
(53.8)
13.8
(56.8)
18.1
(64.6)
19.6
(67.3)
18.8
(65.8)
18.7
(65.7)
18.7
(65.7)
15.6
(60.1)
12.1
(53.8)
11.0
(51.8)
10.2
(50.4)
பொழிவு mm (inches) 9.0
(0.354)
7.1
(0.28)
5.9
(0.232)
21.8
(0.858)
83.9
(3.303)
71.0
(2.795)
117.0
(4.606)
124.9
(4.917)
149.6
(5.89)
176.9
(6.965)
155.2
(6.11)
78.6
(3.094)
1,000.9
(39.406)
சராசரி பொழிவு நாட்கள் 0.8 0.5 0.4 1.3 4.7 5.3 6.6 7.8 7.6 9.4 7.7 3.9 56
ஆதாரம்: இந்திய வானிலை ஆய்வுத் துறை,[26]

புகழ் பெற்றவர்கள்

[தொகு]

இந்திய அரசு வழங்கும் பத்மசிறீ பட்டம் பெற்றவர்கள்

1. மெக்கா ரபீக் அஹ்மத் - தொழில் மற்றும் வணிகம் - 2011

2. பேராசிரியர் (மருத்துவர்) மதனுர் அஹ்மத் அலி - மருத்துவம் - 2011

படங்கள்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. ஆம்பூர் நகராட்சியின் இணையதளம்[தொடர்பிழந்த இணைப்பு]
  4. https://www.hindutamil.in/news/life-style/826236-ambur-biryani.html
  5. https://tamil.asianetnews.com/gallery/health-food/how-to-make-amboor-chicken-briyani-in-tamil-rj63yp
  6. மையல் வேழம் உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர, ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் (குறுந்தொகை 308).
  7. M., Serena Josephine (2019). "Grappling with a slowdown and unmet expectations" (in English). The Hindu (Vellore: THG Publishing Pvt Ltd.). https://www.thehindu.com/news/national/tamil-nadu/grappling-with-a-slowdown-and-unmet-expectations-ambur-assembly-constituency-assembly-bypoll-2019/article26750480.ece. 
  8. "Centre's notification to slaughter jobs at Vellore tanneries, kill India's leather export hub". New Indian Express. 30 May 2017. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2017/may/30/centres-notification-to-slaughter-jobs-at-vellore-tanneries-kill-indias-leather-export-hub-1610653.html. 
  9. Damodaran, Sumangala; Mansingh, Pallavi (2008), CEC Working Paper: Leather Industry in India (PDF), New Delhi, India: Centre for Education and Communication (CEC), pp. 1–75
  10. Sahebrao Sonkamble, V. Satish Kumar, B. Amarender, P. M. Dhunde, S. Sethurama, K. Raj Kumar (March 2014). "Delineation of fresh aquifers in tannery belt for sustainable development — A case study from southern India". Journal of the Geological Society of India 83 (3): 279-289. doi:10.1007/s12594-014-0040-3. 
  11. "தமிழ்நாடு மாசு தொழிற்சாலைகள் கண்காணிக்க வேண்டுகோள்.". தினமலர். 22 செப் 2012. 
  12. Thangadurai N, Venkateswaran P, Jeevanraj S. (சனவரி 2005). "Evaluation and analysis of the noise quality of Ambur, Tamil Nadu, India.". J Environ Sci Eng. 47 (1): 7-12. 
  13. Farooqui, K.M., Sar, S.K. & Diwan V. (2020). Investigation of water quality in Ambur city by water quality indexing. The holistic approach to environment. 10. 48-52. doi:10.33765/thate.10.2.4
  14. Gnanasekaran S., Subramani K., & Thaminum Ansari A. (2010). Ambient air pollution from the leather tanneries in Vellore district in reference to the Asthma. J. Chem. Pharm. Res., 2010, 2(5): 153-160
  15. Subramani K., Gnanasekaran S., & Thaminum Ansari A. (2010). Biological effect of air pollution from the leather tanneries in Vellore district in reference to the chronic obstructive pulmonary disease (COPD). Annals of Biological Research, 1(1): 224-229
  16. "Ambur". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 19, 2006.
  17. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2012-04-23. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |= ignored (help)
  18. "Towns in Vellore – Religion 2011". பார்க்கப்பட்ட நாள் 31 திசம்பர் 2015.
  19. 19.0 19.1 "Population By Religious Community – Tamil Nadu" (XLS). Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2011.
  20. https://www.dailythanthi.com/News/State/ambur-devalapuram-gengayamman-temple-head-festival-718756
  21. https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/Dec/15/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3306834.html
  22. https://www.maalaimalar.com/news/district/tirupathur-news-masi-karakam-festival-at-chamundeshwari-amman-temple-573274
  23. https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/tirupattur/tirupattur-chamundeshwari-temple-masi-karagam-festival/tamil-nadu20200220183706021
  24. Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. p. 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131300343.
  25. Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. p. 173. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131300343.
  26. "Climatological Information for Tirupattur,India". India Meteorological Department.[தொடர்பிழந்த இணைப்பு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ambur
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்பூர்&oldid=4087656" இலிருந்து மீள்விக்கப்பட்டது