உள்ளடக்கத்துக்குச் செல்

பத்மசிறீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்மஶ்ரீ
விருது குறித்தத் தகவல்
வகை குடியியல் விருது
பகுப்பு தேசிய விருது
நிறுவியது 1954
முதலில் வழங்கப்பட்டது 1954
கடைசியாக வழங்கப்பட்டது 2014
மொத்தம் வழங்கப்பட்டவை 2679
வழங்கப்பட்டது இந்திய அரசு
நாடா
விருது தரவரிசை
பத்ம பூசன்
பத்ம பூசன்[1]பத்மஶ்ரீ → சர்வட்டோம் யுத்த சேவா பதக்கம்[2]

பத்மஶ்ரீ (பத்மஸ்ரீ) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருது. கலை,கல்வி,தொழில்,இலக்கியம்,அறிவியல்,விளையாட்டு,சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பங்களித்த குடிமக்களுக்குப் பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. இது முதன் முதலில் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. பாரத ரத்னா,பத்ம விபூசன்,பத்ம பூசன் விருதுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது வரிசையில் அமைந்துள்ளது. 2012 வரை, 2497 நபருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.[3] 2013-இல், 80 பேருக்கு வழங்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Precedence Of Medals". Website. Indian Army. பார்க்கப்பட்ட நாள் 9 September 2014.
  2. "The Official Home Page of the Indian Army". www.indianarmy.nic.in.
  3. "Padma Shri Awardees". Ministry of Communications and Information Technology. பார்க்கப்பட்ட நாள் 2009-06-28.
  4. Ministry of Home Affairs(25 January 2013). "This Year's Padma Awards announced". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 25 January 2013.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மசிறீ&oldid=3731883" இலிருந்து மீள்விக்கப்பட்டது