சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது
சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (Shanti Swarup Bhatnagar Prize for Science and Technology) ஆண்டுதோறும் இந்தியாவில் அறிவியல் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கும் இளம் அறிவியலாளர்களுக்கு "அறிவியல் தொழில் ஆய்வுக் கவுன்சில்" (CSIR) இனால் வழங்கப்படும் விருதாகும். இந்திய ரூபாயில் இரண்டு லட்சம் பணமுடிப்பு பரிசாக இந்திய பிரதமரால் வழங்கப்படுகிறது.இந்த விருது 45 வயதிற்குட்பட்டோருக்கு வழங்கப்படுகின்றது.[1]
2011 ஆம் ஆண்டிற்கான கணிதத்திற்கான இவ்விருது கான்பூர் ஐ.ஐ.டியில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்ற, ’ரப்பர் ஷீட் ஜியோமெட்ரி’ எனும் கணிதப்பிரிவில் ஆய்வு செய்த பேலூர் ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்த பல்கலைக் கழகத்தின் கணிதத்துறை தலைவர் மஹான் மகராஜின் கணித ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டது. இந்திய புள்ளியியல் மையத்தைச் சேர்ந்த பலாஷ் சர்க்கார் என்ற விஞ்ஞானியுடன் இந்த விருது பகிர்ந்துகொள்ளப்பட்டது.[2][3][4][5][6]
சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதின் அதிகாரபூர்வ இணையதளம்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://dst.gov.in/awards/award11.htm
- ↑ http://www.belurmath.org/news_archives/2011/10/10/shanti-swarup-bhatnagar-prize-for-the-year-2011-to-swami-vidyanathanandaji-of-vivekananda-university/
- ↑ ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்; நவம்பர் 2011; பக்கம் 27; விருது பெற்ற விஞ்ஞானத் துறவி
- ↑ http://educationtimes.com/index.aspx?page=article&secid=69&conid=20111108201111081431476676328df05
- ↑ http://gonitsora.com/the-monk-who-is-sold-on-geometry-an-interview-with-mahan-maharaj/
- ↑ http://ssbprize.gov.in/Content/Detail.aspx?AID=360
வெளி இணைப்புகள்[தொகு]
- http://dst.gov.in/awards/award-index.htm
- 2013 ஆண்டில் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றவர்கள்
- 2006 ஆண்டில் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றவர்கள்
- 1958-1998 இல் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றவர்கள் பற்றிய தரவுநூல்