உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்
உருவாக்கம்26 செப்டம்பர் 1942
நிதிநிலை1750 கோடி
தலைவர்இந்தியப் பிரதமர்
தலைமை இயக்குநர்நல்லத்தம்பி கலைச்செல்வி
நிருவாகப் பணியாளர்
17,432
அமைவிடம்
அணுசந்தான் பவன், ராபி மார்க், புதுதில்லி
இணையதளம்www.csir.res.in

அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (Council of Scientific and Industrial Research - CSIR) தன்னாட்சி அரசு அமைப்பாகும். இது இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் அமைச்சகத்தின் பங்களிப்புடன் நாட்டின் ஆய்வு மற்றும் தொழில் வளர்ச்சியில் ஒரு முன்மாதிரி அமைப்பாகும். இது 1942 ஆம் ஆண்டு மத்திய நாடாளுமன்றம் (Central Legislative Assembly) எடுத்த தீர்மானத்தின் படி, 1860 சமூகச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இது நாடு முழுவதும் 39 ஆய்வகங்களையும் மற்றும் 50 களப்பணி நிலையங்களையும் கொண்டுள்ளது. இதில் 17000 மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

இதன் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணிகளின் துறைகளாக விண்வெளிப் பொறியியல் (Aerospace Engineering), கட்டப்பொறியியல் (Structural Engineering), கடல் அறிவியல், மூலக்கூறு உயிரியல், மாழையியல், வேதி, சுரங்கம், உணவு, பெட்ரோலியம், தோல் மற்றும் சூழல் ஆகியனவற்றில் ஆளுகைச் செலுத்தி வருகின்றன.

ஆய்வு நிறுவனங்கள்[தொகு]

 1. AMPRI - மேம்பட்ட பொருள் மற்றும் முறைகள் ஆய்வு நிறுவனம், போபால் (Advanced Materials and Processes Research Institute, Bhopal பரணிடப்பட்டது 2011-04-29 at the வந்தவழி இயந்திரம்)
 2. CMMACS - மத்திய கணித மாதிரியாக்கல் மற்றும் கணினி உருவகம், பெங்களூர் (Centre for Mathematical Modelling and Computer Simulation, Bangalore பரணிடப்பட்டது 2012-03-15 at the வந்தவழி இயந்திரம்)
 3. CBRI - மத்திய கட்டிட ஆய்வு நிறுவனம், உரூர்கெலா (Central Building Research Institute, Roorkee)
 4. CCMB - உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம், ஐதராபாத் (Centre for Cellular and Molecular Biology, Hyderabad)
 5. CDRI - மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம், இலக்னோ (Central Drug Research Institute, Lucknow பரணிடப்பட்டது 2016-07-22 at the வந்தவழி இயந்திரம்)
 6. CECRI - மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம், காரைக்குடி (Central Electro Chemical Research Institute, Karaikudi)
 7. CEERI - மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், பிலானி & சென்னை (Central Electronics Engineering Research Institute, Pilani பரணிடப்பட்டது 2019-09-02 at the வந்தவழி இயந்திரம்)
 8. CFRI - மத்திய சுரங்கவியல், எரிபொருள் ஆய்வு நிறுவனம், தான்பாத் (Central Mining & Fuel Research Institute, Dhanbad பரணிடப்பட்டது 2012-01-01 at the வந்தவழி இயந்திரம்)
 9. CFTRI - மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், மைசூர் (Central Food Technological Research Institute, Mysore)
 10. CGCRI - மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனம், கொல்கத்தா (Central Glass and Ceramic Research Institute, Kolkata)
 11. CIMAP - மத்திய மருத்துவ மற்றும் நறுமணப் பயிர்கள் நிறுவனம், லக்னோ (Central Institute of Medicinal and Aromatic Plants, Lucknow)
 12. CLRI - மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை (Central Leather Research Institute, Chennai)
 13. CMERI - மத்திய இயக்கமுறைப் பொறியியல் ஆய்வு நிறுவனம், துர்காபூர் (Central Mechanical Engineering Research Institute, Durgapur)
 14. CMRI - மத்திய சுரங்க ஆய்வு நிறுவனம், தான்பாத் (Central Mining Research Institute, Dhanbad பரணிடப்பட்டது 2014-09-22 at the வந்தவழி இயந்திரம்)
 15. CRRI - மத்திய சாலை ஆய்வு நிறுவனம், புது தில்லி (Central Road Research Institute, New Delhi)
 16. CSIO - மத்திய அறிவியல் கருவி அமைப்பு, சண்டிகர் (Central Scientific Instruments Organisation, Chandigarh பரணிடப்பட்டது 2012-03-20 at the வந்தவழி இயந்திரம்)
 17. CSMCRI - நடுவண் உப்பு மற்றும் கடல்சார் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், பாவ்நாகர் (Central Salt and Marine Chemicals Research Institute, Bhavnagar பரணிடப்பட்டது 2012-04-02 at the வந்தவழி இயந்திரம்)
 18. IGIB - மரபணு மற்றும் தொகுப்புயிரியல் நிறுவனம், தில்லி (Institute of Genomics and Integrative Biology, Delhi)
 19. IHBT - இமாலயா உயிர்வள தொழில்நுட்ப நிறுவனம், பாலாம்பூர் (Institute of Himalayan Bioresource Technology, Palampur)
 20. IICB - இந்திய வேதி உயிரியல் நிறுவனம், கொல்கத்தா (Indian Institute of Chemical Biology, Kolkata)
 21. IICT - இந்திய வேதி தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத் (Indian Institute of Chemical Technology, Hyderabad)
 22. IIP - இந்தியப் பெட்ரோலிய நிறுவனம், டேராடூன் (Indian Institute of Petroleum, Dehradun)
 23. IMMT - கனிம மற்றும் பொருட் தொழில்நுட்ப நிறுவனம், பூபனேசுவர் (Institute of Minerals and Materials Technology, Bhubaneswar)
 24. IMT - நுண்ணுயிரி தொழில்நுட்ப நிறுவனம், சண்டிகர் (Institute of Microbial Technology, Chandigarh)
 25. IITR - இந்திய நச்சுயியல் ஆராய்ச்சி நிறுவனம், இலக்னோ Indian Institute of Toxicology Research, Lucknow (Formerly known as Industrial Toxicology Research Centre)]
 26. NAL - தேசிய விண்வெளி ஆய்வகம், பெங்களூர் (National Aerospace Laboratories, Bangalore)
 27. NBRI - தேசிய தாவரவியல் ஆய்வுக் கழகம், லக்னோ (National Botanical Research Institute, Lucknow)
 28. NCL - தேசிய வேதியியல் ஆய்வகம், பூனே (National Chemical Laboratory, Pune)
 29. NEERI - தேசிய சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம், நாக்பூர் (National Environmental Engineering Research Institute, Nagpur)
 30. NGRI - தேசிய புவியியற்பியல் ஆய்வு நிறுவனம், ஐதராபாத் (National Geophysical Research Institute, Hyderabad பரணிடப்பட்டது 2011-07-07 at the வந்தவழி இயந்திரம்)
 31. NIO - தேசிய கடலியல் நிறுவனம், டோனா பவுலா (National Institute of Oceanography, Dona Paula)
 32. NISCAIR - தேசிய தொடர்பு மற்றும் தகவலறிவியல் நிறுவனம், புது தில்லி (National Institute of Science Communication and Information Resources, New Delhi)
 33. NISTADS - தேசிய அறிவியல், தொழில்நுட்ப மற்றும் வளர்ச்சியியல் நிறுவனம், புது தில்லி (National Institute of Science, Technology and Development Studies, New Delhi)
 34. NML - தேசிய மாழையியல் ஆய்வகம், சம்செத்பூர் (National Metallurgical Laboratory, Jamshedpur)
 35. NPL - தேசிய இயற்பியல் ஆய்வகம், புது தில்லி (National Physical Laboratory, New Delhi)
 36. IIIM - வட்டார ஆய்வகம், சம்மு (Indian Institute of Integrative Medicine, Jammu)
 37. NEIST - வடகிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சோர்காட் (North East Institute of Science and Technology, Jorhat)
 38. NIIST - தேசிய துறையிடை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், திருவனந்தபுரம் (National Institute for Interdisciplinary Science and Technology - Thiruvananthapuram பரணிடப்பட்டது 2012-01-03 at the வந்தவழி இயந்திரம்)
 39. SERC - அமைப்புப் பொறியியல் ஆய்வு மையம், சென்னை (Structural Engineering Research Centre, Chennai)[1].
 40. URDIP - தகவல்நுட்ப பொருட்கள் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அலகு புனே

ஆய்விதழ்[தொகு]

அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் 18 ஆய்விதழ்களையும் 3 பிரபலமான அறிவியல் இதழ்களையும் (சயின்ஸ் ரிப்போர்ட்டர் மற்றும் அதன் ஹிந்தி, உருது பதிப்புகள்) வெளியிடுகிறது. இதனுடைய மென்வடிவம் தேசிய அறிவியல் தகவல்தொடர்பு மற்றும் தகவல் வளங்கள் நிறுவன இணையதளத்தில் திறந்த அணுகலில் கிடைக்கின்றது.[2]

மேற்கோள்கள்[தொகு]

 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-01-07. பார்க்கப்பட்ட நாள் 2012-01-05.
 2. "NISCAIR Online Periodicals Repository (NOPR) : Home". nopr.niscair.res.in. 2015. Archived from the original on 15 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 16 சூன் 2015.

வெளி இணைப்புகள்[தொகு]