சேனா பதக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சேனா பதக்கம்
Sena Medal.jpg

Sena Medal ribbon.svg
விருது குறித்தத் தகவல்
வகை பதக்கம்
வழங்கப்பட்டது இந்தியத் தரைப்படை

சேனா பதக்கம் (Sena Medal) இந்தியத் தரைப்படையின் அனைத்து மட்டத்திலும், "தரைப்படை செயற்பாட்டிற்கு முகனையான பங்காற்றிய, தங்கள் பணியில் ஈடுபாடும் வீரமும் கொண்ட வீரர்களுக்கு" வழங்கப்படுகிறது. வீரரின் மறைவிற்குப் பின்னர் வழங்கவும் இரண்டுக்கு மேற்பட்ட பதக்கங்களைப் பெற்றோருக்கு ஆடைப்பட்டயம் வழங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.

இது தரைப்படையில் தீரச்செயல்கள் புரிந்தோருக்கு வழங்கப்படும் விருதாகும். இருப்பினும் அமைதிக் காலங்களிலும் சிறப்புமிகு சேவை புரிந்த படைவீரர்களுக்கு சேனா பதக்கம் (சிறப்புமிகு) வழங்கப்படுகிறது. இந்தியத் தரைப்படையின் பாராட்டை வெளிப்படுத்தும் ஓர் விருதாக இது அமைந்துள்ளது. இந்த விருதுக்கு மேலாக வீர சக்கரம், சௌர்யா சக்கரம், யுத் சேவா பதக்கம் ஆகியன உள்ளன. இந்தப் பதக்கம் விசிட்ட சேவா பதக்கத்திற்கு மேலானது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சேனா_பதக்கம்&oldid=2121959" இருந்து மீள்விக்கப்பட்டது