ஆடைப்பட்டயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சில எடுத்துக்காட்டுக்கள்

படைத்துறை அலங்காரங்களில் ஆடைப்பட்டயம் மிகவும் முகனையானதொன்றாகும். இதன் வரலாறு அமெரிக்க உள்நாட்டுப் போர் காலத்திலிருந்து துவங்கியது. அந்தக் காலகட்டத்தில் படைவீரர்களுக்கு படையணித் தலைவர்கள் பதக்கங்கள் வழங்குவது அலுவல்முறையாக இல்லாதிருந்தது. இதனை ஓர் முறையான இராணுவ அங்கீகாரமாக ஆக்கியது இசுப்பானிய-அமெரிக்க போரின் (1898) போதாகும். படைத்துறை அலங்காரம் அல்லது படைத்துறை விருது என்பது எதிரிகளிடத்து துணிச்சலையும் வீரத்தையும் வெளிக்காட்டும் படைவீரர்களுக்கும் சிறப்பாகச் சேவையாற்றிய வீரர்களுக்கும் வழங்கப்படுவதாகும். இவற்றை படைவீரர்கள் தங்கள் சீருடையில் அணிவது பெருமைக்குரிய ஒன்றாகும்.

ஓர் இராணுவ விருது பதக்கம் ஒன்றையும் இணைந்த நாடா ஒன்றையும் கொண்டிருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடைப்பட்டயம்&oldid=2764438" இருந்து மீள்விக்கப்பட்டது