தாதாசாகெப் பால்கே விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாதாசாகெப் பால்கே விருது
விருது குறித்தத் தகவல்
பகுப்பு இந்தியத் திரைப்படத்துறை
நிறுவியது 1969
முதலில் வழங்கப்பட்டது 1969
மொத்தம் வழங்கப்பட்டவை 41
வழங்கப்பட்டது இந்திய அரசு
நிதிப் பரிசு 1,000,000
விவரம் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும்
முதல் வெற்றியாளர்(கள்) தேவிகா ராணி (1969)
கடைசி வெற்றியாளர்(கள்) கே. விஸ்வநாத் (2016)

தாதாசாகெப் பால்கே விருது (Dadasaheb Phalke Award) இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. குறிப்பிட்ட ஆண்டுக்கான விருது, அதற்கு அடுத்த ஆண்டு இறுதியில் தேசியத் திரைப்பட விருதுகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.

விருது பெற்றவர்கள் பட்டியல்[தொகு]

ஆண்டு வாரியாக இந்த விருது பெற்றவர்கள் பட்டியல்:

வருடம் விருது பெற்றவர் தொழில் புகைப்படம்
1969 தேவிகா ராணி நடிகை
1970 பி.என். சர்க்கார் தயாரிப்பாளர் (திரைப்படம்)
1971 பிரித்விராஜ் கபூர் நடிகர் (மறைவிற்குப் பின்னர்)
1972 பங்கஜ் மல்லிக் இசையமைப்பாளர்
1973 சுலோச்சனா நடிகை
1974 வி. என். ரெட்டி இயக்குநர் (திரைப்படம்)
1975 திரேன் கங்குலி நடிகர், இயக்குநர் (திரைப்படம்)
1976 கானன் தேவி நடிகை
1977 நிதின் போஸ் படத்தொகுப்பாளர், இயக்குநர் (திரைப்படம்), திரைக் கதையாசிரியர்
1978 ஆர். சி. போரல் இசையமைப்பாளர், இயக்குநர் (திரைப்படம்)
1979 சோரப் மோடி நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்)
1980 ஜெய்ராஜ் நடிகர், இயக்குநர் (திரைப்படம்)
1981 நௌஷத் இசையமைப்பாளர் Naushadsaab1.jpg
1982 எல். வி. பிரசாத் நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்)
1983 துர்கா கோடே நடிகை
1984 சத்யஜித் ராய் இயக்குநர் (திரைப்படம்) SatyajitRay.jpg
1985 வி. சாந்தாராம் நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்)
1986 பி. நாகி ரெட்டி தயாரிப்பாளர் (திரைப்படம்)
1987 ராஜ் கபூர் நடிகர், இயக்குநர் (திரைப்படம்) 100px
1988 அசோக் குமார் நடிகர் Ashok Kumar in Kismet1.jpg
1989 லதா மங்கேஷ்கர் பின்னணிப் பாடகர் Lata Mangeshkar - still 29065 crop.jpg
1990 ஏ. நாகேசுவர ராவ் நடிகர்
1991 பல்ஜி பென்தர்கர் இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்), Screenwriter
1992 பூபேன் அசாரிகா இயக்குநர் (திரைப்படம்) Dr. Bhupen Hazarika, Assam, India.jpg
1993 மஜ்ரூ சுல்தான்புரி பாடலாசிரியர்
1994 திலிப் குமார் நடிகர் Dilip Kumar 2006.jpg
1995 ராஜ் குமார் நடிகர், பின்னணிப் பாடகர்
1996 சிவாஜி கணேசன் நடிகர்
1997 பிரதீப் பாடலாசிரியர்
1998 பி. ஆர். சோப்ரா இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்)
1999 ரிஷிகேஷ் முகர்ஜி இயக்குநர் (திரைப்படம்)
2000 ஆஷா போஸ்லே பின்னணிப் பாடகர் Asha Bhosle - still 47160 crop.jpg
2001 யாஷ் சோப்ரா இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்) Yash Chopra.JPG
2002 தேவ் ஆனந்த் நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்)
2003 மிரிணாள் சென் இயக்குநர் (திரைப்படம்) Mrinal-sen.jpg
2004 அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்குநர் (திரைப்படம்) Adoorgopalakrishnan.JPG
2005 சியாம் பெனகல் இயக்குநர் (திரைப்படம்) Shyam Benegal.jpg
2006 தபன் சின்கா இயக்குநர் (திரைப்படம்)
2007 மன்னா தே பின்னணிப் பாடகர்
2008 வி. கே. மூர்த்தி படத்தொகுப்பாளர் V K Murthy.jpg
2009 டி. ராமா நாயுடு தயாரிப்பாளர் (திரைப்படம்), இயக்குநர் (திரைப்படம்)
2010 கைலாசம் பாலச்சந்தர் இயக்குநர் (திரைப்படம்) K Balachander.jpg
2011 சௌமித்திர சாட்டர்ஜி நடிகர் Soumitra Chatterjee reciting a poem by Rabindranath Tagore at inauguration of a flower show.jpg
2012 பிரான் கிரிஷன் சிகந்த் நடிகர்
2013 குல்சார் பாடலாசிரியர் Gulzar 2008 - still 38227.jpg
2016 கே. விஸ்வநாத் இயக்குநர்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]