வினோத் கண்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வினோத் கண்ணா
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி குர்தாஸ்பூர்
தனிநபர் தகவல்
பிறப்பு 6 அக்டோபர் 1946 (1946-10-06) (அகவை 70)
பெஷாவர், பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சி பாஜக
வாழ்க்கை துணைவர்(கள்) கீதாஞ்சலி(1971–1985 மணமுறிவு)
கவிதா(1990–இற்றைவரை)
பிள்ளைகள் 3 மகன்கள் மற்றும் 1 மகள்
இருப்பிடம் மும்பை, மகாராட்டிரம், இந்தியா
As of செப்டம்பர் 22, 2006

வினோத் கண்ணா(பி. 6 அக்டோபர் 1948,பெஷாவர்) ஓர் புகழ்பெற்ற இந்திய திரைப்பட நடிகர்,திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.

இளமை[தொகு]

கமலா மற்றும் கிருஷ்ணசந்த் கண்ணாவிற்கு பிறந்த ஐந்து குழந்தைகளில் வினோத்தும் ஒருவர். கிருஷ்ணசந்த் கண்ணா ஆடைகள்,சாயம் மற்றும் வேதிப்பொருட்கள் தொடர்பான வியாபாரம் செய்து வந்தார்.வினோத் கண்ணாவிற்கு மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர்.இந்தியப் பிரிவினையின்போது குடும்பத்துடன் மும்பைக்கு குடிபெயர்ந்தனர்.

மும்பையில் அவர் ராணி மேரி பள்ளியில் இரண்டாம் வகுப்பு வரை பயின்றார். அதன் பின் மும்பை கோட்டைப் பகுதியிலுள்ள புனித சேவியர் மேல்நிலை பள்ளிக்கு மாற்றப்பட்டார். 1957ஆம் ஆண்டு தில்லிக்கு குடிபெயர்ந்து அங்கு தில்லி பப்ளிக் பள்ளியில் படித்தார். 1960இல் குடும்பம் மீண்டும் மும்பைக்கு மாறியபோதும் தேவ்லாலியிலுள்ள பார்னெசு பள்ளியில் சேர்க்கப்பட்டார். அப்பள்ளியின் தங்குவிடுதியில் இருந்தபோதே அவர் கண்ட இந்தித் திரைப்படம் முகல்-ஏ- ஆசம் அவருக்குத் திரைப்பட ஆர்வத்தைத் தூண்டியது. ஸைடந்ஹாம் கல்லூரியில் வணிகவியலில் பட்டபடிப்பை முடித்தார்.[1]

திரைவாழ்வு[தொகு]

வினோத் கண்ணா 1968ஆம் ஆண்டு சுனில் தத் நடித்த மன் கா பிரீத் என்ற திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார். [2]

அரசியல் வாழ்வு[தொகு]

1997ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பஞ்சாபின் குர்தாஸ்பூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.அதே தொகுதியிலிருந்து 1999ஆம் ஆண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சூலை 2002இல் இந்திய ஆய அமைச்சரவையில் பண்பாடு மற்றும் சுற்றுலா அமைச்சராகப் பணியாற்றினார். ஆறு மாதங்களில் இந்திய வெளிவிவகாரத் துறையில் மாநில அமைச்சராக மாற்றப்பட்டார். 2004ஆம் ஆண்டில் மீண்டும் தமது தொகுதியில் வென்ற வினோத் கண்ணா 2009ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் தோல்வியைத் தழுவினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The uncensored Vinod Khanna". Times of India. பார்த்த நாள் 2010-12-27.
  2. Raheja, Dinesh. "The actor who renounced success". Rediff.com. பார்த்த நாள் 2010-12-27.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோத்_கண்ணா&oldid=2213048" இருந்து மீள்விக்கப்பட்டது