நாடாளுமன்ற உறுப்பினர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாடாளுமன்ற உறுப்பினர் (Member of Parliament) என்பவர் ஒரு நாட்டின் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு வாக்காளர்களின் பதிலாள் (பிரதிநிதி) ஆவார். பல நாடுகளில் இந்தச் சொல் மக்களவை உறுப்பினர்களை மட்டுமே குறிக்கும். மேலவை உறுப்பினர்கள் செனட்டர்கள் என்றோ பிரபுக்கள் என்றோ அழைக்கப்படுவர். ஒரே அரசியல் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அக்கட்சியின் நாடாளுமன்றக் கட்சியை அமைப்பார்கள். ஆங்கிலச் சுருக்கமான "எம். பி." (MP) என்பது ஊடகங்களில் மற்றும் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது.

வெஸ்ட்மினிஸ்டர் முறை[தொகு]

அயர்லாந்து[தொகு]

ஆஸ்திரேலியா[தொகு]

இந்தியா[தொகு]

இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களைக் குறிக்கும்.[1]

மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 542 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள் மாநில-பிரதேச சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும்.

மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கைப் பெற்ற கட்சி அல்லது கூட்டணி அரசு அமைக்கும் உரிமையைப் பெறுகிறது. அமைச்சரவை நாடாளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது.

இலங்கை[தொகு]

இலங்கையில் இலங்கை நாடாளுமன்றத்திற்கு மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் கட்சிகளால் அவர்கள் பெற்ற வாக்குகளின் விகிதத்திற்கேற்ப நியமிக்கப்படும் உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் என அறியப்படுகின்றனர். பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற கட்சி அல்லது கூட்டணி அரசு அமைக்கிறது.

இலங்கை நாடாளுமன்றம் 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை, சர்வசன வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்படும் 225 உறுப்பினர்கள் அடங்கிய ஒற்றைச் சபை கொண்ட (unicameral) ஒரு சட்டவாக்க மன்றமாகும். இதில் 196 உறுப்பினர்கள் மாவட்டவாரியாகவும், 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலமும் திருத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ (proportional representation) முறையில் நடைபெறும் பொதுத்தேர்தலில் தெரிவு செய்யப்படுவர். இந்த திருத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் விசேட பண்புகளாவன, ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் அதிக வாக்குகள் பெறும் கட்சிக்கு மேலதிகமான உறுப்பினர் வழங்கப்படுவதும், வாக்காளர்கள் வேட்பாளர்களுக்கு மூன்று வரையான விருப்பத்தேர்வு வாக்குகளை அளிக்ககூடியமையும் ஆகும்.

ஐக்கிய ராச்சியம்[தொகு]

கனடா[தொகு]

கென்யா[தொகு]

சிங்கப்பூர்[தொகு]

சிங்கப்பூரில் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் மக்களால் நேரடியாகத் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், எதிர்கட்சியால் நியமிக்கப்படும் தொகுதியில்லா உறுப்பினர்கள் மற்றும் அரசியல் சார்பில்லா பொதுமக்களிலிருந்து நியமிக்கப்படும் உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அறியப்படுவர்.

சிம்பாப்வே[தொகு]

நவூரு[தொகு]

நியூசிலாந்து[தொகு]

பங்களாதேசம்[தொகு]

பாகிஸ்தான்[தொகு]

பாகிஸ்தானில் பாகிஸ்தானின் தேசிய அவை(குவாமி அவை)யின் உறுப்பினர்களைக் குறிக்கிறது.தேசிய அவை இசுலாமாபாத்தில் அமைந்துள்ளது.

மலேசியா[தொகு]

மால்டா[தொகு]

பிற முறைகள்[தொகு]

நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை வெஸ்ட்மினிஸ்டர் நாளுமன்ற முறையைப் பயன்படுத்தாத பிற மக்களாட்சிகளின் பதிலாட்களுக்கு அவர்களின் சொற்களுக்கிணையான மொழிபெயர்ப்பாகக் கொள்ளலாம். காட்டாக, பிரான்சில் டெபுட்(Deputé ) என்றும் பிரேசில் மற்றும் போர்த்துக்கல்லில் Diputado, Deputado என்றும் செருமனியில் Mitglied des Bundestages (MdB) என்றும் அழைக்கப்படுகின்றனர்.

ஆஸ்திரியா[தொகு]

இசுரேல்[தொகு]

இத்தாலி[தொகு]

சுவீடன்[தொகு]

மசிடோனிய குடியரசு[தொகு]

தாய்லாந்து[தொகு]

துருக்கி[தொகு]

நெதர்லாந்து[தொகு]

நோர்வே[தொகு]

பல்கேரியா[தொகு]

போலந்து[தொகு]

ஜெர்மனி[தொகு]

லெபனான்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Difference between MLA and MP". Business Insider. பார்க்கப்பட்ட நாள் 2022-07-22.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடாளுமன்ற_உறுப்பினர்&oldid=3809611" இலிருந்து மீள்விக்கப்பட்டது