இலங்கையில் தேர்தல்கள்
இந்தக் கட்டுரை இலங்கை அரசு மற்றும் அரசியல் தொடர்பான கட்டுரைத் தொடரின் பகுதியாகும். |
---|
இலங்கையில் தேர்தல்கள் பல கட்டங்களில் நடத்தப்படுகின்றன. அரசுத்தலைவர் (சனாதிபதி) தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்கள் தேசிய அளவில் நடத்தப்படுகின்றன. இவற்றைவிட மாகாண சபை, மாவட்ட சபை, மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான் தேர்தல்களும் நடைபெறுகின்றன.
அரசுத்தலைவர் தேர்தல்
[தொகு]நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கை அரசுத்தலைவர் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | |
---|---|---|---|---|
மைத்திரிபால சிறிசேன | புதிய சனநாயக முன்னணி | 6,217,162 | 51.28% | |
மகிந்த ராசபக்ச | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி | 5,768,090 | 47.58% | |
ஆராச்சிகே இரத்நாயக்கா சிறிசேன | தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி | 18,174 | 0.15% | |
நாமல் அஜித் ராஜபக்ச | நமது தேசிய முன்னணி | 15,726 | 0.13% | |
இப்ராகிம் மிஃப்லார் | ஐக்கிய அமைதி முன்னணி | 14,379 | 0.12% | |
ருவான்திலக்க பேதுரு | ஐக்கிய இலங்கை மக்களின் கட்சி | 12,436 | 0.10% | |
ஐத்துருசு எம். இலியாசு | சுயேட்சை | 10,618 | 0.09% | |
துமிந்த நகமுவ | முன்னிலை சோசலிசக் கட்சி | 9,941 | 0.08% | |
சிறிதுங்க ஜெயசூரியா | ஐக்கிய சோசலிசக் கட்சி | 8,840 | 0.07% | |
சரத் மனமேந்திரா | புதிய சிங்கள மரபு | 6,875 | 0.06% | |
பானி விஜயசிறிவர்தன | சோசலிச சமத்துவக் கட்சி | 4,277 | 0.04% | |
அனுருத்த பொல்கம்பொல | சுயேட்சை | 4,260 | 0.04% | |
சுந்தரம் மகேந்திரன் | நவ சமசமாஜக் கட்சி | 4,047 | 0.03% | |
முத்து பண்டார தெமினிமுல்ல | அனைவரும் குடிகள், அனைவரும் அரசர்கள் அமைப்பு | 3,846 | 0.03% | |
பத்தரமுல்லே சீலாரத்தன | ஜன செத்த பெரமுன | 3,750 | 0.03% | |
பிரசன்னா பிர்யங்காரா | சனநாயக தேசிய இயக்கம் | 2,793 | 0.02% | |
ஜெயந்தா குலதுங்க | ஐக்கிய இலங்கை பாரிய பேரவை | 2,061 | 0.02% | |
விமால் கீகனகே | இலங்கை தேசிய முன்னனி | 1,826 | 0.02% | |
செல்லுபடியான வாக்குகள் | 12,123,452 | 100.00% | ||
நிராகரிக்கப்பட்டவை | 140,925 | |||
மொத்த வாக்குகள் | 12,264,377 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 15,044,490 | |||
வாக்களிப்பு வீதம் | 81.52% |
நாடாளுமன்றத் தேர்தல்
[தொகு]225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தின் 196 உறுப்பினர்கள் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மிகுதி 29 உறுப்பினர்கள் தேசிய அளவில் கட்சிகள் பெறும் வாக்கு எண்ணிக்கைக்கேற்ப கட்சிகளின் தேசியப் பட்டியலிருந்து தெரிவு செய்யப்படுகின்றனர். பல உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி அல்லது சுயேட்சைக் குழு ஒன்று பெற்ற வாக்குகளின் அடிப்படையில் விகிதாசார முறைப்படி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கட்சி ஒன்று தேசிய ரீதியில் மொத்த வாக்குகளின் அடிப்படையில் கட்சி செயலாலரினால் பரிந்துரைக்கப்படும் உறுப்பினர்கள் 29 பேர் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
கூட்டணிகளும் கட்சிகளும் | வாக்குகள் | % | இடங்கள் | ||||
---|---|---|---|---|---|---|---|
மாவட்டம் | தேசிய | மொத்தம் | |||||
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
|
4,846,388 | 60.33% | 127 | 17 | 144 | ||
ஐக்கிய தேசிய முன்னணி3 | 2,357,057 | 29.34% | 51 | 9 | 60 | ||
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு4 | 233,190 | 2.90% | 13 | 1 | 14 | ||
ஜனநாயகத் தேசியக் கூட்டணி | 441,251 | 5.49% | 5 | 2 | 7 | ||
சுயேட்சைப் பட்டியல்கள் | 38,947 | 0.48% | 0 | 0 | 0 | ||
மலையக மக்கள் முன்னணி2 | 24,670 | 0.31% | 0 | 0 | 0 | ||
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் | 20,284 | 0.25% | 0 | 0 | 0 | ||
சிங்கள மகாசம்மத பூமிபுத்ர பக்சய | 12,170 | 0.15% | 0 | 0 | 0 | ||
தமிழ்ர் ஐக்கிய விடுதலை முன்னணி | 9,223 | 0.11% | 0 | 0 | 0 | ||
தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணி5 | 7,544 | 0.09% | 0 | 0 | 0 | ||
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி | 6,036 | 0.08% | 0 | 0 | 0 | ||
சிறீ லங்கா தேசிய முன்னணி | 5,313 | 0.07% | 0 | 0 | 0 | ||
ஏனையோர் | 31,644 | 0.39% | 0 | 0 | 0 | ||
செல்லுபடியானவை | 8,033,717 | 100.00% | 196 | 29 | 225 | ||
நிராகரிக்கப்பட்டவை | 596,972 | ||||||
மொத்தமாக வாக்களித்தோர் | 8,630,689 | ||||||
பதிவுசெய்த வாக்காளர்கள் | 14,088,500 | ||||||
Turnout | 61.26% | ||||||
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம் 1. ஈபிடிபி கட்சி வன்னியில் தனித்தும், ஏனைய மாவட்டங்களில் ஐமவிகூ உடன் இணைந்தும் போட்டியிட்டது. 2. மமமு பதுளை, நுவரெலியா ஆகியவற்றில் தனித்தும், ஏனையவற்றில் ஐமவிகூ இல் இணைந்தும் போட்டியிட்டது. 3. ஐதேமு ஐதேகயின் பெயரிலும் அதன் சின்னத்திலும் போட்டியிட்டது. 4. டிஎன்ஏ இதக இன் பெயரிலும் சின்னத்திலும் போட்டியிட்டது. 5. ததேமமு (TNPF) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பெயரில் யாழ், திருகோணமலை மாவட்டங்களில் மட்டும் போட்டியிட்டது. |
கடந்தகாலத் தேர்தல்களும் பொது வாக்கெடுப்புகளும்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Department of Elections பரணிடப்பட்டது 2021-02-11 at the வந்தவழி இயந்திரம்
- Adam Carr's Election Archive
- www.Srilankanelections.com - A website featuring Sri Lankan elections and results.
- ↑ "Presidential Election – 2015, All Island Final Result". slelections.gov.lk. இலங்கை தேர்தல் திணைக்களம். 9 சனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2015.