கைபர் பக்துன்வா மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வடமேற்கு எல்லைப்புற மாகாணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
கைபர் பக்துன்வா
خیبر پښتونخوا

خیبر پختونخواہ
மாகாணம்
Bab-e-Khyber.jpg
MKmosque.jpg
Kalam, Swat (Pakistan).jpg
Saif ul malook lake-01.jpg
மேல்-இடமிருந்து வலம்: பாப்-இ-கைபர், மொகஹப்பத் கான் மசூதி, கலாம் சமவெளி, சுவாட் பள்ளத்தாக்கு மற்றும் சைபுல் முலுக் ஏரி
KP flag
கொடி
KP logo
சின்னம்
அடைபெயர்(கள்): வடமேற்கு எல்லைப்புற மாகாணம்
Location of கைபர் பக்துன்வா
ஆள்கூறுகள் (பெசாவர்): 34°00′N 71°19′E / 34.00°N 71.32°E / 34.00; 71.32ஆள்கூறுகள்: 34°00′N 71°19′E / 34.00°N 71.32°E / 34.00; 71.32
நாடு பாக்கித்தான்
நிறுவப்பட்டது.14 ஆகஸ்டு 1947
re-established 1 சூலை 1970
தலைநகரம்பெசாவர்
பெரிய நகரம்பெசாவர்
அரசு
 • வகைமாகாணம்
 • நிர்வாகம்கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றம்
 • ஆளுநர்இக்பால் ஜாக்ரா
 • முதலமைச்சர்தோஸ்த் முகமது கான்
 • தலைமைச் செயலாளர்நவீத் காம்ரன் பலூச்
 • சட்டமன்றம்ஓரவை முறைமை (124 உறுப்பினர்கள்)
 • உயர்நீதி மன்றம்பெசாவர் உயர்நீதிமன்றம்
பரப்பளவு
 • மொத்தம்101,741 km2 (39,282 sq mi)
மக்கள்தொகை (2017)[1]
 • மொத்தம்35,525,047
 • அடர்த்தி350/km2 (900/sq mi)
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)
தொலைபேசி குறியீடு9291
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுPK-KP
Main Language(s)பாஷ்தூ (ஆட்சி மொழி)
ஹிந்த்கோ
கோவார்
பஞ்சாபி
பாரசீகம்
உருது (தேசிய மொழி)[2]
சட்டமன்றத் தொகுதிகள்124
மாவட்டங்கள்34
மாகாணச் சட்டமன்றம்986
இணையதளம்www.kp.gov.pk
பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணம் (NWFP) (பச்சை நிறம்) மற்றும் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள் (FATA) (நீல நிறத்தில்)

கைபர் பக்துன்வா மாகாணம் (Khyber Pakhtunkhwa) இதன் பழைய பெயர் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் ஆகும். பாகிஸ்தான் நாட்டின் நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்த இச்சிறிய மாகாணத்தின்[3] தென்மேற்கில் பாகிஸ்தான் அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படும் பழங்குடிகள் பகுதிகள் உள்ளது. இதன் தலைநகரம் பெசாவர் நகரம் ஆகும்.

1901 முதல் 1955 முடிய வடமேற்கு எல்லைப்புற மாகாணம் என்றும், பின்னர் வடமேற்கு மாகாணம் என்றும் அழைக்கப்பட்டது. பின்னர் 1 சூலை 1970 முதல் கைபர் பக்துன்வா மாகாணம் எனப்பெயரிடப்பட்டது. இம்மாகாணத்தின் ஆப்கானிஸ்தான் பன்னாட்டு எல்லைப் பகுதியில் உள்ளது.

இம்மாகாணத்தின் எல்லைகள், மேற்கிலும், வடக்கிலும் ஆப்கானித்தான், தென்மேற்கில் பாகிஸ்தான் அரசால் நேரடியாக நிர்வகிக்கபப்டும் பழங்குடிகள் பகுதிகள், தென்கிழக்கில் பஞ்சாப், தேசியத் தலைநகரம் இசுலாமாபாத், ஆசாத் காஷ்மீர் மற்றும் வடக்கு நிலங்கள், தென்மேற்கில் பலுசிஸ்தானுடன் பகிர்ந்து கொள்கிறது.

பாகிஸ்தான் நாட்டின் மக்கள்தொகையில் 11.9%ம், பொருளாதாரத்தில் 10.5%ம், கைபர் பக்துன்வா பங்களிக்கிறது. கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெரும்பான்மையான மக்கள் பஷ்தூ மொழி பேசும் பழங்குடி பஷ்தூன் மக்கள் ஆவர்.

புவியியல்[தொகு]

முன்னர் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள இந்து குஷ் மலை தெற்காசியாவின் நுழைவாயிலாக இருந்தது.[4] கிழக்கில் கைபர் கணவாய் பகுதியில் ஜீலம் ஆற்றின் கரையில் அமைந்த ஆப்டாபாத் நகரத்திலிருந்து, அல் காயிதா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன், அமெரிக்கப்படைகளால் சுட்டுக்கொல்லப்ப்பட்டதால், உலக அளவில் இந்நகரம் பேசப்பட்டது.

புவியியல் படி, கைபர் பக்துன்வா மாகாணத்தின் வடக்கில் பனிபடர்ந்த இந்துகுஷ் மற்றும் தெற்கில் வெப்பமும் மற்றும் குளிரும் நிறைந்த பெசாவர் என இரண்டு புவியியல் மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இம்மாகாணத்தின் சுவாத் சமவெளியில் சுவத், குனார், காபூல், சித்ரால் போன்ற ஆறுகள் பாய்கிறது.

இம்மாகாணாத்தின் வடக்கில் பசுமை நிறைந்த புல் சமவெளிகளும், பனிபடர்ந்த கொடுமுடிகளும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.[5]காபூல் ஆறு மற்றும் சுவத் ஆறுகள் கைபர் பக்துன்வா மாகாணத்தை வளப்படுத்துகிறது.

வரலாறு[தொகு]

மகாபாரதம் கூறும் காந்தார நாடு இம்மாகாணத்தில் இருந்தது. தற்போது காந்தாரம் ஆப்கானிஸ்தான் பகுதியாக உள்ளது. இம்மாகாணத்தின் சுவாத் சமவெளியில் வேதகால நாகரீகம் தொடங்கியது. பின்னர் கிரேக்க செலூக்கியப் பேரரசு காலத்தில் இம்மாகாணத்தில் பௌத்த சமயம் செழிப்புடன் விளங்கியது.

இம்மாகாணத்தின் கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் வழியாக வந்த சிதியர்கள், சகர்கள், பார்த்தியர்கள், கிரேக்கர்கள், பாரசீகர்கள், ஆப்கானியர்கள், துருக்கியர்கள், வட இந்தியாவை முற்றுகையிட்டு கைப்பற்றினர்.

இம்மாகாணம் மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு மற்றும் குசானப் பேரரசின் ஒரு மாகாணமாக விளங்கியது. பௌத்தம் இங்கு பிரபலமாக விளங்கிய காலத்தில் கனிஷ்கரின் தூபி, புத்கார தூபி போன்ற எண்ணற்ற தூபிகளும், விகாரைகளையும் கொண்டிருந்தது. மேலும் இப்பகுதி தில்லி சுல்தானகம் மற்றும் முகலாயப் பேரரசின் பகுதியாக விளங்கியது. இறுதியில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இம்மாகாணம் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் என அழைக்கப்பட்டது. இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் இம்மாகாணம் பாகிஸ்தானின் ஒரு மாகாணம் ஆயிற்று.

நிர்வாகம்[தொகு]

கைபர் பக்துன்வா மாகாணம் எட்டு கோட்டங்களும், 35 மாவட்டங்களும் கொண்டது.

அரசியல்[தொகு]

கைபர் பக்துன்வா மாகாணத்திலிருந்து பாகிஸ்தான் தேசிய சபைக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்கிறது.

சுற்றுலா தலஙகள்[தொகு]

பாகிஸ்தானின் 28 தேசியப் பூங்காக்களில் 18 தேசியப் பூங்காக்கள் இம்மாகாணத்தில் உள்ளது. அவைகளில் சிறப்பானவைகள்:

மக்கள் தொகையியல்[தொகு]

2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாகாணத்தின் மொத்த மக்கள்தொகை 35,525,047 ஆகும். [6] பெரிய இனக்குழு பஷ்தூன் பழங்குடி மக்கள் ஆவார்.[7]1.5 மில்லியன் ஆப்கானிய அகதிகள் இம்மாகாணத்தில் உள்ளனர்.[8]

பஷ்தூன் இனத்தவருக்கு அடுத்து தாஜிக் மக்கள், ஹசாரா மக்கள் உள்ளனர்.[9] இம்மாகாணத்தின் மொத்த மக்கள்தொகையில் 52% ஆண்களும் மற்றும் 48% பெண்களும் உள்ளனர்.

மொழிகள்[தொகு]

உருது மொழி தேசிய மொழியாக இருப்பினும், பஷ்தூன் மொழி, சராய்கி மொழி, கோவர் மொழி மற்றும் கோகிஸ்தானி மொழிகள் இப்பகுதியில் பேசப்படுகிறது.[3][10]

சமயங்கள்[தொகு]

சன்னி இசுலாம் இம்மாகாணத்தில் அதிகம் பயிலப்படுகிறது. சித்ரால் மாவட்டத்தில் மட்டும் சியா இசுலாம் சிறிதளவு பயிலப்படுகிறது. சித்ரால் மாவடடத்தின் தெற்கில் வாழும் கலாஷ் மக்கள் பண்டைய கிரேக்க சமயத்தை பின்பற்றுகின்றனர்.[11] மிகச்சிறு அளவினர் இந்து மற்றும் சீக்கிய சமய மக்கள் உள்ளனர். [12][13]

அரசியல்[தொகு]

இம்மாகாணத்தில் 124 உறுப்பினர்கள் கொண்ட ஓரவை சட்டமன்றம் இயங்குகிறது. மேலும் பாகிஸ்தான் தேசிய சபைக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்கிறது.

பொருளாதாரம்[தொகு]

இம்மாகாணத்தின் வருவாய் காடுகள் பயிர்த்தொழில் மற்றும் சுற்றுலா மூலம் ஈட்டப்படுகிறது. இம்மாகாணத்தில் உள்ள கும்கர் மக்னீசிய சுரங்கம் மூலம் பெருமளவு வருவாய் ஈட்டப்படுகிறது.

பெயர் மாற்றம்[தொகு]

பஷ்தூன் மொழியில் பக்துன்வா எனபதற்கு பஷ்தூன்களின் நிலம் எனப்பொருள்படும். இம்மாகாணத்திற்கு கைபர் பக்துன்வா எனப் பெயர் சூட்ட வேண்டும் என பாகிஸ்தான் தேசிய அவாமி கட்சி போராடியதன் விளைவாக, 15 ஏப்ரல் 2010 அன்று வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திற்கு கைபர் பக்துன்வா மாகாணம் எனப் பெயரிடப்பட்டது.[14]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "PROVISIONAL SUMMARY RESULTS OF 6TH POPULATION AND HOUSING CENSUS-2017". www.pbscensus.gov.pk. 2017-10-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-07-25 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Unknown parameter |= ignored (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 2. "Centenary Celebrations of N.W.F.P. - Government of Pakistan". 2008-09-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-07-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 3. 3.0 3.1 Claus, Peter J.; Diamond, Sarah; Ann Mills, Margaret (2003). South Asian Folklore: An Encyclopedia : Afghanistan, Bangladesh, India, Nepal, Pakistan, Sri Lanka. Taylor & Francis. பக். 447. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780415939195. 
 4. "Khyber Pakhtunkhwa (province, Pakistan) :: Geography – Britannica Online Encyclopedia". Britannica.com. 2010-05-25 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Cold weather in upper areas & dry weather observed in almost all parts of the country | PaperPK News about Pakistan". Paperpkads.com. 2013-01-29. 2013-08-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-05-24 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 6. "Pak population increased by 46.9% between 1998 and 2011". The Times of India. 27 January 2016 அன்று பார்க்கப்பட்டது.
 7. People and culture – Government of Khyber Pakhtunkhwa[தொடர்பிழந்த இணைப்பு]
 8. "Pakistani TV delves into lives of Afghan refugees". United Nations High Commissioner for Refugees. 2008-04-30. 2010-05-25 அன்று பார்க்கப்பட்டது.
 9. "UNHCR country operations profile – Pakistan". United Nations High Commissioner for Refugees. 2012-12-12 அன்று பார்க்கப்பட்டது.
 10. Bashir, Elena L. (2016). "Language endangerment and documentation. Pakistan and Afghanistan". The languages and linguistics of South Asia: a comprehensive guide. World of Linguistics. Berlin: De Gruyter Mouton. பக். 639. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-11-042715-8. 
 11. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; A Brief History of Pakistan என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 12. "Pakistan Valmiki Sabha". Bhagwanvalmiki.com. 17 மே 2004 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 திசம்பர் 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி)
 13. "Sikh refugees demand Indian citizenship". Oneindia News. 2010-02-24. 2012-12-12 அன்று பார்க்கப்பட்டது.
 14. "NWFP to KPK". http://www.insightonconflict.org/. External link in |website= (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]