உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவில் கம்பெனி ஆட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி (இந்தியா)
حاکمیت شرکت بر هند
1757–1858
கொடி of இந்தியா
கொடி
முத்திரை of இந்தியா
முத்திரை
குறிக்கோள்: Auspicio Regis et Senatus Angliae
"பிரித்தானிய மன்னர் மற்றும் நாடாளுமன்றத்தின் கட்டளைப்படிB"
நிலைபிரித்தானிய கிழக்கிந்திய கம்பேனி ஆட்சி
தலைநகரம்கொல்கத்தா
பேசப்படும் மொழிகள்ஆங்கிலம், பாரசீகம், மற்றும் பிற மொழிகள்
பிரித்தானிய இந்தியப் பேரரசின் தலைமை ஆளுனர் 
• 1774–1775
வாரன் ஹேஸ்டிங்ஸ்(முதல்)
• 1857–1858
கானிங் பிரபு (இறுதி)
வரலாறு 
10 மே 1757
• அலகாபாத் ஒப்பந்தம்
1765
• ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை
1792
• பாசின் உடன்படிக்கை 1802 (Treaty of Bassein)
1802
• யாந்தபொ உடன்படிக்கை (Treaty of Yandabo)
1826
• லாகூர் உடன்படிக்கை
1846
• இந்திய அரசுச் சட்டம் 1858
2 ஆகத்து 1858
நாணயம்ரூபாய்
ஐ.எசு.ஓ 3166 குறியீடுIN
முந்தையது
பின்னையது
முகலாயப் பேரரசு
மைசூர் அரசு
மராட்டியப் பேரரசு
சீக்கியப் பேரரசு
வங்காள நவாபுகள்
பிரித்தானிய இந்தியப் பேரரசு
தற்போதைய பகுதிகள் வங்காளதேசம்
 இந்தியா
 மலேசியா
 மியான்மர்
 பாக்கித்தான்
 சிங்கப்பூர்
 இலங்கை
 யேமன்

இந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி அல்லது கம்பெனி ஆட்சி (Company rule in India) or (Company Raj),[1]. 1757ஆம் ஆண்டில் நடந்த பிளாசி சண்டைக்குப்பின், வங்காள நவாப், பிரிட்டன் கிழக்கிந்திய கம்பேனி நிறுவனத்திடம் சரண் அடைந்த பின், இந்திய துணைக் கண்டத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பேனியின் ஆட்சி காலூன்றியது.[2] 1765 ஆண்டு முதல் வங்காளம், ஒரிசா மற்றும் பிகாரில் திவானி எனும் நிலவரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றது.[3]

1773ஆம் ஆண்டில், கிழக்கிந்திய கம்பேனியின் ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்பின், தலைமை ஆளுனர், வாரன் ஏசுடிங்குசு நேரடி நிர்வாகத்தில், கல்கத்தா நகரை தலைமையகமாகக் செயல்பட்டது.[4] கிழக்கிந்திய கம்பேனி நிறுவனம் பல பங்குதாரர்களைக் கொண்ட, லாப நோக்கத்துடன் செயல்படும், தனியார் கூட்டு வர்த்தக நிறுவனம் ஆகும். இதன் நிர்வாகக் குழு மற்றும் தலைமையகம் லண்டனில் அமைந்திருந்தது. கிழக்கிந்திய கம்பேனி தனக்கென காவல் படை, இராணுவப் படை மற்றும் நீதிமன்றங்கள் கொண்டது.

கிழக்கிந்திய கம்பேனி நிர்வாகிகள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஊழல்களையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் தடுத்து நிறுத்திட, பிட்டின் இந்தியா சட்டம், பிரித்தானிய அரசு நடைமுறைப்படுத்தியது. கிழக்கிந்திய நிறுவனச் சட்டம், 1784, சிப்பாய்க் கிளர்ச்சி, 1857க்குப் பின், பிரித்தானிய அரசு கொண்டு வந்த இந்திய அரசுச் சட்டம், 1858க்கு பின்னர் முடிவடைந்தது. 1858ஆம் ஆண்டில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கலைக்கப்பட்டு, இந்தியத் துணைக் கண்டத்தை, இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வில் தேறிய அதிகாரிகளின் நிர்வாகத்தில், பிரித்தானியப் பேரரசு தனது நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது.

எல்லைகளை விரிவு செய்தல்[தொகு]

இந்தியத் துணைக் கண்டத்தில் வணிகம் செய்து லாபம் ஈட்டும் நோக்கத்தில், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி, பிரித்தானிய வணிகர்களால் லண்டனில் 1600ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தின் மசூலிப்பட்டணக் கடற்கரையில் 1611ஆம் ஆண்டிலும், சூரத்தில் 1612ஆம் ஆண்டிலும், 1640இல் விஜயநகரப் பேரரசின் அனுமதியுடன், சென்னையிலும். பின் பம்பாய் நகரிலும் வணிகக் கூடங்களை திறந்தனர்.

இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் 1640ஆம் ஆண்டில் கல்கத்தாவில் தொழிற்கூடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தொடங்கினர். போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனி, பிரான்சு இந்திய கம்பேனி, டச்சு இந்திய கம்பேனிகளுடான போட்டியில், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வெற்றி அடைந்தது.

ராபர்ட் கிளைவ் மற்றும் ஆண்ட்ரே பஸ்தாமாண்டி ஆகிய கிழக்கிந்தியக் கம்பேனியின் படைத் தலைவர்களின் தலைமையிலான படைகள், 1757இல் நடந்த பிளாசிப் போர் மற்றும் 1764இல் நடந்த பக்சார் போர்களில் பெற்ற வெற்றியால், வங்காளம், ஒரிசா மற்றும் பிகாரில் நிலவரி வசூலிக்கும் உரிமையும், 1773இல் கீழ் கங்கைப் பகுதிகளில் பல நிலப்பரப்புகளும் அடைந்தனர்.

கர்நாடகப் போர்கள் (1746 – 1758), ஆங்கிலேய-மைசூர்ப் போர்கள் (1766-1799), ஆங்கிலேய-மராட்டியப் போர்கள் (1772-1818), ஆங்கிலேய-நேபாளப் போர் (1814 - 16), ஆங்கிலேய-பர்மியப் போர்கள் (1824-1826), இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியப் போர்கள் (1849-1856) மூலம் வட மேற்கு இந்தியாவிலும், மேற்கு இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும், வடகிழக்கு இந்தியாவிலும், கிழக்கிந்தியக் கம்பெனியினர தங்களது ஆளும் நிலப்பரப்பை விரிவுபடுத்திக் கொண்டனர்.[5][6]

ஆங்கிலேய-நேபாளப் போர் (1814–16) முடிவில் ஏற்பட்ட சுகௌலி உடன்படிக்கை மூலம், நேபாள இராச்சியம் கைப்பற்றிருந்த தற்கால உத்தராகண்ட் மாநிலத்தின் கார்வால், குமாவுன், சிக்கிம், டார்சிலிங் மற்றும் மேற்கு தராய் சமவெளிப் பகுதிகள் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனியினர் கைக்கு வந்தது.

ஆங்கிலேய-பர்மியப் போர்கள் மூலம் அசாம், மணிப்பூர், அரக்கான் பகுதிகளை, பர்மாவிடமிருந்து கைப்பற்றினர்.

ஆங்கிலேய-மராட்டியப் போர்கள் மூலம் குசராத்து, இராசத்தான், மத்திய இந்தியா மற்றும் மகாராட்டிரா பகுதிகளை, மராட்டியர்களிடமிருந்து கைப்பற்றினர்.

1836-இல் தற்கால உத்தரப் பிரதேச மாநிலப் பகுதிகளைக் கொண்டு வடமேற்கு மாகாணத்தை நிறுவினர். 1838-இல் அவத் பிரதேசத்தைக் கைப்பற்றினர்.

ஆங்கிலேய–சீக்கியர் போர்களின் (1848 - 1849) முடிவில்[7], சீக்கியப் பேரரசிடமிருந்த பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணப் பகுதிகள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியுடன் இணைக்கப்பட்டது.

சென்னை மாகாணம், வங்காள மாகாணம், பம்பாய் மாகாணம், ரோகில்கண்ட், கோரக்பூர், தோவாப், தில்லி, அசாம், சிந்து, பஞ்சாப் மாகாணம், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் மற்றும் வடமேற்கு மாகாணங்கள் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின் நேரடி நிர்வாகத்தில் இருந்தன.

1818-இல் ஏற்பட்டுத்தப்பட்ட இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் படி, பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக்கு கட்டுப்பட்ட 565 இந்து, இசுலாமிய மற்றும் சீக்கிய சுதேச சமசுதானங்கள் இருந்தன.

சென்னை மாகாணத்தில் கம்பனி ஆட்சி (1684-1858)[தொகு]

தமிழகத்தில் முதன் முதலில் ஆங்கிலேயர் பதினாறாம் நூற்றாண்டில் கால் பதித்தனர்.[8] தற்கால சென்னை நகரத்தில், புனித சார்ச்சு கோட்டையைக் கட்டினர். முதலில் வர்த்தகம் மட்டும் செய்து வந்த ஆங்கில கிழக்கிந்தியக் கம்பனி, பின் மெல்ல மெல்ல உள்ளூர் அரசியல் விவகாரங்களில் தலையிடத் தொடங்கியது. 1684 ஆம் ஆண்டு தென்னாட்டில் உள்ள கம்பனி பிரதேசங்கள், சென்னை மாகாணம் என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டன. பதினெட்டாம் நூற்றாண்டில், நடைபெற்ற கர்நாடகப் போர்களால், ஆங்கிலேயர்களின் கை ஓங்கியது. ஆற்காடு நவாப் மற்றும், ஃபிரஞ்சுப் படைகளை வென்றதால், அவர்களின் ஆதிக்கத்திலிருந்த பல பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தன. ஐதர் அலி, மற்றும் திப்பு சுல்தானை வீழ்த்தியதின் மூலம் மேற்கிலும், கட்டபொம்மன், மருது பாண்டியர் முதலிய பாளையக்காரர்களை வென்றதன் மூலம் சென்னை மாகாணத்தில் கம்பெனி ஆட்சி வலுப்பெற்றது.

இராணுவம் மற்றும் குடிமைப் பணிகள்[தொகு]

1772ஆம் ஆண்டில் வாரன் ஏசுடிங் முதல் கவர்னர் செனரலாக, கொல்கத்தாவில் பதவியேற்றவுடன், கிழக்கிந்தியக் கம்பெனியின், வங்காள மாகாண இராணுவத்தை விரைவாக பெருக்கினார். அயோத்தி வீரர்கள், இராசபுதன ராசபுத்திரர்கள் மற்றும் பிராமணர்களை கம்பேனி படையணிகளில் திரட்டினார்.

1796க்குப் பின் கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகள்[9]
பிரித்தானியப் படைகள் இந்தியப் படைகள்
வங்காள மாகாணம் சென்னை மாகாணம் பம்பாய் மாகாணம்
24,000 24,000 9,000
13,000 மொத்த இந்தியப் படைகள்: 57,000
மொத்த ஆங்கிலேய மற்றும் இந்தியப்படைகள்: 70,000

மூன்றாம் ஆங்கிலேய-மைசூர் போருக்குப்பின் 1791இல் சென்னை மாகாணப் படைகளுக்கு ஆதரவாகவும், சாவா, இலங்கை போன்ற வெளி நாட்டுப் போர்களுக்குத் துணையாக வங்காள மாகாணப் படைகள் பயன்பட்டன.

வேலூர் சிப்பாய் எழுச்சியின் போது, 1806இல் கிழக்கிந்திய கம்பேனியின் படையில் 1,54,500 படைவீரர்களும் அதிகாரிகளும் இருந்தனர்.[10]

வேலூர் சிப்பாய் எழுச்சியின் போது கம்பேனிப் படைகள் [11]
மாகாணங்கள் ஆங்கிலேயப் படைகள் இந்தியப் படைகள் மொத்தம்
வங்காளம் 7,000 57,000 64,000
சென்னை 11,000 53,000 64,000
பம்பாய் 6,500 20,000 26,500
மொத்தம் 24,500 130,000 154,500
1857, சிப்பாய் கலவரத்தின் போது, கம்பேனி படைகள்[12]
மாகாணங்கள் பிரித்தானியப் படைகள் இந்தியப் படைகள்
குதிரைப் படை பீரங்கிப் படை தரைப் படை மொத்தம் குதிரைப் படை பீரங்கிப் படை சுரங்கம்
&
அகழி தோண்டுபவர்கள்
தரைப் படை மொத்தம்
வங்காளம் 1,366 3,063 17,003 21,432 19,288 4,734 1,497 112,052 137,571
சென்னை 639 2,128 5,941 8,708 3,202 2,407 1,270 42,373 49,252
பம்பாய் 681 1,578 7,101 9,360 8,433 1,997 637 33,861 44,928
உள்ளூர் படைகள்
6,796 2,118 23,640 32,554
" "
வகைப் படுத்தப் படாதவர்கள்
7,756
இராணுவ காவல்துறை 38,977
மொத்தம் 2,686 6,769 30,045 39,500 37,719 11,256 3,404 211,926 311,038
மொத்த பிரித்தானிய மற்றும் இந்தியப் படைகள் 350,538

வளர்ச்சிப் பணிகள்[தொகு]

அஞ்சல், தந்தி சேவைகள் தொடங்கப்பட்டது. ஆங்கிலேய முறை கல்வி வளர்ந்தது. தொடருந்து சேவை துவக்கப்பட்டது.

தலைமை ஆளுனர்கள்[தொகு]

பிரித்தானிய கிழக்கிந்திய ஆட்சியில், முக்கிய நிகழ்வுகளின் போது இருந்த தலைமை ஆளுனர்களின் பெயர்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைமை ஆளுனர் பதவியில் நிகழ்வுகள்
வாரன் ஹேஸ்டிங்ஸ் 20 அக்டோபர் 1773 – 1 பிப்ரவரி 1785 வங்காளப் பஞ்சம் (1769–73)
ரோகில்லாப் போர் (1773–74)
முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போர் (1777–1783)
சாலிசா பஞ்சம்
(1783–84)
இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் (1780–1784)
1784 பிட்டின் இந்தியச் சட்டத்தின் (1784) மூலம் கம்பெனி ஆட்சியின் நடவடிக்கைகள் ஐக்கிய இராச்சியம் கட்டுப்படுத்துதல்.
சார்லஸ் காரன்வாலிஸ் 12 செப்டம்பர் 1786 – 28 அக்டோபர் 1793 காரன்வாலிஸ் நடைமுறைகள் (1793)
நிலவரி வசூலில் நிரந்தரத் தீர்வு
மூன்றாம் ஆங்கிலேய-மைசூர் போர் (1789–1792)
1791-92ஆம் ஆண்டு மண்டையோடு பஞ்சம் (1791–92)
ஜான் சோர் 28 அக்டோபர் 1793 – மார்ச்சு 1798 முதல் மலபார் கிளர்ச்சியை (1793-1797) அடக்குதல். )
ஜெய்ப்பூர் (1794), திருவிதாங்கூர் (1795) மன்னராட்சி நாடுகள் கம்பெனி பாதுகாப்பில் கொண்டு வரல்.
அந்தமான் தீவுகள் கைப்பற்றல் (1796)
டச்சுகாரர்களிடமிருந்து இலங்கை கடற்கரை பகுதிகள் கைப்பற்றல் (1796).
ரிச்சர்டு வெல்லசுலி 18 மே 1798 – 30 சூலை 1805 ஐதராபாத் நிசாம் முதலில் துணைப்படைத் திட்டத்தில் சேருதல் (1798)
ஆங்கில-மைசூர் போர்கள் முடிவில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டு, மைசூர் அரசு மீண்டும் உடையார்களிடம் சென்றது. மைசூர் அரசின் பழைய பகுதிகளான கோயம்புத்தூர், வடகன்னடம் மற்றும் தெற்கு கன்னடம் பகுதிகள் சென்னை மாகாணத்துடன் இணைத்துக்கப்பட்டது. ஐதராபாத் நிசாம் மற்றும் பேஷ்வாக்கள், திப்பு சுல்தானிடம் தாங்கள் இழந்த பகுதிகளை மீண்டும் தங்கள் இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டனர்.
இரண்டவது மலபார் கிளர்ச்சி (1800–1805)
அயோத்தி நவாப் உத்தௌலா, கோரக்பூர், ரோகில்கண்ட், அலகாபாத், பதேபூர், கான்பூர், எடவா, மெயின்புரி, மிர்சாபூர் பகுதிகள் மற்றும் குமாவுன் பகுதிகளை கம்பேனி ஆட்சியாளர்களுக்கு விட்டு கொடுத்தல் (1801)<
1802ஆம் ஆண்டில் பசீன் உடன்படிக்கை (1802)|பாசின் உடன்படிக்கையின்படி]] மராத்திய பேஷ்வா, இரண்டாம் பாஜி ராவ், துணைப்படைத் திட்ட திட்டத்தை ஏற்றல்.
இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் (1803-1805) மத்திய இந்தியாவின் புந்தேல்கண்ட், தோவாப், தில்லி, ஆக்ரா பகுதிகளை மராத்தியர்களிடமிருந்து கைப்பற்றல்
1804ஆம் ஆண்டு மலபார் நாட்டை இணைத்தல்
தில்லி போரில் (1803) தில்லியை கைப்பற்றல்
காரன்வாலிஸ் (இரண்டாம் பதவிக் காலம்) 30 சூலை 1805 – 5 அக்டோபர் 1805 தொடர் படையெடுப்புகள் விளைவாக ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பேனிக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு அமைதி குலைதல்.
இந்தியாவில் அமைதியை நிலைநாட்ட கார்ன்வாலிஸ் மீண்டும் தலைமை ஆளுனராக நியமிக்கப்படுதல், பின் காஜிப்பூரில் இறத்தல்.
ஜார்ஜ் ஹிலாரியோ பார்லோ (George Hilario Barlow) 10 அக்டோபர் 1805 – 31 சூலை 1807 வேலூர் புரட்சி (10 சூலை 1806)
மிண்டோ பிரபு 31 சூலை 1807 – 4 அக்டோபர் 1813 மொரிசியஸ் நாட்டை கைப்பற்றல் (1810-1968)
ஜாவாவை கைப்பற்றல்.
மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ் 4 அக்டோபர் 1813 – 9 சனவரி 1823 1813ல் பட்டயச் சட்டம் இயற்றப்பட்டது. ஆங்கிலேய-நேபாளப் போரின் (1814–16) முடிவில் ஏற்பட்ட சுகௌலி உடன்படிக்கையின் படி, நேபாள இராச்சியம் கைப்பற்றிய கார்வால், குமாவுன், சிக்கிம், டார்ஜிலிங் மற்றும் மேற்கு தராய் சமவெளிப் பகுதிகள் ஆங்கிலேயர்கள் பெற்றனர்.
1817இல் ராஜபுத்திர மன்னர்கள், பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பேனியின் மேலாதிக்க நிலையினை ஏற்று கொள்தல்
1818இல் சிங்கப்பூர் நிறுவப்பட்டது.
1819இல் கட்ச் சமஸ்தானம், பிரித்தானியரின் மேலாதிக்க நிலையை ஏற்றது.
1819இல் மத்திய இந்திய மாகாணம் உருவாக்கப்பட்டது. மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போர் (1817 – 1818) விளைவாக மராத்தியப் பேரரசு வீழ்ந்ததது.
வில்லியம் பிட் பிரபு 1 ஆகஸ்டு 1823 – 13 மார்சு 1828 முதல் ஆங்கிலேய-பர்மியப் போரில், (1823–1826) அகோம் பேரரசு, பர்மா அரசின் கட்டுக்குள் இருந்த அசாம், மணிப்பூர் மற்றும் பர்மிய பகுதியின் அரக்கான் மலைப் பகுதிகளை கிழக்கிந்திய கம்பேனி ஆட்சியுடன் இணைத்தல். 1824 பராக்பூர் சிப்பாய்க் கிளர்ச்சியை ஒடுக்குதல்
வில்லியம் பென்டிங்கு பிரபு 4 சூலை 1828 – 20 மார்ச் 1835 ரயத்துவாரி நிலவரி முறை
இராசாராம் மோகன் ராய் இந்துக்களின் மறுமலர்ச்சிக்கு பிரம்ம சமாஜம் துவக்குதல், உடன்கட்டை ஏறல் வழக்கத்தை ஒழித்தல் (1829)
வழிப்பறி கொள்ளையை கட்டுப்படுத்தும் சட்டம் இயற்றுதல்
மைசூர் மன்னராட்சிப் பகுதிகளை பிரித்தானியரின் நிர்வாக வரம்பில் கொண்டு வருதல் (1831–1881)
பகவல்பூர் மன்னர், பிரித்தானியரின் மேலாதிக்க நிலையை ஏற்றல் (1833)
குடகு இராச்சியத்தை இணைத்தல் (1834).
ஜார்ஜ் ஈடன் பிரபு 4 மார்ச் 1836 – 28 பிப்ரவர் 1842 வடமேற்கு மாகாணங்கள் மற்றும் வட-மேற்கு எல்லைப்புற மாகாணத்தை நிறுவுதல் (1836)
இந்தியா முழுவதும் அஞ்சலகங்கள் நிறுவுதல் (1837)
ஆக்ரா பஞ்சம், 1837–1838
ஏடன் நகரம் கைப்பற்றல் (1839)[13]
எல்பின்ஸ்டோன் படைகள் நிகழ்த்திய படுகொலைகள் (1842)
முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர், 1839-1842
எல்லன்பரோ பிரபு 28 பிப்ரவர் 1842 – சூன் 1844 முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர் (1839–1842)
சிந்து அரசை கம்பெனி ஆட்சியில் இணைத்தல் (1843)
ஹென்றி ஹார்டிங் 23 சூலை 1844 – 12 சனவரி 1848 முதல் ஆங்கிலேய-சீக்கியப் போர் (1845–1846)
லாகூர் உடன்படிக்கையின்படி 1846இல் சீக்கியர்கள், ஜலந்தர், தோவாப், காஷ்மீர் பகுதிகளை பிரித்தானியருக்கு விட்டுக் கொடுத்தல்.
டல்ஹவுசி பிரபு 12 சனவரி 1848 – 28 பிப்ரவரி 1856 இரண்டாம் ஆங்கிலேய சீக்கியப் போர் (1848–1849)
பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களை இணைத்தல். (1849–1856)
இந்தியாவில் 1858 முதல் தொடருந்து, பம்பாய்க்கும், தானே இடையே அமைத்தல் (1853)
சாதித் தகுதியை ஒழித்தல் (1850)
முதன் முதலாக இந்தியாவில் தந்தி தகவல் சேவையை துவக்குதல் (1851)
இரண்டாம் ஆங்கிலேய-பர்மியப் போரில் (1852–1853), தெற்கு பர்மாவை கைப்பற்றுதல்
கங்கை ஆற்றில் கால்வாய்கள் அமைத்தல் (1854)
அவகாசியிலிக் கொள்கையின்படி சதாரா (1848), ஜெய்ப்பூர் மற்றும் சம்பல்பூர் (1849), நாக்பூர் மற்றும் ஜான்சி இராச்சியங்களை (1854), பேரர் பகுதி (1853) (Berar Province), தஞ்சாவூர் மராத்திய அரசு, 1855 மற்றும் அயோத்தி இராச்சியம் (1859) போன்ற பல சுதேச சமஸ்தானங்களை கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில் இணைத்தல்.
தந்தி சேவையை தொடங்குதல். (1855)
கானிங் பிரபு 28 பிப்ரவரி 1856 – 1 நவம்பர் 1858 ஆங்கிலேய பாரசீகப் போர், விதவை மறுமணச் சட்டமியற்றல் (25 சூலை 1856)
சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 ஒடுக்கியது. (10 மே 1857 – 20 சூன் 1858)
1858ல் பிரித்தானிய இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றியது.
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் இந்தியாவில் கம்பெனி ஆட்சியை கலைத்தல் [14] பின் 1858ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் பிரித்தானிப் பேரரசு ஆட்சி துவங்கியது.
சென்னைப் பல்கலைக்கழகம், பம்பாய் பல்கலைக்கழகம் மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகம் ஆகியவைகள் 1858ல் நிறுவப்பட்டது.

கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் வீழ்ச்சி[தொகு]

கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் அமைந்த கம்பெனி ஆட்சியின் நிர்வாகத்தில் ஊழல் பெருகியதாலும், கடுமையான பஞ்சத்தாலும் கம்பெனியின் நிதி திவாலா நிலைக்குச் சென்றதாலும், சிப்பாய்க் கிளர்ச்சிக்குப்பின் 1858ஆம் ஆண்டின் இறுதியில், கிழக்கிந்திய நிறுவனத்தை கலைக்கப்பட்டதால், இந்தியாவில் கம்பெனி ஆட்சி முடிவுற்று, பிரித்தானியா பேரரசின் கீழ் பதவி வகித்த வைஸ்ராய் தலைமையில் இந்திய துணைக் கண்டத்து ஆட்சியை தனது நேரடிக் கட்டுக்குள் கொண்டு வந்தது.

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

 1. Robb 2004, ப. 116–147 "Chapter 5: Early Modern India II: Company Raj", Metcalf & Metcalf 2006, ப. 56–91 "Chapter 3: The East India Company Raj, 1772-1850," Bose & Jalal 2003, ப. 76–87 "Chapter 7: Company Raj and Indian Society 1757 to 1857, Reinvention and Reform of Tradition."
 2. Bose & Jalal 2003, ப. 76
 3. Brown 1994, ப. 46, Peers 2006, ப. 30
 4. Metcalf Metcalf, ப. 56
 5. http://books.google.co.in/books?id=uzOmy2y0Zh4C&pg=PA271&dq=1818+british+india+maratha&hl=en&sa=X&ei=3kB1UorJLYSlkQXwvYDoDw&ved=0CEgQ6AEwBQ#v=onepage&q&f=fale
 6. http://books.google.co.in/books?id=aZ2F6BE6n2QC&pg=PA82&dq=1818+british+india+maratha&hl=en&sa=X&ei=3kB1UorJLYSlkQXwvYDoDw&ved=0CDkQ6AEwAg#v=onepage&q&f=false
 7. "Second Anglo Sikh War". Archived from the original on 2017-12-01. பார்க்கப்பட்ட நாள் 2017-12-12.
 8. பிரிட்டிஷார் இந்தியாவில் காலூன்றுவதற்காக விதை போடப்பட்ட நாள்
 9. Imperial Gazetteer of India vol. IV 1907, ப. 333
 10. Metcalf & Metcalf 2006, ப. 61, Bayly 1990, ப. 84–86
 11. Imperial Gazetteer of India vol. IV 1907, ப. 335
 12. Imperial Gazetteer of India vol. IV 1907, ப. 338
 13. "British East India Company captures Aden on January 18, 1939". Archived from the original on மே 1, 2021. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 24, 2015. {{cite web}}: Check date values in: |access-date= (help)
 14. "Official, India". உலக மின்னூலகம். 1890–1923. பார்க்கப்பட்ட நாள் 30 May 2013.

வெளி இணைப்புகள்[தொகு]