உள்ளடக்கத்துக்குச் செல்

ஏடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏடன்
Aden
தற்காலிகத் தலைநகரும் நகரமும்
முவால்லா
ஏடன் துறைமுகம்
விக்டோரியா மகாராணியின் சிலை
கிரேட்டர் மாவட்டம்
அபியான் கடற்கரை
ஏடன் is located in யேமன்
ஏடன்
ஏடன்
ஏமனில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 12°48′N 45°02′E / 12.800°N 45.033°E / 12.800; 45.033
நாடுஏமன்
பிராந்தியம்ஏடன் பிராந்தியம்
ஆளுநரகம்ஏடன் ஆளுநரகம்
முதல் குடியேற்றம்[1]கிமு 7-ஆம் நூற்றாண்டு
பிரித்தானிய ஆக்கிரமிப்பு19 சனவரி 1839
ஏடன் மாநிலம்18 சனவரி 1963
விடுதலை30 நவம்பர் 1967
அரசு
  ஆளுநர்அப்துல்ரகுமான் அல்-யாஃபெய்[2]
  ஆளும் குழுஏடன் உள்ளூராட்சி
பரப்பளவு
  மொத்தம்760 km2 (290 sq mi)
ஏற்றம்
6 m (20 ft)
மக்கள்தொகை
 (2017)[3]
  மொத்தம்8,63,000 Increase
  மதிப்பீடு 
(2023)[4]
10,79,670 Increase
  அடர்த்தி1,135.52/km2 (2,941.0/sq mi)
இனம்ஏடனி
இனங்கள்
  பெரும்பான்மைஅராபியர்
  சிறுபான்மைஆப்பிரிக்க-அரபுக்கள், இந்தியர், பாக்கித்தானியர், சோமாலிகள்
மொழிகள்
  அதிகாரபூர்வம்அரபு
  பேசப்படுவதுஏடன் அரபு (பெரும்பான்மை)

ஆங்கிலம்[5][6] (பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது)

இந்தி,[7] சோமாலி[8] (சிறுபான்மை)
நேர வலயம்ஒசநே+3 (ஒசநே+03:00)
இடக் குறியீடு02
வரலாற்று இணைப்புகள்

அவ்சான் இராச்சியம்
இமியாரைட் இராச்சியம்
அக்சும் பேரரசு
சசானிய ஏமன்
முதலாவது இசுலாமிய அரசு
ராசிதீன் கலீபாக்கள்
உமையா கலீபகம்
அப்பாசியக் கலீபகம்
சியாதிது வம்சம்
நசாகிது வம்சம்
சுலைகிது வம்சம்
சுராயிது வம்சம்
அய்யூப்பிய வம்சம்
ரசூலிது வம்சம்
தாகிரிது சுல்தானகம்
எகிப்தின் மம்லுக் சுல்தானகம்
போர்த்துக்கீச ஏடன்
ஏமன் எயாலெட்]]
காசிமிது மாநிலம்
ஏமன் விலாயெட்
காசிமிது அரசு
லாகெச் சுல்தானகம் 1728–1839
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு ஏடன் மாகாணம் 1839–1937
ஏடன் குடியேற்றம் 1937–1963
பிரித்தானியப் பேரரசு ஏடன் பாதுகாப்புப் பகுதி 1937–1963
தெற்கு அராபியக் கூட்டமைப்பில் ஏடன் 1963–1967
தெற்கு யேமன் தெற்கு யேமன் 1967–1990
யேமன் ஏமன் குடியரசு 1990–1994
தெற்கு யேமன் ஏமன் சனநாயகக் குடியரசு 1994
யேமன் ஏமன் குடியரசு 1994–இன்று

ஏடன் (Aden; அரபு: عَدَنْ, ஆடன்) என்பது ஏமன் நாட்டின் ஒரு துறைமுக நகரம் ஆகும். இது அரபுத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில், ஏடன் வளைகுடாவிற்கு வடக்குக் கரையில், செங்கடலின் கிழக்கு அணுகலிற்கு அருகில், பாபுல் மந்தபு நீரிணையிலிருந்து 170 கிமீ (110 மைல்) கிழக்கே அமைந்துள்ளது. கடலோரப் பகுதியில் இதன் மூலோபாய இருப்பிடத்துடன், ஏடன் செங்கடலுக்கும் அரபிக் கடலுக்கும் இடையிலான நுழைவாயிலாகச் செயல்படுகிறது, இது ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு ஆகியவற்ற இணைக்கும் ஒரு முக்கியமான கடல்சார் மையமாக அமைகிறது.

செப்டம்பர் 2025 நிலவரப்படி, ஏடனில் சுமார் 1,154,000 மக்கள் வசிக்கின்றனர், இது ஏமனின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகும்.[9] இது எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய ஏடன் ஆளுநரகத்தின் தலைநகரம் ஆகும். குடியேற்ற காலத்தில், ஏடன் என்ற பெயர் வளைகுடாவின் வடக்குக் கரையில் உள்ள பகுதியைக் குறிக்கிறது, இது தவாகி, முவல்லா, கிறேட்டர், கோர் மக்சர் மாவட்டத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கியது. குட்டி ஏடன் என்று அழைக்கப்படும் மேற்குத் துறைமுகத் தீபகற்பம் இப்போது அல் புரைகே மாவட்டத்திற்குள் வருகிறது.

நவீன கால ஏடன் ஆளுநரகத்திற்குள் ஏடன் மற்றும் குட்டி ஏடனைக் காட்டும் வரைபடம்

விடுதலை பெறுவதற்கு முன்பு, ஏடன் தனித்துவமான துறைகளைக் கொண்டிருந்தது: அசல் துறைமுகமான கிரேட்டர்; நவீன துறைமுகமான மால்லா; முன்னர் "ஸ்டீமர் முனை" என்று அழைக்கப்பட்ட தவாகி; கோல்ட் மொகுர் உலாவூர்கள் ஆகியனவாகும். ஏடனை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் பூசந்தியில் உள்ள கோர்மக்சர், வெளிநாட்டுத் தூதரகங்கள், ஏடன் பல்கலைக்கழகத்தின் முக்கிய அலுவலகங்கள், ஏடன் பன்னாட்டு விமான நிலையம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பிரதான நிலப்பரப்பில், பழைய சோலைப் பகுதியான சேக் ஓத்மான்; பிரித்தானியத் திட்டமிடப்பட்ட நகரமான அல்-மன்சுரா; தெற்கு அரேபிய கூட்டமைப்பின் முன்னாள் தலைநகரான மடினாத் ஆஷ்-சாப் ஆகியவை அடங்கும்.

நவீன துறைமுகத்தை உருவாக்கும் ஒரு பரந்த இயற்கைத் துறைமுகத்தின் கிழக்குப் பகுதியை ஏடன் சூழ்ந்துள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், டேங்கர் துறைமுகத்திற்கான தளமாக குட்டி ஏடன் உருவாக்கப்பட்டது. இரண்டும் 1978-இல் தெற்கு யேமன் அரசாங்கத்தின் உரிமை மற்றும் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்படும் வரை, பிரித்தானியப் பெட்ரோலியத்தால் நிறுவப்பட்டு இயக்கப்பட்டன.

1990, மே 22 அன்று வடக்கு யேமனுடன் ஐக்கியப்படும் வரை ஏடன் தெற்கு யேமனின் தலைநகராக இருந்தது. 2014 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு இது தற்போது ஏமனின் தற்காலிகத் தலைநகராக உள்ளது. இது 2018 முதல் 2026 வரை பிரிவினைவாத தெற்கு இடைக்காலப் பேரவையின் இடமாகவும் இருந்தது.[10]

படக்காட்சிகள்

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Britannica, N.A. ""Aden". Encyclopedia Britannica, 25 Mar. 2023". Britannica. The Editors of Encyclopaedia. Archived from the original on 26 April 2015. Retrieved 24 May 2023.
  2. https://www.yemenmonitor.com/en/Details/ArtMID/908/ArticleID/160833
  3. Central Statistical Organisation. "Yemen Statistical Yearbook for 2017". Archived from the original on 20 January 2021. Retrieved 31 August 2020.
  4. "Aden Population". World Population Review. Archived from the original on 16 May 2023. Retrieved 29 May 2023.
  5. "What Languages Are Spoken in Yemen?". WorldAtlas. 2017-08-03. Archived from the original on 30 May 2023. Retrieved 2023-05-29.
  6. An Investigation about the Importance of Speaking English as a Second Research Paper." Retrieved from https://studentshare.org/social-science/1732558-an-investigation-about-the-importance-of-speaking-english-as-a-second-language-in-the-republic-of-yemen பரணிடப்பட்டது 30 மே 2023 at the வந்தவழி இயந்திரம்.
  7. Rodrigues, Charlene. "From Aden to Trafalgar: Arabic leaves its mark on world's languages". Middle East Eye. Archived from the original on 29 May 2023. Retrieved 2023-05-29.
  8. "Yemen: Two Young Somalis Become Role Models In Their Community - Somalia | ReliefWeb". reliefweb.int. 2010-05-24. Archived from the original on 8 September 2023. Retrieved 2023-05-30.
  9. "Aden Population 2023". worldpopulationreview.com. Archived from the original on 16 May 2023. Retrieved 2023-08-14.
  10. "Yemen conflict: Southern separatists seize control of Aden". BBC News. 2019-08-10. https://www.bbc.com/news/world-middle-east-49308199.
  11. Port of Aden inner harbour [தொடர்பிழந்த இணைப்பு]

மேற்கோள்கள்

[தொகு]
  • Norris, H.T.; Penhey, F.W. (1955). "The Historical Development of Aden's defences". The Geographical Journal CXXI part I. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏடன்&oldid=4440379" இலிருந்து மீள்விக்கப்பட்டது