ஆக்ரா பஞ்சம், 1837–1838

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வடமேற்கு மாகாணங்களின் வரைபடம். பஞ்சத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள் நீலக்கோட்டிட்டுக் காட்டப்பட்டுள்ளன.[1]

ஆக்ரா பஞ்சம், 1837–1838 (Agra famine of 1837–1838) என்பது கம்பெனி ஆட்சியில் இந்தியாவில் வடமேற்கு மாகாணங்கள் பகுதியைத் தாக்கிய ஒரு பெரும் பஞ்சம். இப்பஞ்சம் ஏறத்தாழ 65,000 சதுர கிமீ நிலப்பரப்பையும் 80 லட்சம் மக்களையும் பாதித்தது. ஏறத்தாழ எட்டு லட்சம் பேர் இப்பஞ்சத்தால் மாண்டனர். இப்பகுதி மக்களால் இது ”சௌரான்வெ” (தொன்னூற்றி நான்கு - இந்து சம்வத் நாட்காட்டியின்படி 1894 ஆம் ஆண்டு நிகழ்ந்ததால்) பஞ்சம் என்று அழைக்கப்படுகிறது.

தோவாப் பகுதியில் 1837 ஆம் ஆண்டு கோடைக்காலப் பருவமழை பொய்த்தது. இதனால் அவ்வாண்டின் வேனிற்கால அறுவடை பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் வறட்சி நிலவியது. அடுத்து குளிரிகாலப் பருவமழையும் பொய்த்ததால் பஞ்சம் உருவானது. மத்திய தோவாப் பகுதி மாவட்டங்களான கான்பூர், எட்டவா, மைன்புரி, கல்பி ஆகியவையும் ஜமுனா பகுதி மாவட்டங்களான ஜலாவுன், ஹமீர்புர், பாண்டா ஆகியவையும் பஞ்சத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. பஞ்சத்தின் கடுமையைக் குறைக்க கிழக்கிந்திய நிறுவன நிருவாகிகள் நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர். உடலுழைப்புக்கு பதிலாக உணவு தானியங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன. மொத்தம் 23 லட்சம் ரூபாய் பஞ்ச நிவாரணத்துக்காக செலவிடப்பட்டது. பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் பிற பகுதிகளுக்கு புலம் பெயர்ந்தனர். உழவர்களும் அவர்களைச் சார்ந்து வர்த்தகம் செய்து வந்த வர்த்தகர்களும் இப்பஞ்சத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏராளமான கால்நடைகளும் பட்டினியால் மாண்டன.

மேலும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Adaptation of Siddiqi 1973, p. 200,Sharma 1993, p. 340

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்ரா_பஞ்சம்,_1837–1838&oldid=2475272" இருந்து மீள்விக்கப்பட்டது