மதுவிலக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மதுவிலக்கு என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் (நாடு, மாநிலம் அல்லது நகரம்) மதுவின் தயாரிப்பு, விநியோகம் மற்றும் விற்பனையைத் தடை செய்யும் சட்ட நடவடிக்கை ஆகும். பொதுவாக சமயம், சமூக சீர்திருத்தம், பொதுநலம் போன்ற காரணங்களால் மதுவிலக்குக் கொள்கைகள் அரசுகளால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. உலக வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நாடுகளில், பலதரப்பட்ட மதுவிலக்குக் கொள்கைகள் அமலில் இருந்துள்ளன. மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் காலங்களில் சட்டத்துக்குப் புறம்பான மதுபானத் தயாரிப்பும் விற்பனையும் அதிகரிப்பது வழக்கம்.

இந்தியா[தொகு]

இந்தியாவில், தமிழ்நாடு மதுவிலக்குக் கொள்கையைக் கைவிட்டு அரசே மதுவிற்பனை செய்யும் மாநிலமாகவும், கேரளா மதுவிலக்கை நோக்கி முன்னேற முயலும் மாநிலமாகவும்,[1] குஜராத் மதுவிலக்குக் கொள்கை கொண்ட மாநிலமாகவும்[2] உள்ளன.

தமிழ்நாடு[தொகு]

சுதந்திர இந்தியாவில் 23 ஆண்டுகாலம் தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தது. 1971-1972ம் ஆண்டு தமிழக வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டபோது 30.08.1971 அன்றுமுதல் தமிழகத்தில் மதுவிலக்கு தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 29.11.2003 முதல் தமிழக அரசின் நிறுவனமான தமிழ்நாடு வாணிபக் கழகம்(டாஸ்மாக்) மூலம் தமிழகத்தில் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் நடத்தப்பட்டுவருகிறது. டாஸ்மாக் நிறுவனம் தொடங்கப்பட்ட 1983ம் ஆண்டுமுதல் இந்நிறுவனமே தமிழகத்தில் மதுபான மொத்த விற்பனை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுவிலக்கு&oldid=1778494" இருந்து மீள்விக்கப்பட்டது