பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தியாவில் பிரித்தானிய ஆட்சி
முடியாட்சி

 

 

1858–1947 [[இந்திய ஒன்றியம்|]]
 

 

கொடி சின்னம்
நாட்டுப்பண்
காட் சேவ் தி குயின் (கடவுள் அரசியை காப்பாற்றுவராக)
1909 ஆம் ஆண்டு இந்தியப் பேரரசு
தலைநகரம் கொல்கத்தா (1858–1912)
புது டில்லி (1912–1947)
மொழி(கள்) இந்துஸ்தானி, ஆங்கிலம், தமிழ் உட்பட மேலும்
அரசாங்கம் முடியாட்சி
இந்தியாவின் பேரரசர்/பேரரசி (1876–1947)
 -  1858–1901 விக்டோரியா
 -  1901–1910 ஏழாம் எட்வர்ட்
 -  1910–1936 ஐந்தாம் ஜோர்ஜ்
 -  1936 எட்டாம் எட்வர்ட்
 -  1936–1947 ஆறாம் ஜார்ஜ்
இந்திய வைசுராய்²
 -  1858–1862 விஸ்கவுன்ட் கானிங்க்
 -  1862–1863 எர்ல் எட்டாவது எல்ஜின்
 -  1864–1869 சர் ஜான் லாரென்ஸ்
 -  1869–1872 எர்ல் மாயோ
 -  1872–1876 நார்த்புரூக் பிரபு
வரலாறு
 -  அமைப்பு ஆகஸ்டு 2 1858
 -  14 ஆகஸ்டு 1947 ஆகஸ்டு 15 1947
பரப்பளவு
 -  1937 49,03,312 km² (18,93,179 sq mi)
 -  1947 42,26,734 km² (16,31,951 sq mi)
நாணயம் பிரித்தானிய இந்திய ரூபாய்
தற்போதைய பகுதிகள்  வங்காளதேசம்
 மியான்மர்
 இந்தியா
 பாக்கித்தான்
¹ Reigned as Empress of India from May 1, 1876, before that as Queen of the United Kingdom.
² Governor-General and Viceroy of India
Warning: Value specified for "continent" does not comply

பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு என்பது 1858 முதல் 1947 ஆம் ஆண்டு வரை இந்திய துணைக் கண்டத்தில் நிலவிவந்த பிரித்தானிய ஆட்சியைக் குறிக்கும். அச்சமயம் இந்தியா என பொதுவாக அழைக்கப்பட்டாலும் ஐக்கிய இராச்சியத்தால் [1] நேரடியாக ஆட்சி செய்யப்பட்ட இந்தியாவின் மாகாணங்கள் பிரித்தானிய முடிக்கு கீழ்பட்ட அரசர்களால் ஆட்சி செய்யப்பட்ட முடியாட்சிகள் என்பவற்றைக் கொண்டிருந்தது. 1876 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இது இந்தியப் பேரரசு என அழைக்கப்பட்டு அப்பெயரிலேயே கடவுச் சீட்டுகளும் வழங்கப்பட்டன.

ஆளும் முறை 1858 ஆண்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விக்டோரியாவின் ஆட்சியின் போது பிரித்தானிய முடிக்கு மாற்றப்பட்டதோடு தொடங்கியது. (1876 ஆம் ஆண்டு விக்டோரியா தன்னை இந்தியாவின் பேரரசியாக பிரகடனப்படுத்திக் கொண்டார்.) இவ்வாட்சி 1947 ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினை வரை நீடித்தது. மேலும் இது இந்தியா என்ற பெயரில் உறுப்பு நாடுகளுள் ஒன்றாக 1900, 1920, 1928, 1932 மற்றும் 1936 ஆண்டுகளில் கோடைகால ஒலிம்பிக்ஸிலும் 1945 இல் சான் பிரான்சிஸ்கோவில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராகவும் இணைந்தது.

இந்தியத் துணைக்கண்டத்தை கைப்பற்றுதல்[தொகு]

பக்சார் சண்டை, பிளாசி சண்டை, வாலிகொண்டா போர், கர்நாடகப் போர்கள், ஆங்கிலேய-மராட்டியப் போர்கள், ஆங்கிலேய-சீக்கியப் போர்கள், ஆங்கிலோ - ஆப்கான் போர்கள்[2] மற்றும் ஆங்கிலேய-பர்மியப் போர்கள் மூலம் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனியும், பிரித்தானிய இந்தியாவின் ஆளுநர்களும் இந்தியத் துணைக்கண்டத்தின் தற்கால ஆப்கானித்தான், பாக்கித்தான், இந்தியா, வங்காளதேசம் இலங்கை மற்றும் பர்மா பகுதிகளை பிரித்தானியப் பேரரசின் காலனி நாடுகளாக அடிமைப்படுத்தினர்.

இந்தியத் துணைக்கண்டத்தின் செழிப்பான 13 மாகாணங்களை பிரித்தானியப் பேரரசால் நியமிக்கப்பட்ட வைஸ்ராயின் நேரடி ஆட்சியிலும், நிலவருவாய் வசூலிக்க இயலாத வளமற்ற, மலைப்பாங்கான பகுதிகளை ஆட்சி செய்ய, துணைப்படைத் திட்டம் மூலம் 562 சுதேச சமஸ்தானங்களின் மன்னர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அவகாசியிலிக் கொள்கையின் படி, பிரித்தானியாவின் இந்திய அரசு, வாரிசு அற்ற பல சுதேச சமஸ்தானங்களை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.

முக்கிய மாகாணங்கள்[தொகு]

20 ஆம் நூற்றாண்டின் போது பிரித்தானிய இந்தியா ஒரு ஆளுநர் அல்லது துணைநிலை ஆளுநர் மூலம் நிர்வகிக்கப்படும் எட்டு மாகாணங்களைக் கொண்டிருந்தது. 1907 ஆண்டு கணக்கின்படி மக்கள் தொகை அடிப்படையில் பின்வரும் மாகாணங்களை கொண்டிருந்தது. அவைகள்:

(British) பிரித்தானியாவின் இந்திய மாகாணங்கள்
(தற்போதைய பகுதிகள்)
மொத்த பரப்பளவு சதுர கி.மீ (சதுர மைல்) 1901 ல் மக்கட்தொகை (மில்லியனில்) முதன்மை நிர்வாக அதிகாரி
வடகிழக்கு எல்லைப்புற முகமை
(அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் மற்றும் மணிப்பூர்)
130,000
(50,000)
6 முதன்மை ஆனையாளர்
வங்காள மாகாணம்
(வங்காள தேசம், மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட் மற்றும் ஒரிசா)
390,000
(150,000)
75 துணைநிலை ஆளுநர்
பம்பாய் மாகாணம்
(சிந்து, மகாராஷ்டிரா & கர்நாடகாவின் சில பகுதிகள்)
320,000
(120,000)
19 ஆளுநரின் நிர்வாககுழு
பர்மிய மாகாணம்
(பர்மா)
440,000
(170,000)
9 துணைநிலை ஆளுநர்
மத்திய மாகாணம்
(மத்தியபிரதேசம் & சத்தீஸ்கர்)
270,000
(100,000)
13 முதன்மை ஆனையாளர்
மெட்ராஸ் மாகாணம்
(தமிழ்நாடு ,ஆந்திர பிரதேசம், கேரளா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகள்)
370,000
(140,000)
38 ஆளுநரின் நிர்வாகக் குழு
பஞ்சாப் மாகாணம்
(பாக்கித்தானிய பஞ்சாப், இந்திய பஞ்சாப், வடமேற்கு எல்லைப்புற மாகாணம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், சண்டிகர் மற்றும் டெல்லி)
250,000
(97,000)
20 துணைநிலை ஆளுநர்
ஐக்கிய மாகாணம்
(உத்தரப்பிரதேசம் & உத்தராகண்ட்)
280,000
(110,000)
48 துணைநிலை ஆளுநர்

வங்கப் பிரிவினைக்கு பின் (1905–1911) அசாம் மற்றும் கிழக்கு வங்க பகுதிகளை இணைத்து ஒரு துணை ஆளுநரின் ஆட்சியின் கீழ் ஒரு புதிய மாகாணம் உருவாக்கப்பட்டது. 1912ல் கிழக்கு மற்றும் மேற்கு வங்காளப் பகுதிகள் இணைந்து, பீகார், ஜார்கண்ட் மற்றும் ஒரிசா பகுதிகள் கொண்ட வங்காள மாகாணமாக மாறியது.

சிறிய ஆட்சிப்பகுதிகள்[தொகு]

சிறிய ஆட்சிப்பகுதிகள்
(தற்போதைய பகுதிகள்)
மொத்த பரப்பளவு சதுர கி.மீ (சதுர மைல்) 1901 ல் மக்கட்தொகை (மில்லியனில்) முதன்மை நிர்வாக அதிகாரி
அஜ்மீர்-மேவார்
(ராஜஸ்தானின் ஒரு பகுதி)
7,000
(2,700)
477 முதன்மை ஆனையாளர்
அந்தமான் நிகோபார் தீவுகள்
(அந்தமான் நிகோபார் தீவுகள்)
78,000
(30,000)
25 முதன்மை ஆனையாளர்
பலுசிஸ்தான்
(பலுசிஸ்தான்)
120,000
(46,000)
308 முதன்மை ஆனையாளர்
குடகு
(குடகு மாவட்டம்)
4,100
(1,600)
181 முதன்மை ஆனையாளர்
வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-1955)
41,000
(16,000)
2,125 முதன்மை ஆனையாளர்

ஆட்சி நிர்வாகம்[தொகு]

இந்திய வைஸ்ராய்கள் 1858 முதல் 1947 முடிய[தொகு]

 1. கானிங் பிரபு - 1858 -1862 = அவகாசியிலிக் கொள்கையை ஒழித்தல்
 2. லாரன்ஸ் பிரபு - 1864 – 1869 = வங்காள மாகாணம், பம்பாய் மாகாணம் மற்றும் சென்னை மாகாணங்களில் உயர் நீதிமன்றங்கள் நிறுவுதல் மற்றும் பூடான் நாடு பிரித்தானிய இந்தியாவின் அசாம் பகுதிகளில் கைப்பற்றிருந்த பகுதிகளை பூட்டான் போர் மூலம் மீண்டும் இந்தியாவுடன் இணைத்தல்.
 3. மாயோ பிரபு - 1869 – 1872 = முதன்முதலாக இந்திய நடுவண் அரசுக்கும், மாகாண அரசுகளுக்கிடையே நிதியை பகிர்ந்தளிக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். முதன்முதலாக 1872-இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்திய சுதேச சமஸ்தான மன்னர்களின் வாரிசுகள் படிக்க மாயோ கல்லூரி நிறுவனப்பட்டது. இவர் அந்தமான் சிற்றறைச் சிறையை பார்க்கச் சென்ற போது சேர் அலி என்ற கைதியால் கொலை செய்யப்பட்டார்.
 4. நார்த்புரூக் பிரபு - 1872 – 1876 = பதிவுத் திருமணம் மற்றும் ஆரிய சமாஜம் நடத்தும் திருமண முறைகளை அறிமுகப்படுத்தினார். 1872-இல் பன்னாட்டு திருமணச் சட்டத்தை அறிமுகப்படுத்தினார். மேலும் சாதிக் கலப்புத் திருமணங்களை சட்டப்படி அனுமதித்தார்.
 5. லிட்டன் பிரபு - 1876 – 1880 = 1878-இல் பிரதேச மொழி பத்திரிக்கைச் சட்டம் மற்றும் இந்தியர்கள் உத்தரவின்றி படைக்கலன்களை ஏந்த அனுமதி மறுக்கும் படைக்கலச் சட்டம் இயற்றப்பட்டது. அலிகாரில் முகமதிய-ஆங்கில கீழை நாட்டு கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டது. இதுவே இன்றைய அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆனது. பஞ்சாத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கத் தவறினார். அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வு வயது 21 வயதிலிருந்து 19-ஆக குறைத்தார். விக்டோரியா மகாராணி இந்தியாவிற்கும் பேர்ரரசியாக அறிவிக்கப்பட்டார்.
 6. ரிப்பன் பிரபு - 1880 – 1884 = இந்திய நிர்வாகத்தில் இந்திய மக்களும் பங்குபெற வேண்டுமென்ற தாராள மனப்பான்மை கொண்டவர். பஞ்சாப் பல்கலைக் கழகம் (1884) மற்றும் அலகாபாத் பல்கலைக் கழகம் (1887) நிறுவினார். தொழிற்சாலைச் சட்டம் (1881) கொண்டு வந்தார். வட்டார மொழிகள் பத்திரிக்கை சட்டம் நீக்கப்படுதல் (1881). இந்தியாவில் முறையான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1881-இல் நடைபெற்றது. கி.பி.1882-இல் வில்லியம் வில்சன் ஹன்டர்சன்[3] மூலம் கல்விக்குழு அமைத்தார். 1829 இராஜாராம் மோகன் ராயுடன் இணைந்து உடன் கட்டை ஏறும் முறையை ஒழிக்க பாடுபட்டார். கி.பி.1883-ல் ஆங்கிலேயக் குற்றவாளிகளை இந்திய நீதிபதிகள் விசாரணை செய்யும் இல்பர்ட் மசோதாவைக் கொண்டு வந்தார். கல்வி, குடிநீர், சுகாதாரம், மருத்துவம் போன்றவற்றை வலுப்படுத்தும் வகையில் ஊராட்சி, நகராட்சி, மாவட்ட ஊராட்சி அமைப்புகள் ஏற்படுத்தினார்.
 7. டப்பரின் பிரபு - 1884 – 1888 = மூன்றாம் ஆங்கிலேய-பர்மியப் போர் (1885-1886) - 1885-இல் இந்திய தேசிய காங்கிரசு கட்சி நிறுவப்பட்டது.
 8. லான்ஸ்டவுன் பிரபு - 1888 – 1894 = இந்திய கவுன்சில்கள் சட்டம், 1892 இயற்றப்பட்டது.
 9. எல்ஜின் பிரபு - 1894 – 1899 = இராமகிருஷ்ணா & தாமோதர் எனும் சகோதரர்களால் முதன் முதலில் ஒரு பிரித்தானிய அதிகாரி அரசியல் ரீதியாக கொலை செய்யட்டார்.
 10. கர்சன் பிரபு - 1899 – 1905 = இந்தியப் பல்கலைக் கழகங்கள் சட்டம் இயற்றப்பட்டது. வங்காளப் பிரிவினை மேற்கொள்ளப்பட்டது.
 11. மிண்டோ பிரபு -1905 – 1910 = மிண்டோ மார்லே சீர்திருத்தங்கள், அன்னி பெசண்ட் & பால கங்காதர திலகர் இணைந்து ஹோம் ரூல் இயக்கம் (Home rule movement) [4] தொடங்கினர்.
 12. செம்ஸ்போர்டு பிரபு - 1916 – 1921 = 1919ல் ரௌலட் சட்டம் மற்றும் மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் கொண்டு வந்தார்
 13. ரீடிங் பிரபு - 1921 – 1926 = சுயாட்சிக் கட்சி தொடங்கப்பட்டது. 1922-இல் ஒத்துழையாமை இயக்கம் தொடர்பாக சௌரி-சௌரா நிகழ்வில் 22 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். மகாத்மா காந்தி இச்சம்வத்தை கண்டித்தார்.
 14. இர்வின் பிரபு - 1926 – 1931 = ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது. தண்டி யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. முதல் வட்ட மேசை மாநாடு துவங்கியது.
 15. வெலிங்டன் பிரபு - 1931 – 1936 = காந்திக்கும், அம்பேத்காருக்கும் இடையே பூனா ஒப்பந்தம் ஏற்பட்டது. சமூக ரீதியாக இந்திய சட்டமன்றங்களில் இட ஒதுக்கீடு துவங்கியது.
 16. லிங்லித்தோ பிரபு - 1936 – 1943 = வெள்ளையனே வெளியேறு இயக்கம், வங்காளப் பஞ்சம், 1943,கிரிப்சின் தூதுக்குழு
 17. வேவல் பிரபு - 1944 – 1947 =நவகாளிப் படுகொலைகள் & நேரடி நடவடிக்கை நாள், வேவல் திட்டம், சிம்லா மாநாடு
 18. மவுண்ட்பேட்டன் பிரபு - 1947 = பிரித்தானிய இந்தியாவின் இறுதி தலைமை ஆளுநர் மற்றும் விடுதலை இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. First the United Kingdom of Great Britain and Ireland then, after 1927, the United Kingdom of Great Britain and Northern Ireland
 2. A Selection of Historical Maps of Afghanistan
 3. William Wilson Hunter
 4. Indian Home Rule movement