உள்ளடக்கத்துக்குச் செல்

சீக்கியப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீக்கியப் பேரரசு
Sarkar-e-Khalsa
ਸਿੱਖ ਸਲਤਨਤ
1799–1849
நாட்டுப்பண்: தேக் டெக் ஃபதே
இராஜா ரஞ்சித் சிங் காலத்திய சீக்கியப் பேரரசு
இராஜா ரஞ்சித் சிங் காலத்திய சீக்கியப் பேரரசு
தலைநகரம்இலாகூர்
பேசப்படும் மொழிகள்
சமயம்
சீக்கியம், இந்து, இசுலாம், பௌத்தம்
அரசாங்கம்கூட்டு முடியாட்சி
மகாராஜா 
• 1801–1839
ரஞ்சித் சிங்
• 1839
கரக் சிங்
• 1839–1840
நௌ நிகால் சிங்
• 1840–1841
சந்த் கௌர்
• 1841–1843
சேர் சிங்
• 1843–1849
துலீப் சிங்
வாசிர் 
• 1799–1818
ஜமேதார் கௌஷல் சிங்[2]
• 1818–1843
தியான் சிங் டோக்ரா
• 1843–1844
ஹிரா சிங் டோக்ரா
• 1844–1845
ஹவஹர் சிங் ஔலக்
வரலாற்று சகாப்தம்நவீன வரலாற்று காலத்திற்கு முன்
• மகாராஜா ரஞ்சித் சிங், லாகூரை கைப்பற்றியது முதல்
7 சூலை 1799
29 மார்சு 1849
பரப்பு
[convert: invalid number]
மக்கள் தொகை
• 1849 மதிப்பிடு
3 million
நாணயம்நானா சாகி
முந்தையது
பின்னையது
துராணிப் பேரரசு
மராட்டியப் பேரரசு
சீக்கிய சிற்றரசுகள்
இந்தியாவில் கம்பெனி ஆட்சி
தற்போதைய பகுதிகள் ஆப்கானித்தான்
 சீனா
 இந்தியா
 பாக்கித்தான்

சீக்கியப் பேரரசு (Sikh Empire) இந்தியாவில் கம்பெனி ஆட்சியின் போது, இந்தியத் துணை கண்டத்தில், மகாராஜா ரஞ்சித் சிங் 1799ஆம் ஆண்டில் லாகூரை வெற்றி கொண்டதின் தொடர்ச்சியாக நிர்மாணித்த சமயச் சார்பற்ற பேரரசாகும்.[3] சிதறிக் கிடந்த சீக்கிய சிற்றரசர்கள் ராஜா ரஞ்சித் சிங் தலைமையில் சீக்கியப் இப்பேரரசு 1799இல் துவங்கி, 1849 முடிய இயங்கியது. சீக்கியப் பேரரசு, தற்கால இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் பகுதிகளைக் கொண்டது. இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியப் போருக்குப் பின்னர் சீக்கியப் பேரரசு வீழ்ச்சி அடைந்தது.

அமைப்பு

[தொகு]

துராணிப் பேரரசின் அகமது ஷா துராணியால் அமிருதசரஸ் பல முறை தாக்கப்பட்டதால், சீக்கிய சமய அமைப்பினர் கல்ஷா எனும் படைப்பிரிவை உருவாக்கி, சீக்கிய குறுநில மன்னர்களை ஒன்றிணைத்து, ரஞ்சித் சிங் தலைமையில் 1799ஆம் ஆண்டில் சிறு அளவில் சீக்கிய அரசு உருவாக்கபட்டது.[4][5]

சீக்கிய பேரரசின் நிலப்பரப்புகள்

[தொகு]
அலிவாலில் நடைபெற்ற முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர், ஆண்டு 1846
  1. இந்தியாவின் தற்கால பஞ்சாப் மாநிலம், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மற்றும் இமாசலப் பிரதேசத்தின் சில பகுதிகள்
  2. பாகிஸ்தானின் தற்கால பஞ்சாப் மாநிலம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்த ஆசாத் காஷ்மீர் பகுதிகள்.
  3. ஆப்கானிஸ்தானின் காந்தாரம் போன்ற தென் பகுதிகள்

சீக்கிய பேரரசின் வீழ்ச்சி

[தொகு]

1839இல் ரஞ்சித் சிங் மறைவுக்குப் பின்னர் சீக்கியப் பேரரசு பலமிழந்தது. இதனை பயன்படுத்தி, இந்தியாவில் கம்பெனி ஆட்சியினர் சீக்கியர்களுக்கு எதிராக 1845ஆம் ஆண்டில் நடந்த முதலாம் ஆங்கிலேய-சீக்கியப் போரில், சீக்கியர்கள் தோற்றனர்.

மீண்டும் 1849ஆம் ஆண்டில் நடந்த இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியப் போரில் தோல்வியுற்ற சீக்கியப் பேரரசு கலைக்கப்பட்டது. சீக்கிய பேரரசின் பகுதிகள், ஆங்கிலேயர்க்கு ஆண்டு தோறும் கப்பம் செலுத்தும் சீக்கிய சிற்றரசர்கள் கையில் ஆங்கிலேயர்கள் ஒப்படைத்தனர்.

முக்கிய நிகழ்வுகள்

[தொகு]
  • 1699 - குரு கோவிந்த சிங், கல்சா எனும் சீக்கிய போர்ப்படையை நிறுவுதல்
  • 1710–1716, பண்டா சிங் மொகலாயர்களை வென்று கல்ஷா அமைப்பின் ஆட்சியை நிறுவுதல்
  • 1716–1738, 20 ஆண்டுகள் கல்ஷா அமைப்பினர் மொகலாயரிடம் ஆட்சியை இழத்தல்
  • 1733–1735, மொகலாயர் வழங்கிய கூட்டாச்சி அரசை கல்ஷா அமைப்பினர் ஏற்றல்
  • 1748–1767, துராணிப் பேரரசின் அகமது ஷா அப்தாலியின் ஆக்கிரமிப்பு
  • 1763–1774, சரத் சிங் சுகெர்சாகியா, குஜ்ஜரன் வாலாவில் தன்னாட்சி சீக்கிய அரசை நிறுவுதல்
  • 1764–1783, தன்னாட்சி பெற்ற மன்னர்களான பாபா பஹேல் சிங், கரோர் சிங்கியா ஆகியோர் தில்லியை கைப்பற்றி மொகலாயர் மேல் வரி விதித்தல்]
  • 1773, அமகது ஷா துராணி இறப்பு; அவர் மகன் தைமூர் ஷா துராணி பஞ்சாப் மீது தாக்குதல் தொடுத்தல்
  • 1774–1790, சுகேர்சாகிய அரசுக்கு மகா சிங் மன்னராதல்
  • 1790–1801, ரஞ்சித் சிங் சுகேர்சாகிய அரசுக்கு மன்னராதல்
  • 1801 (12 ஏப்ரல்), ரஞ்சித் சிங் மகாராஜாவாக முடிசூட்டுதல்
  • 12 ஏப்ரல் 1801 முதல் – 27 சூன் 1839 முடிய மகாராஜா ரஞ்சித் சிங் ஆட்சி
    • 13 சூலை 1813, அட்டோக் போரில் துராணிப் பேரரசை சீக்கியர் வெற்றி கொள்ளுதல்
    • மார்ச் – 2 சூன் 1818, முல்தானில் இரண்டாம் ஆப்கான் - சீக்கியப் போர்
    • 3 சூலை1819, சோப்பியான் போர்
    • 14 மார்ச் 1823, நௌஷெரா போர்
    • 30 ஏப்ரல் 1837, ஜாம்ருட் போரில் ஆப்கானியர்களை சீக்கியர்கள் வெல்லுதல்
  • 27 சூன் 1839 – 5 நவம்பர் 1840, மகாராஜா கரக் சிங்கின் ஆட்சி காலம்
  • 5 நவம்பர் 1840 – 18 சனவரி 1841, சந்த் கௌர் ஆட்சி
  • 18 சனவரி 1841 – 15 செப்டம்பர் 1843, மகாராஜா சேர் சிங்கின் ஆட்சி காலம்
  • மே 1841 – ஆகஸ்டு 1842, சீனா-சீக்கியப் போர்
  • 15 செப்டம்பர் 1843 – 31 மார்ச் 1849, மகாராஜா துலீப் சிங் ஆட்சி
  • 1845–1846, முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர்
  • 1848–1849, இரண்டாம் ஆங்கிலேய–சீக்கியர் போர் முடிவில் சீக்கியப் பேரரசு பகுதிகள் பிரித்தானியா இந்தியாவுடன் இணைந்த்தல்
முன்னர் சீக்கியப் பேரரசு
1799–1849
பின்னர்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-09-15. பார்க்கப்பட்ட நாள் 2015-10-11.
  2. Grewal, J.S. (1990). The Sikhs of the Punjab. Cambridge University Press. p. 107. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0 521 63764 3. பார்க்கப்பட்ட நாள் 15 April 2014.
  3. "Ranjit Singh: A Secular Sikh Sovereign by K.S. Duggal. ''(Date:1989. [[பன்னாட்டுத் தரப்புத்தக எண்]] [[Special:BookSources/8170172446|8170172446]]'')". Exoticindiaart.com. 3 September 2015. பார்க்கப்பட்ட நாள் 2009-08-09. {{cite web}}: URL–wikilink conflict (help)
  4.   "Ranjit Singh". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 22. (1911). Cambridge University Press. 
  5. "MAHARAJAH RANJIT SINGH … - Online Information article about MAHARAJA RANJIT SINGH". Encyclopedia.jrank.org. Archived from the original on 10 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 9 August 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

ஆதார நூற்பட்டியல்

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீக்கியப்_பேரரசு&oldid=4143001" இலிருந்து மீள்விக்கப்பட்டது