பார்சிவா வம்சம்
தெற்காசிய வரலாற்றுக் காலக்கோடு |
---|
பார்சிவா வம்சம் (Bharshiva dynasty) (ஆட்சிக் காலம்: கி. பி 170–350) குப்த பேரரசுக்கு முந்திய வலுவான அரசக் குலமாகும். வட இந்தியாவின் விதிசா நாகர்கள், மதுராவில் நிலைகொண்டு, தங்களின் ஆட்சியை விரோசனன் தலைமையில் விரிவுப் படுத்தினார். வரலாற்று ஆய்வாளர் கே.பி. ஜெஸ்வாலின் கூற்றுப்படி, மதுராவை மையமாகக் கொண்டு, பத்மாவதி கண்டிப்பூர், விதிஷா நாடுகளை பார்சிவா குலத்தினர் ஆண்டனர். [1]
மதுராவின் நாகர்கள்
[தொகு]குசானப் பேரரசு வீழ்ச்சியுற்ற காலத்தில், விரோசனன் தலைமையிலான மதுராவின் நாகர்கள், பார்சிவா வம்சத்தைத் தோற்றுவித்து தனித்து பார்சிவா பேரரசை ஆண்டனர். மால்வா முதல் கிழக்கே பஞ்சாப் வரை பார்சிவா பேரரசை விரிவுப்படுத்தினர். பார்சிவா பேரரசு, மதுரா, கண்டிபுரி மற்றும் பத்மாவதி எனும் மூன்று தலைநகரங்கள் கொண்டிருந்தனர்.[2] விரோசன நாகருக்குப் பின்பு, பத்மாவதி நாகர்கள் முழு பார்சிவா பேரரசை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். குறைந்த ஆண்டுகளே பத்மாவதி நாகர்கள் பார்சிவா பேரரசை ஆண்டனர்.[3]