உத்பால வம்சம்
Jump to navigation
Jump to search
உத்பால வம்சம் | |||||
| |||||
தலைநகரம் | அவந்திபோரா | ||||
சமயம் | இந்து சமயம் பௌத்தம் | ||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||
பேரரசர் | |||||
- | கி பி 855 – 883 | அவந்திவர்மன் | |||
- | கி பி 885 – 902 | சங்கர வர்மன் | |||
வரலாற்றுக் காலம் | மத்தியகால வரலாறு | ||||
- | உருவாக்கம் | கி பி 855 | |||
- | குலைவு | கி பி 1003 | |||
தற்போதைய பகுதிகள் | ![]() ![]() ![]() |
உத்பால வம்சம் (Utpala dynasty) இந்தியாவின் காஷ்மீர் சமவெளியை கி பி 885 முதல் 1003 முடிய ஆண்ட இந்து சமயத்தினர் ஆவர். கி பி 855இல் கார்கோடப் பேரரசை வீழ்த்தி, அவந்திவர்மன் காஷ்மீரில் உத்பால வம்ச அரசை நிறுவினார்.[1][2] உத்பால பேரரசில் தற்கால காஷ்மீர் மற்றும் ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தான் பகுதிகள் அடங்கியிருந்தன. உத்பால வம்ச மன்னர்களால் காஷ்மீரில் அவந்திபோரா, சோப்பூர் நகரங்கள் நிறுவப்பட்டன. மேலும், விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோவில்களும் புத்த விகாரகங்களும் கட்டப்பட்டது. [3] அவந்திபூரில் முறையே சிவன் மற்றும் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அவந்தீசுவர் மற்றும் அவந்திசுவாமி கோயில்கள் குறிப்பிடத்தக்கவை.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Sen, Sailendra Nath (1999). Ancient Indian History and Civilization. New Age International. பக். 295. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8122-411-98-0.
- ↑ Raina, Mohini Qasba (2013). Kashur The Kashmiri Speaking People: Analytical Perspective. Partridge Publishing Singapore. பக். 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1482-899-47-4.
- ↑ 3.0 3.1 Warikoo, K (2009). Cultural heritage of Jammu and Kashmir. Pentagon Press. பக். 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8182-743-76-2.