கார்கோடப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரரசர் லலிதாத்தியன் ஆட்சிக் காலத்தில் கார்கோடகப் பேரரசின் வரைபடம், எட்டாம் நூற்றாண்டு
கார்கோடப் பேரரசு
கி பி 625–885
தலைநகரம் பரிஹாஸ்பூர், பின்னர் ஸ்ரீநகர்
சமயம் இந்து சமயம்
பௌத்தம்
அரசாங்கம் முடியாட்சி
சாம்ராட் துர்லபவர்தனன்
துர்லபஹாகன்
 -  கி பி 724 –760 லலிதாத்தியன்
வரலாற்றுக் காலம் மத்தியகால இந்தியா
 -  உருவாக்கம் கி பி 625
 -  குலைவு 885
தற்போதைய பகுதிகள்  ஆப்கானித்தான்
 இந்தியா
 பாக்கித்தான்
Warning: Value not specified for "common_name"
லலிதாத்தியன் கட்டிய மார்த்தாண்ட சூரியக் கோயில், அனந்தநாக்
1870-1873-இல் மறுசீரமைக்கப்பட்ட மார்த்தாண்ட சூரியக் கோயில், அனந்தநாக்

கார்கோடப் பேரரசு (Karkota Empire) (ஆட்சிக் காலம்: கி பி 625 - 885 ) இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் 625 முதல் 885 முடிய இருந்த அரசாகும்.[1]

கார்கோட அரசை கி பி 625-இல் நிறுவியவர் மன்னர் துர்லபவர்தனர் ஆவார். [2] கார்கோடப் பேரரசு தற்கால இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் பகுதிகளைக் கொண்டிருந்தது. இராஜதரங்கிணி மற்றும் லலிதாத்திய முக்தபீடம் ஆகிய சமஸ்கிருத நூல்களை இயற்றிய கல்ஹானரின் கூற்றுப்படி, கி பி 740-இல் கார்கோட மன்னர்கள் கன்னோசி மன்னர் யசோவர்மனை வீழ்த்தி மற்றும் திபெத்தியர்களை வென்றார்கள் என அறியப்படுகிறது.[3][4]

இந்து சமயத்தவராக இருந்த கார்கோடகப் பேரரசர்கள் தலைநகர் பரிஹாஸ்பூரில் இந்துக் கோயில்களைக் கட்டினர்.[5][6]காஷ்மீர் சமவெளியின் அனந்தநாக் நகரத்தில் சூரியக் கடவுளான மார்த்தாண்டனுக்கு ஒரு கோயில் எழுப்பப்பட்டது. [7][8] மேலும் தமது பேரரசில் பௌத்த சமயத்தின் தூபிகள், விகாரைகள் எழுப்ப அனுமதித்தனர்.

வீழ்ச்சி[தொகு]

கி பி 885-இல் அவந்தி நாட்டு உத்பால வம்சத்தின் மன்னர் அவந்திவர்மன், கார்கோடப் பேரரசை வீழ்த்தினார்.[9]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்கோடப்_பேரரசு&oldid=3152179" இருந்து மீள்விக்கப்பட்டது